சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]
