அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக அரசு மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை உத்தமர் காந்தி சாலையில் கடந்த புதன்கிழமை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் நடனமாடி கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அந்த வாலிபர் தொடர்ந்து அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். […]
