குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியில் இளந்தமிழன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய வன்னிமலர் என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோகிலா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கோகிலா திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தமிழன் தனது மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு […]
