லாரி சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் பாலாஜி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்துவிட்டு பாலாஜி மொபட்டில் இரவு நேரத்தில் […]
