Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி”… படம் தோல்வியா? வெற்றியா..? இதோ..!!!!

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: வணங்கான் – நடிகர் சூர்யா விலகல் – இயக்குனர் பாலா அறிவிப்பு ..!!

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்று ஐயம் கொண்டதால் தற்போது சூர்யா விலகி விட்டதாக பாலா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பினை இருவரும் கலந்து பேசி எடுத்திருப்பதாகவும் பாலா அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றார். சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதா மகன் படம் இயக்குனர் பாலா  இயக்கத்தில் வெளியாகிருந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தினுடைய படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… இது அல்லவா வளர்ச்சி…. சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்திய விஜய் டிவி ராமர்…. குவியும் வாழ்த்து….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவர் ராமர். இவருடைய காமெடியை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அந்த அளவுக்கு நடிகர் ராமரின் காமெடிக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் நடிகர் ராமர் தற்போது சொந்தமாக ஒரு வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். இந்த கிரகப்பிரவேசத்தில் நடிகர் ரோபோ சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாமி சாமி பாடல்…. ராஷ்மிகாவை மிஞ்சிய சங்கர் மகள்…. வெளியான அசத்தல் வீடியோ….!!!!

சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய அதிதி சங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த  விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சங்கர் மகளாவார். தற்போது அதிதி சங்கருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி வருகின்றனர். விருமன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” என்ற படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ”டி.எஸ்.பி” நடிகர்…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டிஎஸ்பி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த இந்த படத்தில் ஹீரோயினாக அணு கீர்த்தி நடித்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… கமல் வீட்டில் இத்தனை பிரபலங்களா…. திடீரென ஆச்சரியப்படுத்திய சந்திப்பு….. விரைவில் குட் நியூஸ் வரப்போகிறதா….???

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதோடு, மணிரத்தினம் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை இயக்குனர் ராஜமவுலி, இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் சனிசலா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த 3 முக்கிய இயக்குனர்கள்… அப்ப வேற லெவல் தான்… நாளைக்கு சூப்பர் அப்டேட்..!!!

ரத்தம் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. டைரக்டர் அமுதன் “தமிழ் படம்” வாயிலாக பிரபலமானவர். இவர் தற்போது  இயக்கும் புதிய திரைப்படம்  “ரத்தம்”.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எத்தனை எதிர்ப்புகள், எத்தனை நிராகரிப்புகள்”…. திரும்பிப் பாத்தா 45 படங்கள்…. 10 வருட நிறைவால் நெகிழ்ச்சியில் பிரபல நடிகை…..!!!!!

தமிழில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது படங்களில் வில்லி கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமாவுக்குள் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவுக்குள் வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 45 படங்களில் நடித்துள்ளேன். நான் படங்களில் வில்லியாக நடிக்கிறேன். இது அவ்வளவு சுலபம் கிடையாது என்றாலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் “துணிவு”…. அதை பற்றி மட்டும் கேட்காதீங்க?…. டிரைக்டர் வினோத் ஓபன் டாக்….!!!!!

டிரைக்டர் சிவாவுக்கு அடுத்தபடியாக, அஜித் நடிக்கும் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே எச்.வினோத் மாறிவிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை அடுத்து தற்போது 3வது முறையாக அஜித்தை வைத்து “துணிவு” திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 3 திரைப்படங்களையும் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரித்து உள்ளார். “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றிய சில தகவல்களை டிரைக்டர் வினோத் பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போகலையாம்…. அதற்கு பதில் எங்கே போகிறார் தெரியுமா…..???

ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது.  ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை அடுத்து நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு போகப்போறது இல்லையாம். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எலிமினேஷனை கூறிய கமல்… யார் தெரியுமா..? எல்லாம் நாம எதிர்பார்த்தது தான்..!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் செய்யப்பட்டவர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். தற்போது இருக்கும் மீதி நாட்களில் யார் சிறப்பாக விளையாடி பைனல் வரை செல்கின்றார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றார்கள். இதுவரை ஆறு போட்டியாளர்கள் எழுமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி, கதிரவன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள். இதில் குயின்சிதான் குறைவான வாக்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜீவா படத்திற்கு தணிக்கை குழு ஆட்சேபனை…. 13 காட்சிகள் நீக்கம்….. என்ன காரணமாக இருக்கும்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜீவா தற்போது வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தணிக்கை குழு சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து 13 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது குறித்து நடிகர் ஜீவா பேட்டியில் கூறியதாவது, நான் புதிதாக வரும் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடைய ஏராளமான படங்களை புதுமுக இயக்குனர்கள் தான் இயக்கியுள்ளனர். அதேபோன்று இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் இயக்குனர் ராஜமவுலிக்கு விருது, செய்தித்தாளில் கிடைத்த சிறப்பு அந்தஸ்து…. குவியும் வாழ்த்து….!!!!!

பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து, இவர் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”ஆர்ஆர்ஆர்”. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாபா டிரைலர்…. ரஜினி வெளியிட்ட அசத்தல் வீடியோ…. செம டிரெண்டிங்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் பட நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

யஷ் நடிப்பில் வெளியாகிய கே.ஜி.எப் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமானது அடுத்ததாக காந்தாரா திரைப்படத்தை தயாரித்தது. இப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்று, வசூலை குவித்தது. இந்நிலையில் தன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை ஹோம்பலே வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக டிரைக்டர் சுமன்குமார் இயக்கத்தில் உருவாகும் “ரகு தாத்தா” என்ற படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இதற்கான சூட்டிங் வேலைகள் தொடங்கி இருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ காந்தியாவே இரு… எதுக்கு பிக்பாஸ் வந்த…” விக்ரமனை போட்டு தாக்கிய வனிதா..!!!!

விக்ரமனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் வனிதா. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தினமும் தவறுகள் செய்து கமலிடம் திட்டு வாங்கி வருகின்றார் அசீம். ஒவ்வொரு வாரமும் மாத்திக்கிறேன் என சொல்லி மீண்டும் தவறுகள் செய்து திட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றார் அசீம். அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் வேணும்னே செய்கின்றார் என்பது தெரிகிறது. அவர் தன்னை தனியாக காண்பிப்பதற்காக அப்படி செய்கின்றார் என பலரும் விமர்சித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! நடிகை கீர்த்திக்கு என்ன ஆச்சு…. திடீரென எடுத்த புது அவதாரம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் ஆக தற்போது முன்னணி நடிகையாக  உயர்ந்துள்ளார். இவர் தற்போது தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு பட்ஜெட் படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… வாரிசு படத்தின் அனல் பறக்கும் தீ தளபதி பாடல்…. இணையத்தை தெறிக்கவிட்ட வேற லெவல் மாஸ் வீடியோ….!!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலக்குழி மரணங்கள் குறித்த “விட்னஸ்”…. சோனி லைவ் ஓடிடி தளத்தில்…. டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு….!!!!

“விட்னஸ்” திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு.  புகைப்படக் கலைஞரான தீபக்கின் முதல் படம் விட்னஸ். இந்தப் படத்தை இவரே இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முத்துவேல், ஜே. பி. சாணக்யா ஆகிய இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார். இந்த “விட்னஸ்” திரைப்படத்தில் ஸ்ரீநாத், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணக்கோலத்தில் க்யூட்டாக இருக்கும் நடிகை ஹன்சிகா…. களைக்கட்டிய திருமணம்…. வெளியான வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரான்சில் ஈபிள்டவர் முன்பு நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று (டிச..4) நடக்கிறது. இதனை முன்னிட்டு 3 தினங்களாக அந்த அரண்மனையில் திருமணம் நிகழ்ச்சிகளானது களைகட்டியது. இதனிடையில் மெஹந்தி பங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இத்தனை இயக்குனர்களா….? ரத்தம் பட டீசரில் சூப்பர் டுவிஸ்ட்…. நீங்களே பாருங்க….!!!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”.  இந்த படத்தின் ஹீரோயினியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் போன்ற மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ரிலீசான முதல் நாளே வெற்றி விழாவா….? இணையத்தில் கிண்டல் அடிக்கும் நெட்டிசன்ஸ்…!!!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே டிஃபரண்டான விமர்சனங்களை பெற்றுள்ளது. இயக்குனர் பொன்ராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாடலான “நல்லா இரும்மா” என்ற பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் வைரலாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. நேற்று வெளியான இந்தப் படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனது காதலனுடன் புது வீட்டுக்கு குடியேறும் நடிகை”…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்திய திரைப்பட நடிகையான ப்ரியா பவானி சங்கர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் மற்றும் எஸ். ஜே. சூர்யாவுடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை எந்த நடிகர் பாடினார் தெரியுமா….? கேட்டா வியந்து போயிடுவீங்க….!!!!!!

“வாரிசு” திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த “வாரிசு” திரைப்படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகயுள்ளது. இந்த  இரண்டாவது  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் மரணம்: வெற்றிமாறன் எடுத்த முடிவு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இணைந்து வீடு மற்றும் பண உதவிகள் செய்யவுள்ளதாகவும், தயாரிப்பாளர் நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் மரணம்…. அதிர்ச்சி…!!!!

சென்னையில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் உ உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தின்போது உருவக்கேலிக்கு ஆளானேன்…. நடிகை மஞ்சிமா மோகன் ஓபன் டாக்…!!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில்  சென்னையில் கடந்த நவ.28ம் தேதி கவுதம் கார்த்தி – மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.  இதனிடையே, மஞ்சிமா மோகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“18 வயதில் ஆசைப்பட்டு” இப்போது தான் நடந்திருக்கு…. பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி….!!

தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்,  கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அடுத்தடுத்து மான்ஸ்டர், மாஃபியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணத்தில் கூட என்னை உருவ கேலி செஞ்சாங்க”…. நான் பெருசா எடுத்துக்கல….. நடிகை மஞ்சிமா மோகன் வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தன்னை பலரும் உருவ கேலி  செய்ததாக ஏற்கனவே நடிகை மஞ்சிமா சமூக வலைதளத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… முதல் முறையாக வெளியான ஆர்யா- சாயிஷாவின் குழந்தை வீடியோ….. இணையத்தில் செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிகை சாயிஷாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் குழந்தையின் புகைப்படம் இதுவரை ஒன்று கூட வெளியானது கிடையாது. இந்நிலையில் நடிகை சாயிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சாயிஷா தன்னுடைய தாயாருடன் நடந்து செல்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“30 வருட முயற்சி”…. வியர்வை நெஞ்சில் உரம் போட்டு வளர்த்த தீ… பிரபல பாடலாசிரியரின் அனல் பறக்கும் ட்வீட் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாடல் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4மணிக்கு வெளியாகும் என பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் திமிரான தமிழச்சி இவங்க தான்…. காதலியை அறிமுகப்படுத்திய “என்ஜாய் எஞ்சாமி” தெருக்குரல் அறிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருபவர் தெருக்குரல் அறிவு. இவர் காலா படத்தில் இடம்பெற்ற உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி பாடினார். அதன் பிறகு பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் தான் தெருக்குரல் அறிவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இவர் தற்போது வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமா நிஜமில்லை”…. அத பாத்துட்டு யாரும் விபரீதமா முடிவெடுத்துறாதீங்க….. ரசிகர்களுக்கு ஜீவா அட்வைஸ்……!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடித்துள்ள வரலாறு திரைப்படமானது டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க, விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அது ஒரு ஜாலி கலந்த படம்”…. மாஸ் ப்ரோ… வேற லெவலில் கலக்கிட்டீங்க…. பிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளிய அட்லீ…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படமானது தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. கடந்த மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லவ் டுடே திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதோடு, பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் லவ் டுடே படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க தயார்”… விஜய் சேதுபதி அதிரடி..‌.. ஆவலில் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெய்லர்” படத்தின் இயக்குனர் எங்கே போயிருக்காரு தெரியுமா….? வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் “ஜெய்லர்” படத்தின் படப்பிடிப்பு 50 %  நிறைவடைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் சாதனையை படைத்துள்ளது. இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பு தரவில்லை. இதனை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை இயக்குனர் நெல்சன் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுடன் இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் பயங்கர விபத்து….. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படபிடிப்பின் […]

Categories
உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பான் காரர்..!!!

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பான் காரரின் வீடியோ வைரலாகி வருகின்றது. விஜய் நடிப்பில் பொங்களுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்ததோடு சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றது. நம்ம ஊர் மக்களை தாண்டி வெளிநாட்டவர்களையும் வைப் செய்ய வைத்துள்ளது ரஞ்சிதமே பாடல். அண்மையில் ஜப்பானிய நடன கலைஞர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இரண்டு லட்சத்திற்கும் மேல் பாலோவர்களைக் கொண்ட நடன கலைஞர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சேலையில கூட இப்படியா வரணும்?….. நடிகை பூஜா ஹெக்டே பங்கேற்ற விழா…. வெளியான வீடியோ….!!!!

நடிகை பூஜாஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன் இவர் தெலுங்கில் நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்களும் பிளாப் ஆனது. இதன் காரணமாக அவர் அடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று இருக்கிறார். ரோஹித் ஷெட்டி அப்படத்தை இயக்கி இருக்கிறார். அந்த விழாவிற்கு பூஜாஹெக்டே ரெட் கலர் சேலையில் வந்துள்ளார். சேலை என்றாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. புதுசா வாங்கிய சொகுசு கார் முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள்…. வைரல் புகைப்படம்….!!!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

புது பொலிவுடன் மீண்டும் “பாபா”… டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்…!!!!

புது பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகி உள்ள பாபா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க..! கிண்டலாக பதிவிட்ட பொன்னி நதி பாடலாசிரியர்..!!!

சங்கர் திரைப்படத்திற்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல் எழுதுவதாக தகவல் வெளியானதற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்சல்ட் செய்த கௌதம் கார்த்திக்… புலம்பும் கார்த்திக்… என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே…!!!

மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம். நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார். மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்வேதாவின் காதலர் இவர்தான்… திருமண தேதியுடன் வெளியிட்ட புகைப்படம்?… இன்ப அதிர்ச்சியில் ரசிகாஸ்..!!!

தனது காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் ஸ்வேதா தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியில் இருந்து ஆக்சன் குயினாக மாறிய சாக்ஷி அகர்வால்… டூப் போடாமல் அவரே சண்டை காட்சியில்..!!!

நடிகை சாக்ஷி அகர்வால் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் அவரே நடித்து இருக்கின்றார். நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது எஸ்எஸ்சி இயக்கத்தில் நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் அவர் டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவரே நடித்திருக்கின்றார். கவர்ச்சிக்கு பெயர் போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்சன் குயினாக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பேன் எனவும் அடுத்த விஜயசாந்தியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகியும் மாஸ் காட்டும் “காந்தாரா”… இன்றுடன் 50-வது நாள்..!!!

காந்தாரா திரைப்படம் தமிழில் இன்றுடன் 50-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருதுக்கே தேர்வாகல… ஆனா… நியூயார்க் திரைபட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமவுலி தேர்வு..!!!

நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் என்ற குழு சென்ற 88 வருடங்களாக இயங்கி வருகின்றது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கை நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த குழுவில் இடம் பெற்று இருக்கின்றார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் இந்த குழு முதலாவதாக விருதுகளை அறிவித்திருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்ககான விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகம்..! ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் பலி..!!

சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.. தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் சில சமயம் கஷ்டங்களையும் கொடுக்கத்தான் செய்கிறது…. விஜய் தேவரகொண்டா பேட்டி..!!!!

அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகத்பாசிலை இயக்கும் பிரபல இயக்குனர்… யார் அவர் தெரியுமா..?

பகத்பாசிலை பிரபல இயக்குனர் இயக்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சத்தை கொண்டு சென்ற வருடம் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. இத்திரைப்படத்தை பசில் ஜோசப் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கின்றது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை கொடுத்திருக்கின்றார். இத்திரைப்படம் பாலிவுட்டில் இருக்கும் இயக்குனர்கள் வரை பாராட்டை பெற்றது. இவர் ஒரு நடிகர் என்பதால் அடுத்த […]

Categories

Tech |