சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையத்தில் மனோஜ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தனது பெண் தோழியான ஆர்த்தி(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது […]
