கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முட்டுக்காடு கரிகட்டுகுப்பம் சிங்காரவேலன் தெருவில் மீனவரான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான நரேஷ் என்பவருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]
