Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட டே சூப்பர்…. “பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் போதும்”…. முக கவசம் வழங்கும் நவீன எந்திரம்….!!!!!!!

ரயில்வே நிலையத்தில் முககவசம் வழங்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் இருந்து தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை  தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் முக கவசம் வரும் நவீன இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் குறித்து  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கள் ஊருக்கு பேருந்து இயக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லடிபாளையம், பட்டணம் உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த  தனியார் பேருந்து கொரோனா தொற்றின் காரணமாக   நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மனைவியை மீட்டு தாங்க” காதல் திருமணம் செய்த வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளியான சூர்யா(22) என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஆசிரியர் காலணியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சி…. கண்டு ரசித்த பொதுமக்கள்….!!

வால்பாறையில் பெய்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 160 அடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. நனைந்தபடி வீட்டிற்கு சென்ற பொதுமக்கள்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கோவையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் போதிய மழை பெய்யாததால் குளங்கள் வறண்டதுடன், ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டன. எனவே மழை பெய்யாதா என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலைய சுரங்க பாதையில்…. வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியங்கள்…. ரசித்து பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

பொதுமக்களுக்கு மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்டு தீமைகள் குறித்து பொள்ளாச்சி பேருந்து நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இந்த சுரங்க பாதையில் சில பேர் உட்கார்ந்து மது அருந்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை….!!!!

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், மாசநாயகன்புதூர், நல்லடிபாளையம், கோடங்கிபாளையம், பட்டணம், செட்டிங்காபாளையம், தேவனாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குளத்துப்பாளையம், கப்பலாங்கரை, செட்டிபுதூர், ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம், மஞ்சம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து  படிக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 இடங்களில் இருந்த தேன் கூடு…. கமிஷனர் அலுவலகத்தில் களைகட்டிய தேன் விற்பனை….!!

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேன் விற்பனை களை கட்டியது. கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 5 தளங்களுடன் கட்டிடம் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தில் மலைத் தேனீக்கள் 10 இடங்களில் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் அங்கிருந்த 4 தேன் கூடுகளை எடுத்து அதில் இருந்த 40 கிலோ தேனை விற்பனை செய்தனர். அந்த விற்பனை கமிஷனர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் கலப்படமற்ற தேன் என்பதால் பொதுமக்கள் பலரும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஆர்வமுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு கத்தி குத்து…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!

தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பனைமரத்தூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருநங்கை பெங்களூருக்கு சென்று விட்டார். இதனால் ரமேஷ் மாரியம்மன் கோவில் வளாகத்தில் படுத்து வந்துள்ளார். இதே போன்று அதே பகுதியில் வசிக்கும் தனியார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த வந்த மர்மநபர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாரான ராதா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ராதாவை தாக்கிவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற நிர்மலா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் நகராட்சி தலைவர்  நவநீத கிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் அதிகாரிகள்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“3 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்”…. குண்டர் சட்டத்தில் கைது….!!!!!!!

வால்பாறை காமராஜர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை. பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டு கோழி கூண்டில்  பதுக்கிய மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன்  உத்தரவின் பேரில் கோவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சமம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குறுக்கலியாம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  வாழும் மக்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீரை திருடுகின்றனர். இதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார்  அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை: சிட்ராவில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!

குறைவான விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கடந்த 25-ம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வருகை புரிந்தார். இவர் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி துறையில் இருக்கும் சிட்ராவை பார்வையிட்டார். அவர் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இவர் திருப்பூரில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் பியுஷ் கோயல் செய்தியாளர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கு எதுக்கு வந்தீங்க?…. வசமாக சிக்கிய 3 பேர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!!

இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பகுதியில் நேற்று இரவு  வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக 3  பேர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை இதனையடுத்து மீண்டும் வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நகையை திருடி விட்டான்”…. தொழிலாளிக்கு சூடு வைத்து சித்திரவதை…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பூண்டி அருகே முள்ளங்காடு மலைவாழ் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாய கூலி தொழிலாளியான  இவரை கடந்த 23ஆம் தேதி மாலை செம்மேடு முட்டத்துவயல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கோபால்(47), நரசிபுரம் ஆத்தூரை சேர்ந்த நஞ்சப்பன்(54) போன்றோர் வேலைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவிலை சேர்ந்த சின்ன ரத்தினம் ஆகிய மூன்று […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை: ஆட்டம் காட்டிய ஆளுங்கட்சி…. கெத்து காட்டிய பெண் மேயர்…. அச்சத்தில் கவுன்சிலர்கள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கட்சியானது தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர்கள் அனைத்து வசதிகளையும் தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே செய்து வந்ததுதான். இதனால் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி பயங்கர தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் சக்ரபானியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார். இவரின் கடின உழைப்பின் காரணமாக நடந்து முடிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் வந்தாச்சி “வை-பை ஸ்மார்ட் ட்ரீ”…. ஒரே நேரத்தில் 150 பேர்….. செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டு அரங்கத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதிகளுடன் கூடிய வைஃபை ஸ்மார்ட் ட்ரீ மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீ சோலார் பேனல் மூலமாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரே நேரத்தில் 150 பேர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்ஐ எழுத்துத்தேர்வு…. 5,272 பேர் தேர்வு எழுதினர்…. !!!!!!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022 ஆம் வருடத்திற்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து 444 இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை முதன்மை தேர்வை  தொடர்ந்து மதியம் தமிழ் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,891 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத சூலூர், ஆர் வி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தருகிறேன்”… பட்டதாரி வாலிபர்களிடம் 50 லட்சம் மோசடி… போலீசார் தீவிர தேடல்….!!!!!!!!

வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞனிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் என்னும் பகுதியை சேர்ந்த தன்யா கருணாநிதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தன்யா கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னிடம்  அறிமுகமான நபர்களிடம் கோவை  இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் அதில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா….? அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!!!!!

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா  என அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, புத்தி வதம்பச்சேரி, செஞ்சேரி புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட மொத்தம் 20 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் மூலமாக பொது மக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த அதிரடி…! மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. கோவை மக்களுக்கு அலர்ட்….!!!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவற்றை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும்” நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!

வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கியுள்ளார். மேலும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் முதன்மை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தற்காப்பு கலையின் சப்-ஜூனியர் போட்டி…. மாநில அளவில் 2-வது இடம் பிடித்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் வைத்து கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் மாநில அளவிலான தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குங்பூ மாணவர்கள் கலந்துகொண்டு 4 தங்க பதக்கமும், 6 வெள்ளி பதக்கமும், 5 வெண்கல பதக்கமும் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தனர். இவர்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர்”… குவிந்து வரும் பாராட்டு…!!!!!

கோவை குனியமுத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் (34). பிளம்பர் ஆக பணியாற்றி வரும் இவர் நேற்று காலையில் வேலைக்காக கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாலாங்குளம் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தனது வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே…! வரும் 22 ஆம் தேதி நல்ல வாய்ப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டத்தின் புதிய காவல் ஆணையராக வி.பாலகிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருடைய தலைமையில் முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களிடம் இருந்து தினமும் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது. மிகவும் அவசரமான சூழ்நிலையில் மட்டுமே நேரம் கருதாமல் மனுக்கள் பெறப்படும். தமிழக முதல்வரின் அறிவிப்பின்படியும், டிஜிபியின் உத்தரவின்படியும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: “மறைந்தாலும் நீ வாழணும்” மூளைச்சாவு அடைந்த மகன்…. பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் சாலை விபத்தில் சிக்கினர் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தினேஷின் பெற்றோர்கள் தன்னுடைய மகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். மறைந்தாலும் தன் மகன் வாழ வேண்டும் என்று நினைப்பதாக தினேஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியர்…. நடைபெறும் உலக யோகா தினம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி நகரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியையான கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கீதா தண்ணீரில் மிதந்தபடி பாத ஆசனம், பத்ம கோபுர ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது. நான் கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதனால் உடல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: இளம்பெண் கடத்தல்…. பா.ஜ.கவை சேர்ந்த 2 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!

இளம்பெண்ணை  கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் அருகே கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியில் சண்முக சுந்தரம் (38) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 27 வயது இளம்பெண்ணை சண்முகசுந்தரம் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய பெற்றோரிடம்  சென்று பெண் கேட்குமாறு கூறியுள்ளார். உடனே சண்முக சுந்தரமும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: மாநில அளவிலான வூசு போட்டி…. 28 மாவட்டங்கள் பங்கேற்பு…. சிறப்பாக விளையாடிய சிறுவர்-சிறுமிகள்….!!!

மாநில அளவிலான வூசு போட்டியில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநில அளவிலான சப் ஜூனியர் வூசு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியானது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் டாவுலு, சான்சூ போன்ற 2 பிரிவுகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.  அந்த விசாரணையில் அவர் சூலுரை சேர்ந்த கார்த்திக் என்பதும், சத்யராஜ் உள்ளிட்ட 2 பேரிடம்  இருந்து  கஞ்சாவை வாங்கியது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக், சத்யராஜ், பாபிகான்  ஆகிய 3  பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடிரென நடந்த விபரீதம்…. திவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் சூரியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று வால்பாறை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு விரவு ஏற்றிக்கொண்டு வால்பாறை-சாலக்குடி சாலையில் லாரியில்  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சூரியனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த  தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த  தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண் வலி தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு கண் பார்வை சரியாக தெரியாததால்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று திடீரென கண் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் நல்ல தண்ணீர் வழங்கவில்லை…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள  கணபதி லெனின் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல தண்ணீருக்கு பதிலாக உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூட்ஸ் கம்பெனி எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகர  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணவர்கள்…. நடைபெறும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள்….!!!

நடைபெறும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் குறித்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தீபா கூறியதாவது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் மாணவர்கள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் , நன்னெறி மற்றும் நீதிக்கதைகள் கூறுதல், தனி நடிப்பு, விளையாட்டு, ஒரு பாடல் பாடுவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் ஊருக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வியாபாரி வீட்டில் நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடுகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாருதி நகரில் பழைய இரும்பு வியாபாரியான மகபூப்  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம்  தேதி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு  சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு…. சூப்பர் வசதி அறிமுகம்…. பெற்றோர்கள் மகிழ்ச்சி….!!!

மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழைய சின்னார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் கடந்த பல வருடங்களாக பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் எடுத்து வருவதாக கூறிய வாலிபர்…. விபச்சாரம் நடத்திய தம்பதியினர் கைது…. போலீஸ் அதிரடி…!!

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபர் தனது நண்பரை பார்ப்பதற்காக வேடப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் வாலிபரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வாலிபர் சரி என்று கூறி அந்த நபருடன் சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டி யானையின் காலில் சிக்கி போராடிய வன ஊழியர்…. வைரலாகும் வீடியோ…. கோவையில் பரபரப்பு…!!

வன ஊழியரை குட்டி யானை காலால் மிதித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம் கிராமத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தது. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் குட்டி யானை மட்டும் வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பிளிறியபடி அங்கும் இங்கும் ஓடியது. இதனை பார்த்த வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்கிறார்…. சாதனை படைத்த வாலிபர்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வாலிபரை பொதுமக்கள்  பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி செல்லமுத்து நகரில் உமர் பாரூக்-முகமதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆசாத் சுலைமான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆசாத் சுலைமான் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும்  பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை  பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முகமது சுலைமானின் தந்தையான உமர்பாரூக் கூறியதாவது. எனது மகனான ஆசாத் சுலைமான் 9 […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. ஹைடெக்காக மாறிய ஈரோடு – கோவை ரயில்…. பெண் பயணிகள் மகிழ்ச்சி …!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 2020 ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு- கோவை மற்றும் ஈரோடு- பாலக்காடு, சேலம் -கோவை ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்ட MEMU ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா குறைந்ததையடுத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு -கோவை இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் உள்ளூர் பயணிகள் ரயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் திரண்டு காணப்பட்ட மக்கள்…. ஆற்றில் குளிக்க தடை…. உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்….!!

தடையை மீறி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் விடுமுறை நாளான நேற்று வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் திரண்டு காணப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள கூலாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆற்றில் குளித்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டனையை கடுமையாக்க வலியுறுத்தி…. கர்ப்பிணியின் உலக சாதனை முயற்சி…. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்….!!

நிறைமாத கர்ப்பிணி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தண்டனைகளை கடுமையாக்க வலியுறுத்தி டியூப் லைட்டுகளின் மீது நடந்தபடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இலவசமாக கிராமிய கலைகளை கற்றுக்கொடுத்து வருகிறார். இவருக்கு பிரகலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரும் கிராமியக் கலைகளில் ஆர்வமுடையவர். மேலும் பிரகலட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பிரகலெட்சுமி நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்துடன் இன்ப சுற்றுலா” சுழலில் சிக்கி இறந்த தொழிலதிபர்…. கோவையில் பரபரப்பு…!!

ஆற்றில் மூழ்கி தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் மன்சூர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மன்சூர் வெளிநாட்டிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மன்சூர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் சோலையாற்றில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகனத்தை முந்த முயன்ற வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோவையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் பாஷா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பாஷாவின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்காக செலவு செய்த பணத்தை தா” பெண்ணின் 2-வது கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய 2-வது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் முத்துலட்சுமி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக முத்துலட்சுமியின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவரை முத்துலட்சுமி 2-தாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே…! அரசுப்பள்ளியில் புதிய முறையில் அட்மிஷன்…. கலக்கும் கோவை ஆசிரியர்….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வி கற்காத மாணவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று சேர்க்கை நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டு லட்சுமி நாயக்கன்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணசாமி புது முயற்சியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தியபோது…. சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி…. கோவையில் சோகம்….!!!

கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வாலிபர் செளரிபாளைய பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், உடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி”…. கோவை மக்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் வழங்கியுள்ளார். மீதமுள்ள பயனாளிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் விரைவில் […]

Categories

Tech |