டிஜிட்டல் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்களை வைத்து எல்லாத் தரப்பினரையும் ரசிக்க வைக்கும் திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் அதற்கான சாய்ஸாக வெங்கட் பிரபுவின் படங்கள் என்று தைரியமாகக் கூறலாம். கதை பழையது, இல்லை திருடியது என பல்வேறு விஷயங்களைக் கூறினாலும் திரைக்கதையும், காட்சியமைப்பும் அண்மையில் நடந்த நிகழ்வுகளை பகடி செய்து ரசிக்க வைப்பது இவரது தனி ஸ்டைல். லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்களை தனது படங்களில் சொல்வதுடன், கோலிவுட் சினிமாவுக்கு நன்கொடையாக பல புதுமைகளை அளித்து வரும் […]
