மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் உறவினரான சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சின்னவளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராஜலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ராஜலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]
