Categories
சினிமா தமிழ் சினிமா

இம்புட்டு வசூலா லவ் டுடே படம்…! அதிலும் தயாரிப்பாளர்களுக்கு எத்தனை கோடி லாபம் தெரியுமா…? வாயை பிளக்கும் ரசிகாஸ்..!!

லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல கோடிகள் வசூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொந்த ஹோட்டல் திறந்து…. நடிகர் அஜித்திற்கு 6 அடியில் சிலை…. இப்படியொரு ரசிகரா…???

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின்  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதனை கொண்டாடும் விதமாக  ரசிகர் ஒருவர் 6 அடிக்கு அஜித்துக்கு சிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் பட்டாக் கத்தியோடு முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு”…. ரசிகர்களை குஷிபடுத்திய ஜெயிலர் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, ரம்யா பாண்டியன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்., சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு அனிருத் இசையமைக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா நடிக்கும் ”காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றியைடுத்து இயக்குனர் முத்தையா தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“100 நாட்கள் முடிஞ்சுஞ்ட்டு”…. குட் நியூஸ் சொன்ன ரவி-மகா ஜோடி…. குவியும் வாழ்த்து….!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு சோசியல் மீடியாவில் இரண்டு மாதம் வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. அதன் பிறகு நடிகை மகா மற்றும் ரவீந்தர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்தன. இந்நிலையில் ரவி-மகா ஜோடிக்கு திருமணம் ஆகி தற்போது 100 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. தளபதியை தொடர்ந்து தனுசுடன் இணையும் கேஜிஎப் வில்லன்…. வெளியான மரண மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… “சில்லா சில்லா” பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட சிறுமி…. வைரல் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. கடந்த 9-ம் தேதி அனிருத் குரலில் துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு டிரெய்லர் எப்போ தெரியுமா…? ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு…!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின்  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் டிரெய்லரை வரும் 31ஆம் தேதி வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எப்பவுமே அவர்தான் தலைவர்”….. பழசை மறந்து EX. மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தனுஷ்…. வைரல் ட்வீட்…!!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ் தற்போது  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நா சொல்லல எனக்கு எண்டே இல்லன்னு” வைகைப்புயல் வடிவேலு நெகிழ்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி இப்போ ஊரில் இல்ல!… இங்கே Wait பண்ணாதீங்க!…. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 73-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தன் போயஸ் தோட்டவீட்டிற்கு வரும் ரசிகர்களை ரஜினி சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் ரஜினியை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும் போல் கூடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி பார்க்க அதிகாலலை முதல் காத்திருந்தனனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி போல குழந்தை மனசு இருந்தா…. உலகத்துல சந்தோசமா இருக்கலாம்…. வைரல் போஸ்டர்…!!!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியை குழந்தையாக உருவகித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னா, உங்களை போல குழந்தை மனசா இருக்கணும்” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ பாசமுள்ள மனிதனப்பா” ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து…!

ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துசொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பாசமுள்ள மனிதனப்பா, நீ மீசவச்ச குழந்தையப்பா, நன்றியுள்ள ஆளப்பா நல்லதம்பி நீயப்பா. தாலாட்டி வளர்த்தது, தமிழ்நாட்டு மண்ணப்பா. தங்கமனம் வாழ்கவென்று தமிழ்சொல்வேன் நானப்பா என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”…. வெளியான டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிப்பில் பிஸியாகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் வருடம் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது. இப்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களை தன் கைவசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்!…. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்….!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்தனைகள்”…. பாஜக அண்ணாமலை ட்வீட்….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது மைல் கல்லை எட்டும் “வாரிசு” படத்தின் ரஞ்சிதமே பாடல்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய், மானசி இணைந்து பாடிய இந்த பாடல் இதுவரை யூடியூப்பில் 9 கோடி (90 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”… 24 மணி நேரத்தில் சாதனை படைத்த சில்லா சில்லா பாடல்….. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!!!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் டைரக்டில் உருவாகி வரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு தயாராகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், உண்மையான கதையில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூட்டிங் தளத்தில்…. நடிகர் ஆர்யாவின் 41-வது பிறந்தநாள் கொண்டாட்டம்…. பின் நடந்த நிகழ்ச்சி….!!!!

நடிகர் ஆர்யா நடிக்கும் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படத்தின் சூட்டிங் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்யாவின் 41வது பிறந்தாளை சூட்டிங் தளத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கேக் வெட்டி படக் குழுவினருடன் இணைந்து ஆர்யா தன் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் படக்குழு சார்பாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, டைரக்டர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து”…. டுவிட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “எனது இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடுக்கடலில் அமர்ந்திருக்கும் மாடர்ன் அழகியே….!” ஐஸ்வர்யா மேனனின் ஹாட் ஃபோட்டோ ஷுட்..!!!!

நடுக்கடலில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோதல்: சண்டையிடும் விஜய்-அஜித் ரசிகாஸ்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்…!!!!

மிக மோசமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. அண்மையில் விஜய், “அவர் என் நண்பர் தானே. அவரின் திரைப்படம் நன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட..! அம்மாவை உரித்து வைத்தது போல மகள்…. முதன் முதலாக தன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா…!!!

ஆர்யாவின் பிறந்தநாள் அவருடைய வீட்டில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் கணவர் ஆரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு சாயிஷா வாழ்த்துக்களை தெரிவித்து தங்களுடைய மகளின் முகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்றிருந்த நடிகை சாயிஷா இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் குழந்தையின் முகம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து குழந்தை ஆரியானா, ஆர்யா, சாயிஷா ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய நடிகை வெளியேறிவிட்டாரா…?” ரசிகர்கள் ஷாக்..!!!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து பிரபல நடிகை வெளியேறியதாக செய்தி வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி நெடுந்தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் கணவன் ஏமாற்றிய பிறகு துவண்டு விடாமல் தைரியத்துடன் உழைத்து தனது குடும்பத்தை பாக்கியலட்சுமி கவனிக்கின்றார். இந்த தொடரில் ரித்திகா நடித்து வருகின்றார். இவர் அண்மையில் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஹனிமூன் சென்ற ஃபோட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்திருந்தார். இந்த நிலையில் ரித்திகா திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow..! அப்படியே அஜித் மாதிரியே இருக்கே… உருவ சிலையை செய்து அசத்தல்…!!!!

அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் உருவ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திலிருந்து சமீபத்தில் “சில்லா சில்லா” பாடல் வெளியாகி அனைவரையும் ஆட்டம் போட செய்தது. இந்தப் படம் வருகின்ற பொங்களுக்கு வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். ரசிகர்கள் அவ்வபோது தங்களுக்கு பிடித்த நடிகர்களின் உருவ சிலையை செய்வது வழக்கம். அந்த வகையில் அஜித்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… இது வேற லெவல்…. ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா…. மிரட்டலான டீசர் வீடியோ இதோ….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பைவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜயின் “தளபதி 67” படத்திலிருந்து விலகியது ஏன்….? உண்மையை போட்டுடைத்த நடிகர் விஷால்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தன்தின்  சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா… இதோ புகைப்படம்…!!!

அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளது. கமல், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று இன்றளவும் டிவியில் ஒளிபரப்பாகும் போது அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். இத்திரைப்படத்தில் கமல் மற்றும் மீனா இருவரின் மகளாக Annie என்ற குழந்தை நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த குழந்தையின் தற்போதைய நிலைகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… நீங்க விஜயகாந்த் ஆளு என சொல்லி அசிங்கப்படுத்திய வடிவேலு?….. பகீர் கிளப்பிய பிரபல நடிகர்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலுக்கு சில பிரச்சினைகளின் காரணமாக சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகரும், தேமுதிக கட்சியின் பிரமுகருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நடிகர் வடிவேலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! நடிகர் நெப்போலியன் வீடு இவ்வளவு பிரமாண்டமாக இருக்குதா…? இதோ போட்டோஸ்..!!!

நடிகர் நெப்போலியனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவ்வபோது விவசாய நிலங்களின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிடுவார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல யூட்டியூபர் அவரின் வீட்டிற்கு சென்று சுற்றிப் பார்த்து இருக்கின்றார். அதில் சில புகைப்படங்கள் இதோ.!

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!….. நடிகர் சூர்யாவுக்கு “வணங்கான்” படம் டிராப்பால் இத்தனை கோடி நஷ்டமா…..? வெளியான ஷாக் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் போன்ற  படங்களுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென படத்தின் கதை நடிகர் சூர்யாவுக்கு செட்டாகாது எனக்கூறி பாலா அறிவித்தார். அதோடு நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகப்போவதாகவும்  பாலா  அறிவித்தார். இதனையடுத்து நடிகர் சூர்யாவும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ‌விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS-6: அவங்க வேணா ரன்னர் ஆகட்டும்… ஆனா இவங்க தான் வின்னர் ஆகணும்… வனிதா ஓபன் டாக்..!!!

பிக்பாஸ் ரன்னர்-வின்னர் குறித்து வனிதா பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இது ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் வனிதா பிக்பாஸ் குறித்து பேசி இருக்கின்றார். அவர் தெரிவித்திருப்பதாவது, சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றார். டாஸ்குகளை பொருத்தவரை அசீம் சிறப்பாக விளையாடுகின்றார். ஆகையால் அவர் இரண்டாவது இடம் கூட வரட்டும். ஆனால் வின்னராக சிவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG!… தளபதியின் வாரிசு படத்தின் டிக்கெட் கட்டணம் இவ்வளவா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா என்கிட்ட அழுது புலம்புனாங்க”…. 2 வருடத்திற்கு பிறகு உண்மையை சொன்ன நடிகை சரண்யா….!!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது.  சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா  திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67-ல் விஜய் இப்படி தான் இருப்பாராம்… ஃபர்ஸ்ட் டைம்யா… வெளியான நியூ அப்டேட்..!!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி மனைவியுடன் நடு ரோட்டில் சண்டை போட்ட விஷால்….. காரணம் என்ன….? அவரே சொன்ன தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் நான், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு நானும், கிருத்திகாவும் நடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் எல்லோரும் முன்பும் திடீரென கண் கலங்கிய கமல்…. அப்பா, அம்மாவை நினைத்து உருக்கம்….!!!!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக திகழும் கமல்ஹாசனுக்கு தற்போது 68 வயது ஆன நிலையிலும் படு பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில் போட்டியாளர்களிடம் அவர்களின் பெற்றோர் குறித்து கேட்டார். அதற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் பெற்றோர்கள் செய்த விஷயத்தை பற்றி கூறினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் திடீரென கண் கலங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல்-கோலங்கள் வித்தியாசம் என்ன…? பதில் அளித்த இயக்குனர்… பெண்கள் மகிழ்ச்சி..!!!

கோலங்கள் மற்றும் எதிர் நீச்சல் தொடர் குறித்து இயக்குனர் பதில் அளித்துள்ளார். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி உள்ள கோலங்கள் தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது எதிர் நீச்சல் தொடரும் வெற்றி நடை போடுகின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரின் வசனகர்த்தா ஸ்ரீவித்யா கோலங்களில் வரும் பெண்களுக்கும் எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என இயக்குனரிடம் கேட்கின்றார். இதற்கு இயக்குனர் பதில் அளித்துள்ளதாவது, கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… பிக்பாஸால் சர்ச்சை… விளாசும் நெட்டிசன்ஸ்..!!!!

பிக்பாஸை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எபிக்ஷன் இருக்கின்றது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிஷா, ராம், ஜனனி, அசீம், கதிர், ஏ.டி.கே உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். எப்போதும் வீட்டில் இருந்து யார் வெளியேற போகின்றார் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எழுமினேட் செய்யப்படும் இரண்டு நபர்கள் யார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்கள் ராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாஜியின் புகழ்பெற்ற திரைப்படம்… காசி தமிழ் சங்கத்தில் திரையீடு…!!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் பெற்ற திரைப்படம் கர்ணன், திருவிளையாடல். இந்த படங்களுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாமனிதன். இந்த 2 திரைப்படமும் காசி தமிழ் சங்கத்தில் திரையிடப்படுகிறது. அதாவது கர்ணன் திரைப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி 2 மணிக்கு திரையிடப்படுகிறது. அதேபோல் டிசம்பர் 13-ஆம் தேதி 2 மணிக்கு காசி தமிழ் சங்கத்தில் திருவிடையாடல் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனையடுத்து மாமனிதன் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிசம்பர் 9-ல் ரிலீஸான 8 படங்கள்… வசூலில் தள்ளாடுதல்… காரணம் என்ன..??

டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியான திரைப்படங்கள் தள்ளாடி வருகின்றது. சென்ற டிசம்பர் 9-ஆம் தேதி ஈவில், DR 56, எஸ்டேட், குருமூர்த்தி, நாய் சேகர் ரிட்டன்ஸ், ஸ்ரீ ராஜராஜ மணிகண்டன், வரலாறு முக்கியம், விஜயானந்த் உள்ளிட்ட 8 திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் 10-ம் தேதி ரஜினியின் பாபா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. நேற்று வெளியாகிய பாபா திரைப்படம் கூட வசூலில் சில பல லட்சங்கள் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கின்றது. ஆனால் சென்ற டிசம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமலின் முதல் மனைவி வாணி கணபதி இப்ப எப்படி இருக்காங்கன்னு தெரியுமா….? இதோ லேட்டஸ்ட் புகைப்படம்…!!!!!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 1978-ம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து ஹாட் பிக்ஸை பதிவிடும் ஜான்வி கபூர்… காரணம் என்ன தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க..!!!

தொடர்ந்து ஜான்விகபூர் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் சோசியல் மீடியாவில் 21 மில்லியன் பாலோ செய்கின்றார்கள். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அதிலும் குறிப்பாக கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவிக்கின்றார். சென்ற 2 நாட்களுக்கு முன்பாக பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட்டார். அவற்றிற்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… செம க்யூட்…. மகளை அறிமுகப்படுத்திய “ஆர்யா-சாயிஷா” ஜோடி…. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ‌ நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் சாய்ஷா ஜோடி. கடந்த 2019-ம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு Ariana என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை சாய்ஷா தன்னுடைய கணவர் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வாழ்த்து பதிவுடன் தங்களுடைய மகளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் நுழைய ரெடியாக இருக்கும் ஜெயராமின் மகள்?…. வெளியான தகவல்…..!!!!!

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயராம். இப்போது குணச்சித்திர வேடங்களில் தான் ஜெயராம் அதிகமாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார். ஜெயராமின் மொத்த குடும்பமும் திரைத்துறையில் தான் இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெயராமின் மனைவி சாந்தி 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். அதேபோல் ஜெயராமின் மகனான காளிதாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் நடிகராக வலம் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS வீட்டிலிருந்து வெளியேறிய ராம்…. எவ்வளவு சம்பளம் பெற்றார்?…. லீக்கான தகவல்….!!!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர்த்து வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவில்லை. இதனால் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை எலிமினேஷன் இருந்தது. முன்பே கமல்ஹாசன் அவர்கள் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த நிலையில், நேற்று நிகழ்ச்சியில் இருந்து ராம் வெளியேறியுள்ளார். இதில் ராம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூபாய். 15 முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரிலீசான “பாபா”…. முதல் நாளில் மட்டும் இவ்வளவு லட்சம் வசூலா?…. வெளியான தகவல்….!!!!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற 2002-ம் வருடம் வெளியான திரைப்படம் “பாபா”. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். அன்றைய காலக்கட்டத்தில் படுதோல்வி அடைந்த இந்த படத்தை மீண்டும் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரிலீசான பாபா படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் அடுத்த அப்டேட்…. வில்லன் கதாபாத்திரம் யாருக்கு?…. வெளிவரும் தகவல்….!!!!

துணிவு திரைப்படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் படம் “ஏகே 62”. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதனிடையில் அஜித்துக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்கபோவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்து உள்ளது. விஜய் சேதுபதிதான் வில்லன் என தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை என விஜய்சேதுபதியே தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படத்தில் இணையும் கே.ஜி.எப் பட வில்லன்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் வந்தது. மேலும் “த கிரேமேன்” என்ற ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியது. இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இவற்றில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்துக்கு பின் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகவுள்ள சரித்திர கதை அம்சம் உள்ள திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சலூன்” படம்…. புது தோற்றத்தில் மிர்சி சிவா…. வெளியான போஸ்டர்…. இணையத்தில் வைரல்….!!!!

சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு ஆகிய திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தவர் மிர்சி சிவா. இவர் அண்மையில் நடித்த காசேதான் கடவுளடா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கன்னிராசி, தர்மபிரபு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் “சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரேதன் சினிமாஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் […]

Categories

Tech |