Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா….. திரையிடப்படும் தமிழ் படங்கள் என்னென்ன….? முழு லிஸ்ட் இதோ…!!!!!

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 150 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுத்த காண்டம், ஓ2, நட்சத்திரங்கள் நகர்கிறது, மாமனிதன், இறுதி பக்கம், கோட், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை மீண்டும் சந்தேகிக்க வேண்டாம்”…. கோல்டு படத்திற்கு வரும் விமர்சனங்கள்…. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சொல்வது என்ன?….!!!!

“நேரம்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கிய மலையாள திரைப்படமான “பிரேமம்” தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 7 வருடங்களுக்கு பின் அல்போன்ஸ் இயக்கிய “கோல்டு” திரைப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உட்பட பல மலையாள நடிகர்கள் நடித்து உள்ளனர். இப்படத்தை பிருத்விராஜின் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் டீசர்…. எப்போது வெளியீடு?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய மிரள் திரைப்படமானது அண்மையில் வெளியாகியது. இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பரத் இப்போது 50-வது படமாக “லவ்” படத்தில் நடித்து உள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் திரைப்படத்தின் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”…. வெளியாகப்போகும் முதல் பாடல்?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படத்தில் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்துள்ளனர். வலிமை திரைப்படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்துக்காக இந்த […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”…. சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர்கள்…. வெளியான டீசர்….!!!!

தமிழ் பட டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கக்கூடிய “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா போன்ற 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதேபோல் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் “ரத்தம்” பட டீசரில் முன்னணி டைரக்டர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதாவது, டீசரில் சிறப்புத் தோற்றத்தில் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

“ரத்தசாட்சி” படம்…. டிரைலரை வெளியிட்ட நடிகர் ஹிப்ஹாப் ஆதி…. இணையத்தில் வைரல்….!!!!

ஜெய மோகனின் கதையை மையமாக கொண்டு “ரத்தசாட்சி” என்ற திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் போன்றவை படத்தின் தலைப்பை “ரத்தசாட்சி” என்று நவம்பர் 7ம் தேதி அறிவித்தது. பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றுதான் “கைதிகள்”. இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதே “ரத்தசாட்சி” படம். இந்த படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒகேனக்கல் அருகில் “தங்கலான்” சூட்டிங்…. காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த படக்குழுவினர்…. வெளியான டுவிட் வீடியோ…!!!!

பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள “டிஎஸ்பி”… படம் எப்படி இருக்குது…?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67 படத்தில் விஜய் சேதுபதி?… உண்மை என்ன..? பேட்டியில் விளக்கம்..!!!!

தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு திருமணம்… எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்…!!!

பிரபல நடிகை ஹரிப்பிரியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரபல முன்னணி நடிகையான ஹரிப்பிரியா 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழில் கனகவேல் காக்க, முரண், வல்லக்கோட்டை திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் கடைசியாக மிருகமாய் மாற திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார். இவரும் நடிகர் வசிஷ்ட சிம்ஹாவும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரின் குடும்பத்தாரும் காதலுக்கு ஒப்பு கொண்டதால் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜான்வி கபூர் சொன்ன அந்த வார்த்தை…. “அய்யோ” சொல்லி ஆச்சர்யப்பட விஜய் சேதுபதி…!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.  இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நானும் ரவுடி தான் படத்தை 100 முறை பார்த்திருப்பேன். பார்த்துவிட்டு விஜய் சேதுபதி சாருக்கு போன் செய்தேன். சார். நான் உங்களின் பெரிய ரசிகை, ஏதாவது ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை… வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!!!!

சீரியல் நடிகை திவ்யா சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல சீரியல் நடிகர் அருணவும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். அதன் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தார்கள். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றார். இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்பிருக்கும் உயர் ரக புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் வடிவேலு குரலில் “நான் டீசன்டனா ஆளு” பாடல் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடல் மற்றும் பணக்காரன் பாடல்கள்  ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பணம் வாங்கிட்டு நடிக்கல”…. இனி அவர சினிமாவில் நடிக்க விடாதீங்க….. யோகி பாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்…..!!!!!

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தாதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எனி டைம் மனி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் சத்யா ஹீரோவாக நடிக்க, காயத்ரி, நாசர், மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தாதா படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள் என்று யோகி பாபு குற்றம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கால்ஷீட் கொடுக்கல”…. அதான் பொறாமைல என்ன பத்தி புரளி பேசி கிளப்பி விடுறாங்க…. நடிகர் வடிவேலு அதிரடி…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பிறகு படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு…. அவள் பெயரை தான் வைப்பேன்…. ராபர்ட் மாஸ்டர் யாரை கூறுகிறார் தெரியுமா….!!!!

ராபர்ட் மாஸ்டர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்ற பெயரை தான் வைப்பேன். தமிழ் சினிமாவில் நடனத்தால் ஹிட்டான பாடல்கள் நிறையுள்ளது. அப்படிப்பட்ட பாடலை விஜய், சிம்புவை வைத்து கொடுத்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் இவர் கலந்து கொண்டார். பின்னர் நிறைய பிரபலங்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் கூறினார். ஆரம்ப கட்டத்தில் நன்றாக தான் விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவரது கவனம்  ரச்சிதா மீது திரும்பவும் விளையாட்டிலிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வந்த தடங்கல்!… போராடி சொகுசு கார் வாங்கி அசத்திய தமிழ் சீரியல் நடிகை…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சீரியல் நடிகையான திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் சென்ற சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா கணவரை பிரிந்து தனிமையில்  வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அண்மையில் திவ்யாவுக்கு அவர் நடித்துவரும் செய்வந்தி சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வளைகாப்பு நடந்தது. இந்த  நிலையில் திவ்யா புது கார் ஒன்றை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்பமாக இருக்கும் நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. செம க்யூட்…. லவ் டுடே ஹீரோயினின் குழந்தை பருவ போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

லவ் டுடே ஹீரோயின் இவானாவின் குழந்தை பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. “லவ் டுடே” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை இவானா. இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது இயற்பெயர் அரீனா ஷாஜி. இவர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ மற்றும் ஜோதிகாவுடன் நாச்சியார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். இவானா தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பெரியளவில் ஹிட்டாகியுள்ளார். இவரது பெற்றோருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாபா படத்துல மட்டும் தான் அது இருக்கா”…. அப்ப மத்ததெல்லாம் புத்தர் படங்களா….? ரஜினிக்கு பாமக தலைவர் ஆதரவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புரட்சி வீட்டிலிருந்து துவங்குகிறது”…. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”…. வெளியான புகைப்படங்கள்….!!!!

தமிழில் “இது என்ன மாயம்” படத்தின் வாயிலாக திரை உலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பின், நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருதை பெற்றார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் அவர் நடித்து முடித்து உள்ளார். அத்துடன் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக “தசரா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் “ரகு தாத்தா” என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சுமன்குமார் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு ஷான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”….. என்னம்மா தோசை சுடுறாரு….. ஒரு தோசை பார்சல் ப்ளீஸ்….. ஐஸ்வர்யா ராஜேஷை ஜாலியாக கலாய்க்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தான் நடித்த பல திரைப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 10 லட்சம் வியூவெர்ஸா?…. கவனம் ஈர்க்கும் ஶ்ரீகாந்த் பட பாடல்….!!!!

அறிமுக டிரைக்டர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “தீங்கிரை”. இந்த படத்தில் கதாநாயகிகளாக  அபூர்வாராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கின்றனர். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசை அமைத்துள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அத்துடன் இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய “அவிழாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முகம் முழுக்க அசிங்கம், கெட்ட வார்த்தைகள்”…. அதைக் கேட்டாலே மனம் வலிக்கிறது…. நடிகர் பார்த்திபன் திடீர் வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் தற்போது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கி விட்டு சமைப்போம். அப்படி சமூக வலைதளங்களிலும் சில (முகம் முழுக்க அசிங்கத்தை முகமூடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது ஒதுங்கி விடுகிறேன். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் அதைக் கெட்ட வார்த்தைகளால் சொல்லும் போது தான் மனம் வலிக்கிறது. என் மனம் கூசுகிறது என்று பதிவிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொழில்… எதிர்த்து கேள்வி கேட்கும்… கவனம் ஈர்க்கும் பகாசுரன் ட்ரெய்லர்..!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது. ட்ரைலரில் இளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67 படத்திற்கு ரெடியாகும் விஜய்… வெளியான பல சுடசுட தகவல்கள்…!!!!

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க விஜய் தயாராகி வருகின்றார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு படம்…. எதிர்பார்ப்புடன் ரசிகாஸ்..!!!!

புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குங்பூ கலையில் ஜாம்பவானாக திகழ்ந்த புரூஸ் லீ-யின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்களும் ஆவணப் படங்களும் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவரின் வாழ்க்கையை வைத்து மற்றொரு திரைப்படம் உருவாக இருக்கின்றது. இத்திரைப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ இயக்க இருக்கின்றார். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் விருதுகள் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இவர் புரூஸ்லீயின் வாழ்க்கை கதையை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Thunivu : டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது ‘சில்லா சில்லா’ பாடல்….. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்.!!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.. ஹெச் வினோத் -அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட  படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட  முடிந்துள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க…! 24 மணி நேரத்தில் 1 கோடி வியூஸ் கடந்த “தீ தளபதி”….!!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUSTIN: “துணிவு” செம மாஸ் அறிவிப்பு…!!!!

அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில், இந்த பாடலை அனிருத் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. “துணிவு” பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இந்த காமெடி நடிகரா….? அவரே சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத். இவர் அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கியுள்ள நிலையில், தற்போது இவர் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் யோகி பாபுவை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அவரிடம் கதையும் கூறிவிட்டேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… நடிகர் ஜெயம் ரவிக்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா…..? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் அடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.[ இவர் தற்போது அகிலன், இறைவன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 67″…. விக்ரம் பாணியில் டீசர்?…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் “தளபதி 67”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜையானது இன்று நடைபெற்றுள்ளது. அதாவது சென்னையிலுள்ள பிரபல ஏவிஎம் ஸ்டூடியோவில் வைத்து இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையிலும் எந்தெந்த நட்சத்திரங்கள் இந்த படத்தின் பூஜையில் பங்கேற்றுள்ளனர் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவுடன் போட்டோ எடுத்த பிக்பாஸ் பிரபலம்…. பின்னணி என்ன?… வைரல் புகைப்படம்….!!!!

தமிழக மக்கள் தற்போது அதிகம் வரவேற்பு கொடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 6. எந்த ஒரு சீசனிலும் இல்லாத வித்தியாசங்கள் எல்லாம் இந்த சீசனில்தான் நடந்து வருகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பல பேர் பிரபலமாகி உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஐக்கி பெர்ரி. தற்போது ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம கமல்ஹாசனின் முன்னாள் மனைவியா?… ஆளே மாறிட்டாங்க!…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சென்ற 1988-ம் வருடம் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2004-ம் வருடம் வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல்ஹாசன்-சரிகா தம்பதியினர் பின் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சரிகாவின் சமீபத்திய புகைப்படமானது தற்போது வெளியாகி இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகவும் அதிகம்”… வாரிசு படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தளபதி விஜய் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான சூட்டிங் பல்வேறு மாதங்களுக்கு முன்பே துவங்கி தற்போது வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படம் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் டீஸர் தொடர்பாக அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

21 மணி நேரத்தில்….. “1 கோடி பார்வையாளர்கள்”….. பட்டையை கிளப்பும் ‘தீ தளபதி’ பாடல்..!!

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா சாப்பிட்டு 6 நாள் ஆச்சு!… ஓ இது தான் நல்ல படமோ?… டிரைக்டர் வினோத்தை கேலி செய்த தளபதி ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்குமார், டிரைக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம்தான் “துணிவு”. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன் மஞ்சுவாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் டிரைக்டர் வினோத் பேட்டி அளித்தபோது, வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படத்தில் இருந்து சூர்யா விலகியதற்கு காரணம் என்ன?…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டிரைக்டர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து தயாராகி வந்த “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக நேற்று அறிக்கை வெளியானது. தற்போது இதற்கு பதில் அளித்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. Herewith we share the official note from the Desk of Director #Bala @IyakkunarBala @rajsekarpandian @2D_ENTPVTLTD#DirBala #வணங்கான் #Vanangaan pic.twitter.com/hXKsHHfD08 — Done Channel (@DoneChannel1) December 4, 2022 அதாவது, பாலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… துணிவு மட்டும்தான் ரிலீசா….? அப்ப வாரிசு பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா….? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமாக தற்போது இருந்தே மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் மகத் ஒரு ஷாக்கிங் செய்தியை கூறியுள்ளார். அதாவது துணிவு திரைப்படம் தான் பொங்கலன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் அதிக வசூல் சாதனை புரிந்த தமிழ் திரைப்படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருகிறது. இதில் எல்லா படமும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களை கவர்ந்து மனதில் என்றென்றும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு திரையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. என்னப்பா இது…. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே…. மைனாவுக்கு அந்த மாதிரி புத்திலாம் இருக்குதாம்…..!!!!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று குயின்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த எலிமினேட் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியான பிறகு 2-வது ப்ரோமோவும் வெளியானது. அந்த ப்ரோமோவின்படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இவரை பாராட்டினால் கண்டிப்பாக பின்னால் போய் ஏதாவது பேசுவார் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதோடு யாராவது ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள் எனவும் கமல் கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழகத்தின் வருங்கால முதல்வரே!.. மக்களின் தளபதியே!…. பதவி பிரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்…. அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக  வலம் வரும் விஜய் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டம் செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ள சத்தியாகிரக சேவா கோவிலில் தளபதி விஜய் சினிமா துறையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ததோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மத்தவங்களுக்காக வாழ்வது ரொம்ப கஷ்டம்”….. ரொம்ப ஆபத்தானதும் கூட…‌ நடிகை ஸ்ருதிகாசன் திடீர் அட்வைஸ்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் முகம் எல்லாம் வீங்கியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழ்வது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில் மற்றவர்களுக்கு பிடிக்கும் விதமாக உடை அணிவது, பேசுவது, நடப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் சுதா கொங்கரா.? வைரலான செய்தி… விளக்கமளித்து பதிவு..!!!!

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் ரோஜாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு ஹிட் சீரியல்…. அட என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏனெனில் மதிய வேலைகள் மற்றும் இரவு வேலைகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் வேலைகளை முடித்துவிட்டு டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மற்றொரு ஹிட் சீரியலையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இரவு 10 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!.. இவருக்கு வெளில நடக்கிறதெல்லாம் தெரிதுப்பா…. அசீம் பதிலை கேட்டு ஆடிப் போன பார்வையாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் பற்றி கூறுங்கள் என்கிறார். அப்போது மைனா நந்தினி தனக்கு புறம் பேசும் புத்தி இருக்கிறது என்று கமலிடம் கூறுகிறார். இந்நிலையில் பாப்புலாரெட்டி லெவல் பற்றி கேட்கையில் ஏடிகே தனலட்சுமியின் போட்டோவை ரெட் ஜோனில் வைத்து அவங்க நடந்து கொள்ளும் விதம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர்: குழந்தைகளுக்காக வாக்குறுதி கொடுத்த விஷ்ணு விஷால்… பெரிய மனசு சார்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,  மறைந்த வெண்ணிலா கபடிக்குழு நடிகர் வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெண்ணிலா கபடி குழு நடிகர் வைரவன் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படத்திலிருந்து சூர்யா விலகல்…! காரணம் இது தானாம்…. லீக்கான தகவல்…!!

பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், கதையில் நிகழ்ந்த சில மாற்றத்தால் வணங்கான் கதை தம்பி சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. என்னால் தம்பிக்கு சிறு தர்மசங்கடம் கூட வந்துவிடக்கூடாது. அதனால் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் பேசி ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் அஜித்… மாஸ் காட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING: நடிகர் சூர்யா திடீர் விலகல்: பரபரப்பு அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா – பிதாமகன் படத்தை தொடர்ந்து தற்போது ”வணங்கான்” என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா ?  என்கின்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் […]

Categories

Tech |