சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திலேயே சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். அப்போது, சென்னையில் பரிசோதனைகளை அதிகரிக்க […]
