Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் மேக்கப் போடுவதை நிறுத்திய நயன்…. என்ன காரணம் தெரியுமா….? செம ஷாக்கில் ரசிகர்கள்….!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் குழந்தைகள் தனக்கு முத்தம் கொடுக்கிறார்கள் என்பதற்காக நயன்தாரா முகத்தில் மேக்அப் போடுவதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…. நடிகர் விஜய்யுடன் இணையும் கமல்….? குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் விஷால், திரிஷா மற்றும் சஞ்சய் தத் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் கமலஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2″…. படம் வெளியாக தாமதம் ஏன்….? இயக்குனர் சங்கரின் பிளான் தான் என்ன….!!!!

“இந்தியன் 2” படப்பிடிப்பு சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். “இந்தியன் 2” படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. இங்கு மழை கொட்டிய நாட்களிலும் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வந்துள்ளார்கள். இந்நிலையல் “இந்தியன் 2” படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரேன் விபத்து ஏற்பட்டதினால் நின்று போனது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விநியோகத்தை நிறுத்திடலாம்”…. உதயநிதிக்கு தந்தை ஸ்டாலின் அட்வைஸ்…. திடீர் டுவிஸ்ட் கொடுத்த கமல்….!!!!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செம்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகமும் செய்து வந்துள்ளார். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வது இனி நிறுத்தி விடலாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய போகிறாரா….? அவரே கொடுத்த விளக்கம் இதோ…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரோஜா. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த போதே இயக்குனர் ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்ஷு மாலிக்கா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியான நிலையில், ஆர்கே செல்வமணி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் அன்ஷு மாலிக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு சுத்தமா பிடிக்கல”….. நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கமிட்டாகிட்டு இருக்க”…. உதயநிதியை கண்டித்த Mrs. ஸ்டாலின்….!!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Birthday Special:… “டயானா குரியன் லேடி சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி”…. நயன்தாரா கடந்து வந்த பாதை…. இதோ சில தகவல்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா குரியன். மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கர என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… கௌதம்-மஞ்சிமா திருமண அழைப்பிதழில் இப்படியொரு ஸ்பெஷலா?…. இணையத்தில் வைரலாகும் PHOTO….!!!!

நவரச நாயகனின் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளது. பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கௌதம். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது கௌதம் மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்ககிட்ட சிக்கிடாதீங்க!…. தனியா இருப்பதே பெஸ்ட்…. நடிகை சதா அட்வைஸ்…..!!!!!

தமிழில் ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் சதா(38). அத்துடன் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் சதா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சில தேவைகளுக்காக இருக்கும் உறவுகளில் சிக்கிக்கொண்டு அந்த மனிதர்கள் நம்மைவிட்டு பிரிந்து விடுவார்களோ என எதற்கு பயப்படுகிறீர்கள். நம்மை நெருக்கமானவர்களாக பார்க்காதவர்கள் தம்மை விட்டு விலகியிருப்பது தான் நல்லது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீங்கள் மட்டும் தான் உங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்?… லிஸ்டில் இல்லாத புதிய‌ டுவிஸ்ட்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர்களுக்கு சிறந்த தடம் அமைத்து கொடுப்பது இதுதான்?…. டிரைக்டர் விஜய் ஸ்பீச்….!!!!

தமிழில் வெற்றி திரைப்படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய் இப்போது பிரசன்னா, மிருதுளா ஸ்ரீதரன் போன்றோருடன் இணைந்து “பைவ் சிக்ஸ் செவன் எய்ட்” எனும் ஓடிடி தளத்துக்கான படத்தை டிரைக்டு செய்துள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியதாவது “டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. திரையுலகில் 2 மணி நேரம் மட்டுமே கூற முடிவதை ஓடிடி-யில் 4 மணிநேரம் விரிவாக சொல்ல முடியும். இதற்கிடையில் வெப் தொடர்கள் அதிகம் வருகிறது. ஓடிடி டிஜிட்டல் தளங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கார்த்தியுடன் இணைந்த பிரபல இயக்குனர்…. இது நம்ம லிஸ்டிலியே இல்லையே…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை‌யே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.  கடந்து செப்டம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் வெளியானது. இந்த படத்தில் வதந்திய தேவனாக நடித்த கார்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இதற்கிடையில் மித்ரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நயன்தாரா- விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு இவ்வளவா?…. வெளியான தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகியாக் மட்டுமில்லாமல் முதன்மை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் நயன்தாரா திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… கவர்ச்சி புயலுக்கு இந்த தமிழ் நடிகர் தான் பிடிக்குமா?….. யாருப்பா அந்த சூப்பர் மாஸ் ஹீரோ…..!!!!!

நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் டிரைக்டர் ஜெயமுருகன் இயக்கத்தில் “தீ இவன்” படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம்புலி, ஜான் விஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த நிலையில் “தீ இவன்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற சன்னிலியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்”… நிதி அகர்வால் ஓபன் டாக்..!!!

உதயநிதி குறித்து பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த நிதி அகர்வால் அண்மையில் பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படம் பிரச்சனையின் காரணமாக நிறுத்தப்பட்டதா….? இயக்குனர் பாலா திடீர் விளக்கம்….. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜெபிப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதோடு ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் சமீப காலமாக ஏராளமான விருதுகளை குவித்தது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 50-வது திருமண நாளை கொண்டாடிய ஜெயம் ரவியின் பெற்றோர்…. வைரலாகும் அழகிய FAMILY PHOTO….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில், இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சைரன் மற்றும் இறைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் அம்மா-அப்பா தங்களுடைய 50-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த திருமண நாளை முன்னிட்டு ஜெயம் ரவியின் குடும்பத்தினர் கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பன்முகத் திறமைகளை கொண்ட பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்ட விழா?….. கமல், ரஜினி, இசைஞானி, பாரதிராஜா பங்கேற்பு….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமைகளை கொண்டவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம். இவர் தான் இசைஞானி இளையராஜாவை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினியின் பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80-வது பிறந்தநாள் விழா மிகப் பிரமாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழா வருகிற டிசம்பர் 2-ம் தேதி பஞ்சு 80 என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!….‌ ஆதி-நிக்கி தம்பதிக்கு குழந்தை?…. குவியும் வாழ்த்து…. விரைவில் குட் நியூஸ் சொல்லப் போகிறார்களா?….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவரும் பிரபல நடிகர் ஆதியும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும்  ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. இது வேற லெவல்!…. நடிகர்‌ கமலுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?…. வெளியான மரண மாஸ் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பகத் பாஸில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 35 நாட்களுக்கு இத்தனை கோடியா…? சம்பளத்தில் கரார் காட்டும் நயன்?…. இதுல பயங்கர கண்டிஷன் வேற….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இந்த படம் நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை நயன்தாராவின் மார்க்கெட் குறையவே இல்லை. பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு திருமணத்திற்கு முன்பு வரை 4 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நிலையில், தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. செம…. “காந்தாரா” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. சுமார் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்‌ 375 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே படத்திற்கு பிறகு….. தன் மனைவியுடன் சேர்ந்து கலகத்தலைவன் படத்தை பார்த்த முதல்வர்…. என்ன சொன்னார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது கலகத் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 18-ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. இந்நிலையில் கலகத்தலைவன் திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் தனியார் திரையரங்கில் பார்த்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொறாமை, வெறுப்பு எதற்காக”…. வாழு, இல்லனா வாழ விடு…. நடிகர் அஜித்தின் அதிரடி டுவிட்டர் பதிவு‌ வைரல்….!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலியாபட்டின் “அவுட் ஆப் போகஸ்‌”…. இந்த போட்டோவுக்கே இம்புட்டு லைக்ஸா…!!!!

அலியா பட் பகிர்ந்த அவுட் ஆப் போகஸ்‌ போட்டோவிற்கே 17 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! துளு மொழியிலும் வெளியாக இருக்கும் காந்தாரா… படம் குறித்து வெளியான தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் துளு மொழியிலும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… இது என்னைப் பற்றிய வதந்தி கிடையாது…. அது உண்மைதான்…. எஸ்‌.ஜே சூர்யாவின் வைரல் பதிவு….!!!!

எஸ் ஜே சூர்யா “வதந்தி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராவார். எஸ். ஜே. சூர்யாவின் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG.! படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல ஹீரோ… புது மாப்பிள்ளை இப்படி செய்யலாமா..?

படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல் பசுபதி…. குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் பதிவு…!!!!

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “கொன்றால் பாவம்”… வெளியான பட அப்டேட்…!!!!

ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாதி இல்லாத மதம் புத்த மதம்” உண்மை காரணத்தை உடைத்த நடிகர் சாய் தீனா…!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சாய் தீனா. இவர் ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார். கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். படத்தில் மட்டும் தான் அவர் வில்லன். ஆனால் நிஜத்தில் அவரது பேச்சு சமூக அக்கறை கொண்டதாக இருக்கும் அவர் பிக்கு மவுரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடன் நடிக்க பயப்படுதாங்க!…. காரணம் இதுதான்?… பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்….!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் அண்மை காலமாக அரசியல் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்ததாவது ”அண்மை காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை….? பின்னணி என்ன…? வெளியான தகவல்….!!!

எப்போதும் பொது இடங்களில் எதுவும் பேசாத நடிகர் அஜித் தற்போது திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களைச் சுற்றி நெகட்டிவிட்டியோ டிராமாவோ இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்தக் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பொறாமைக்கோ, வெறுப்புக்கோ நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள்” என்று அஜித் குறிப்பிட்டுள்ளார். அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் வெறுப்புணர்வு கொள்ள வேண்டாம் என்று அஜித் குறிப்பிட்டிருப்பதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்ட இயக்குனருனா சும்மாவா….. ஒரு பாட்டுக்கே எத்தனை கோடி செலவு பண்றாரு பாருங்க….. ஆர்சி 15 படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது இயக்குனர் சங்கர் தான். அந்த அளவுக்கு இயக்குனர் சங்கரின் படங்களில் பிரம்மாண்டம் என்பது இருக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிசினஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்திய நடிகை தமன்னா”….. நல்லா பாத்துக்கோங்க….. வதந்திகளுக்கு சரியான பதிலடி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா instaவில் ஒரு பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம….. கிடப்பில் போட்ட படத்தை மீண்டும் எடுத்த ஆண்டவர்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்ல விசேஷங்க!…. திருமண கோலத்தில் ரோஜா சீரியல் ஹீரோயின்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதாநாயக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். தெலுங்கு நடிகையான இவர் ரோஜா சீரியல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா தற்போது bridal மேக்கப் உடன் மணப்பெண் போல அழகாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் நேற்று நடைபெற்ற அவரின் தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்தது. தங்கை திருமணத்திற்கு பிரியங்காவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. உலக அளவில் இவ்வளவு வசூலா?…. பாக்ஸ் ஆபீஸை அடித்த நொறுக்கிய லவ் டுடே….!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வெற்றி உள்ளது. விமர்சன ரீதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படம்…. “நல்லா இரும்மா” பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து இருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்போ வீட்டு வாடகை கொடுக்க கூட பணமில்லை”…. உருக்கமாக பேசிய ராஷ்மிகா மந்தனா….!!!!

தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்கிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு புஷ்பா திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிய சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பேசப்பட்டது. தற்போது ராஷ்மிகாவுக்கு கைநிறைய பணம் இருக்கிறது. கர்நாடகாவில் அவர் நிறைய சொத்துகள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரது வீட்டில் வருமான வரி சோதனையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் தான் லிமிட் வேண்டாமா?…. உதட்டில் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்… விளாசும் நெட்டிசன்ஸ்…..!!!

உலக அழகியாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராய் நடிக்க தொடங்கி சில படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தார். இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாராய் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில்  ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆரத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த  போட்டோவை வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அஜித்துக்கு வந்த சோதனையா இது…. தோல்வியால் புதிய படத்திற்கு வந்த சிக்கல்?….. கவலையில் படக்குழு?….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை ரெட் ஜெயன்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீமை விட‌ ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர்”…. கண்டிப்பா அவருதான் ஜெயிக்க போறாரு….. வி.ஜே மகேஸ்வரி திட்டவட்டம்…..!!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து கடந்த வாரம் வி.ஜே மகேஸ்வரி வெளியேறி உள்ளார். இவர் வெளியேறுவார் என்று மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என்று வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரெல்லாம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை…. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 6-ல் இன்றைய பிரேமாக்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6-ல் கமல்  சார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் கொடுத்த டோஸ்ஸில் அசீம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பல பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார் அசீம். இதனை தொடர்ந்து சகப் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்து வருகின்றார். பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!.. ரச்சிதாவும் மாஸ்டரும் ஒரே பெட்டில் படுக்க வேண்டுமா?….. அட பிக்பாஸில் என்னதான் நடக்குது….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் தற்போது ராஜா ராணி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 5 பேர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய காதல் ஜோடி உருவாகி வருகின்றது. தற்போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீதான தனது காதலை வெளிப்படுத்தி வருகின்றார். இப்போது பிக் பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. தனது மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…. திகைத்துப் போன புகழ்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பிறந்தநாளுக்கு அவரது மனைவி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தார். விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி நடிகர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி கொடுத்த குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவர் தற்போது பல முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாகவும் ஒரு சில படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து காமெடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்… இந்த படத்தில் இருக்குது… ஆண்ட்ரியா ஓபன் டாக்…!!!!

அனல் மேல் பனித்துளி திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார். ஜெய்சர் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அனல் மேல் பனித்துளி. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜிஎஸ்டி வரியை குறைங்க”…. தயாரிப்பாளர் சங்கம்… அமைச்சரிடம் கோரிக்கை மனு…!!!!

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் எல்.முருகனிடம் மனு கொடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் 10% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. இதனால் மத்திய அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், டி.சிவா, லலித்குமார் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாப்பி பர்த்டே அம்மா-அச்சா….!” போட்டோவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் வாழ்த்து…!!!

பெற்றோரின் பிறந்தநாளை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 80-களில் வலம் வந்தவர் நடிகை மேனகா. இவர் தமிழிலும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இரண்டாவது மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் நடிகை மேனகாவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்குமாருக்கும் நேற்று நவம்பர் 16 ஒரே நாளில் பிறந்தநாள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் இறப்பு…. ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவு…!!!!

மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என […]

Categories

Tech |