Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மத்திய,மாநில அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்” ஜவுளி உற்பத்தியாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம்…. வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள்….!!!!

ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டையில் மட்டும்  ஏராளமான  ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் சேர்ந்த 2 லட்சம்  ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  வேலை இழந்து உள்ளனர். இது குறித்து வட்டார விசைத்தறியாளர்கள் கூறியதாவது. தற்போது மிகவும் ஆபத்தான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. தவறாக பேசிய அக்கம்பக்கத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் பெயிண்டரான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வினோத்குமாருக்கும், அவரது நண்பரின் மனைவியான 33 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் வினோத்குமார் அங்கு சென்று அவரது மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேரூர் பட்டீசுவரர் கோவில் “பேட்டரி கார் வசதி” ….தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு…!!!

மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைப்பதற்கு ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை மாவட்டம், பேரூரில் பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கோவிலுக்கு வரும் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரூ 5.25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நன்கொடை வழங்கிய பேட்டரி கார் சேவையை ஆரம்பித்து வைத்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தோஷம் கழிக்க திருமணம்”…. ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி காவல் ஆய்வாளர்…. கோவையில் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்துகொண்டு ஆபாச படம் எடுத்து தன்னை மிரட்டி வருவதாக உதவி ஆய்வாளர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ராதாபுரம் அருகே உறுமங்களம்  பகுதியை சேர்ந்த இளவரசி என்பவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை தயாரித்தார். அந்த மனுவில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆறுமுக நாயனாருக்கும் கடந்த ஜூன் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து நாசமானது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகரகளந்தை பிரிவு அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தென்னை நார் முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபரேஷன் கோவை” 1 டன் குட்கா பறிமுதல்…. அதிரடியில் போலீசார்…!!!!

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் ராயர் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதை தடுப்பதற்காக காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயண உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் தடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில்” கிணத்துக்கடவு, போத்தனூரில் நின்று செல்ல…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!!

மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு வாராந்திர கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகின்றது. இந்த ரயில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ யாருடன் பேசினாய்….? மாணவியை தாக்கிய காதலன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கவின்குமார்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேற்கூரை வழியாக ஒழுகும் மழைநீர்…. சிரமப்படும் மாணவ-மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தாலுகாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அரசு பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பேருந்தின் மேற்கூரை வழியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் – ஊட்டி… “கோடைகால சிறப்பு மலை ரயில்”… தென்னக ரயில்வே அறிவிப்பு…!!!

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். ஊட்டியிலிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பி மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து அடையும். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆனந்தமாக மலைப்பகுதியில் இருக்கின்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றார்கள். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காளான் பண்ணை அமைக்க…. ரூ 1 லட்சம் மானியம்… வட்டார தோட்டக்கலைத்துறை தகவல்…!!!!

தோட்டக்கலைத்துறை சார்பாக காளான் வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம், அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள், பெண்கள், சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட தோட்டக்கலைத் துறை சார்பாக சிறிய அளவில் காளான் வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த காளான் பண்ணை 600 சதுர அடி பரப்பளவில் அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது. குத்தகை நிலம், சொந்த இடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பொருநை கண்காட்சி, ஓவிய கண்காட்சி”… தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

பொருநை கண்காட்சி, ஓவியக்கண்காட்சி வ. உ. சி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் பொருநை கண்காட்சி, ஓவிய கண்காட்சிதொடக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தங்கம்தென்னரசு, தா.மோ. அன்பரசன்,மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பெங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கலெக்டர் சமீரன், ஆ.ராசா எம்.பி., செய்தி மக்கள் தொடர்புத்துறை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில்….நீட் தேர்வு பயத்தால் பெண் டாக்டர் தற்கொலை…. ஆர்.டி.ஓ விசாரணை…!!!

நீட் தேர்வு பயத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில் வசித்து வருபவர் அபிஷேக்(30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 27 வயதுடைய ராசி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020 -ஆம் வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். மேலும் அவர் உயர் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராவதற்கு மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…!!!!

காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற ஒரு வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் விளாங்குறிச்சி சார்ந்த என்ஜினீயர் பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் காதலித்து வந்த நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மதுக்கரை மார்க்கெட் பகுதி கடை ஒன்றில் திடீர் தீ விபத்து”… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!!

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாளையம்பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் மதுக்கரை மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய போது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயமுத்தூரில் நாளை மின்தடை…. இதுல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க…? மின்சார வாரியம் அறிவிப்பு…!!!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் நாளை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை முதல் மதியம் வரையிலும், மாலையிலும் மின்தடை ஏற்பட இருக்கின்றது.இந்நிலையில் மின்தடை ஏற்பட இருக்கின்ற  பகுதிகள் பற்றிய தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டு இருக்கின்றது. பொள்ளாச்சி துணை மின் நிலையம்: சமத்தூர் மற்றும் கோமங்கலம்புத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மே 19 மாதாந்திர பணி நடக்கவுள்ளதால்அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 2 பேர்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்கையன்புதூரில் சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி பார்க் பகுதியில் குடிநீர் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சிங்கையின் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஸ்டாலின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது…. அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் அகிலன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மதன்குமார்(27) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் மதன் குமாரின் மனைவி கோயம்புத்தூர் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். இதனால் வாரத்திற்கு ஒருமுறை மதன்குமார் தனது மனைவியை பார்த்துவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கி வைத்த பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.என்.புதூர் நேதாஜி வீதியில் செல்வகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(14) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்து கொண்டிருந்த தாரணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் தம்பதியினர் வேலைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் போல நடித்து… லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறிப்பு… 3 பேர் கைது…!!!

போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலில் வசித்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு சோலார் பேனல் ஏற்றுக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரம் லாரியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராமில் பேசிய சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

காணாமல் போன சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த  சிறுமிக்கு பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர் . ஆனால் சிறுமி படிக்காமல்   இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் பேசி கொண்டு   இருந்துள்ளார். இதனையடுத்து  பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த சிறுமி செல்போனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவை – டெல்லி சரக்கு ரயில் சேவை” மீண்டும் இயக்கம்… தொழில்துறையினர் வரவேற்பு…!!!

கோவை – டெல்லி சரக்கு ரயில் சேவை மீண்டும் இயங்கிதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், வடக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2020 ஆம் வருடம் முதல் சரக்கு விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்துள்ளது. இதில் மருந்துகள், காய்கறி, பழங்கள், துணிகள், முகக்கவசங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக இந்த ரயில் சேவை நிறுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் பாதை, ரயில்வே கேட் பராமரிப்பு பணி… வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அனுமதி… ரயில்வே நிர்வாகம் தகவல்…!!!

மீனாட்சிபுரம் ரயில் பாதை, ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்கின்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி – பாலக்காடு வழிதடத்தில்  மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ரயில் பாதை, ரயில்வே கேட்டுகளில் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. அதனால் பொள்ளாச்சி அடுத்துள்ள அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை செல்லும் சாலையில் சுப்பே கவுண்டன்புதூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் நாளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதன்முறையாக… “வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி”… புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்…!!!

தமிழகத்தில் முதன்முறையாக வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்தார். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை உட்பட நிறைய வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வால்பாறை அருகில் மானாம்பள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு ஒரு புலிக்குட்டி உடல்முழுவதும் முள்ளம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

சூறாவளிக்காற்றில் வீடுகள் மீது மரம் விழுந்ததால் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை பல இடங்களில் மழை பெய்ததால் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பன்னிமடை செல்வவிநாயகர் நகர் பகுதியில் இருக்கும் புளியமரம் சூறாவளி காற்றில் சாய்ந்து அங்கிருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரன், விமலா, ரங்கம்மாள் ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்து… 14 பவுன் நகை திருடிய பெண் கைது…!!!

வீட்டிற்குள் நுழைந்து 14 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் நெகமம் காட்டம்பட்டியில் வசித்து வருபவர் கிரி கதிரவேல்(54). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து துக்க நிகழ்ச்சிக்கு போயிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரி கதிர்வேல் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் குழாய் உடைப்பை சரி செய்ய கோரி… செடியை நட்டு வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன போராட்டம்…!!!

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்ற நிலையில், சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மதுரை, பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுதான். மேலும் கேரளா, கோவை செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

#JUSTIN: கோவையில் அரசுப்பேருந்துகள் திடீர் நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே திடீரென்று முந்திச்செல்வது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை முற்றியதால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். முந்திச்செய்வது யஹோடர்பாக  ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. திடீரென பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தினேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் காரை சாலை ஓரமாக நிறுத்தினார். அதன் பிறகு ஐந்து பேரும் வேகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குறைதீர் கூட்டத்தில்… கழிப்பிடம் கட்ட கோரி… பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு…!!!

பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செடிமுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது, செடி முத்தூர் காலனியில் 70 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த காலனியில் பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடம் என்று எதும்  இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாதிப்பெயரை சொல்லி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி… பொதுமக்கள் சப் கலெக்டரிடம் மனு…!!!

சாதி பெயரை சொல்லி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நல்லூத்துக்குளி சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொடுத்த மனுவில் கூறியதாவது, நல்லூத்துக்குளி மேற்கு காலனியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் படித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

11 கடைகளில்… 16 1/2 கிலோ ஷவர்மா பறிமுதல்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயார் செய்யப்பட்ட 16 1/2 கிலோ ஷவர்மாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட உதவி கமிஷனர்…. தர மறுத்த நபர்…. கையும் களவுமாக மடக்கிய போலீஸ்….!!

லஞ்சம் வாங்கிய உதவி கமிஷனர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் கடந்த 2008-ம் ஆண்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு குணசேகரன் திருப்பூரில் உள்ள நிறுவனத்தை மூடினார். இந்நிலையில் குணசேகரன் நிறுவனத்திற்கான கடந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீட்டின் பின்புறம் நின்ற தொழிலாளி” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமயனூர் ஓம்சக்தி நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சோமயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த ரங்கராஜை   திடீரென மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய  ரங்கராஜை  குடும்பத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரங்கராஜை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேவி ஸ்ரீ பூமாரியம்மன் கோவிலில்… “கண் திறந்த அம்மன் சிலை” ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்… பரபரப்பு…!!!

தேவி ஸ்ரீ பூமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்சமயம் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த அம்மன் சிலையை அங்கு உள்ள ஒரு வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த அம்மன் சிலைக்கு வழக்கம் போல் பூஜைகள் நடந்தது. அப்போது அம்மன் சிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வனத்தை அழகிய மின்மினிப்பூச்சிகள்”… ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…. எங்கு தெரியுமா…?

மின்மினி பூச்சிகளை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே  டாப்சிலிப்  என்ற வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் விலங்குகள் மட்டும் இல்லாமல் மின்மினி பூச்சிகளும் அதிகமான அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆனைக்குட்டி சோலை என்ற இடத்தில் இரவு நேரங்களில் மின்மினிப்பூச்சிகள் அழகாய் மின்னுகிறது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் இங்கு  கூட்டம் அலைமோதுகிறது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” 3 நாட்களுக்கு முன் இருந்த யானை” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இறந்து கிடந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி, பொன்னூர், மேல்முடி உள்ளிட்ட மலை பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் மற்றும் யானைகள் வசித்து வருகிறது . இந்த வனவிலங்குகள் தற்போது கோடை காலம் என்பதால் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள்  நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில்  பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேக் வாங்க சென்ற வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் கூலித் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணிடம் ராஜ்குமார் பிறந்தநாள் கேக் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அந்த இளம்பெண் கேக் இருக்கும் இடத்திற்கு ராஜ்குமாரை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டு ராஜ்குமார் திடீரென […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம்… கடனை அடைக்க நகை திருட்டு… கைதான காதல் ஜோடிகள் பரபரப்பு வாக்குமூலம்…!!!

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக காதல் ஜோடிகள் வாக்குமூலம் கொடுத்தனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் காளியம்மாள்(65). இவர் கடந்த மாதம் 28-ம் தேதி அன்று தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த  5 1/2 பவுன் நகையை பறித்து விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் பொருட்களை விற்றால்… “ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும்”… கலெக்டர் எச்சரிக்கை…!!!

ரேஷன் கடையில் வாங்கும் பொருட்கள் விற்கபட்டால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் அத்தியவசிய பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் செல்கிறதா என்பதை உறுதி செய்யும் பொருட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை சரிபார்ப்பு பயோமெட்ரிக் மூலம் விவரங்கள் சரி பார்த்து பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது கடந்த 2020 -ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் தனது நண்பர்களுடன் பட்டணத்தில் இருக்கும் கல்குவாரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்ததும் சிறுவர்கள் சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது” தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரி..!!!

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் போக்குவரத்து துறை மேலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் பேசியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்துகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு போன் செய்து… வெடிகுண்டு வைத்துவிட்டேன்… மிரட்டிய நபர் கைது..!!!

தனியார் ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பூசாரிபாளையம் நாயக்கர்தோட்டத்தில் வசித்து வருபவர் பெயிண்டர் மதிஒளி(41). இவருடைய மனைவி சரஸ்வதி(40) சிங்காநல்லூரில் உள்ள நவீன் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் மதி ஒளிக்கும், அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வந்துள்ளது. சரஸ்வதி தன்னுடன் சண்டை போடுவதற்கு நவீன் ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியர்கள் தான் காரணம் என்று மதிஒளி கருதி அந்த மருத்துவமனையில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கைத்தறி நெசவு பயிற்சி…குடியரசு துணைத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி,உருவங்களை பரிசாக அனுப்பிய பெண்கள்…!!!

ஜமீன் ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி 45 நாட்கள் நடத்தப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் ஜமீன்ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மூலம் கைத்தறி தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முடிந்து சான்றிதழ் பெறுவதற்கு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேசியதாவது, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயதொழில் ஒரு முக்கியமானதாக இருக்கிறது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் தங்க நகை பறிப்பு… 3 வாலிபர் கைது…!!!

பெண் மருத்துவரிடம் நகையை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை காந்திநகரில் வசித்து வருபவர் ராம் தீபிகா(36). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 24 -ஆம் தேதி அன்று மதியம் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் 3 வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது திடீரென்று அவர் அணிந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தடை செய்யப்பட்ட சிகெரெட் பாக்கெட்டுகள்” 7 கடைகளுக்கு அபராதம்…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி…!!

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிணத்துக்கடவு, கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை பறிமுதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குப்பையை சாலையில் வீசிய கடைக்காரர்” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட நகராட்சி தலைவர்….!!!!

குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில்  நகராட்சி தலைவர் சியாமளா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் ஆணையாளர் தாணுமூர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் சியாமளா குப்பையை சாலையில் வீசிய கடையின் உரிமையாளருக்கு அபராதம்  விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நமது நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகனுக்கு சூடு வைத்த கொடூர தாய்” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

மகனுக்கு சூடு வைத்த தாயிடம்  அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள  ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அந்த பெண்  சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இதனை பார்த்து பொதுமக்கள் உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சமையல் செய்து கொண்டிருந்த வாலிபர்” திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. தீயணைப்புத் துறையினரின் முயற்சி….!!

வீட்டிலிருந்த சமையல் எரிவாயு வெடித்ததில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஜமீன் புத்தூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் கிருஷ்ணகுமார் என்ற வாலிபர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கழிவுகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சமையல் எரிவாயுவிலிருந்து கியாஸ் கசிந்தது. […]

Categories

Tech |