Categories
சினிமா தமிழ் சினிமா

காலாவதியான பாபா…! மூத்த குடிமக்கள் தான் பார்க்குறாங்க.. கடுமையாக விமர்சித்த ப்ளு சட்டை..!!!

பாபா 2 திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் புதுப் பொலிவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ வீட்டில் மரணம்..! “என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது”… சோகமாக பதிவு..!!!

நடிகை குஷ்பூவின் அண்ணன் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு என்ன பல மொழிகளில் முன்னணி நடிகையாக 80,90-களில் வலம் வந்தார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும்  இருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் தனது மூத்த சகோதரர் அபூபக்கர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் சென்ற நான்கு நாட்களாக வென்டிலேட்டரில் இருந்து வருவதாகவும் நேற்று தான் அவரின் உடல்நிலையில் சிறிது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! சூப்பர் ஸ்டார் ஃபேமிலியும் இசை புயல் ஃபேமிலியும் எடுத்த செல்பி போட்டோ … சோசியல் மீடியாவில் வைரல்..!!!

ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரகுமானும் மகனும் எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அமைக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்கள். இதன் பின்னர் விமானம் மூலமாக கடப்பா சென்றார்கள். இவர்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் கடப்பாவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புது பொலிவுடன் ரிலீஸ் செய்யப்பட்ட பாபா 2” .. வசூல் எவ்வளவு தெரியுமா..?

பாபா 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினை நம்பும் பிரபல இயக்குனர்… செம்பி படத்தின் 2-வது ட்ரைலர் ரிலீஸ்..!!!

அஸ்வின் நடிக்கும் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் 2-ம் ட்ரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் “சர்க்கார் வித் ஜீவா”… எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகிறது தெரியுமா..???

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சர்க்கார் வித் ஜீவா நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா, இவர் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடிக்காக புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஆகா என்ற ஓடிடி தளத்தில் சர்க்கார் வித் ஜீவா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப இருக்கின்றது. இதற்கான புரோமோ அண்மையில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா இது…. ஒரே ஸ்கிரீனில் ரெண்டு படம் ஓடுது…. தமிழ் இயக்குனரின் புதிய முயற்சி கைகூடுமா….??

ஒரே திரையில் இரண்டு திரைப்படங்களை காட்டும் புதிய முயற்சியில் தமிழ் இயக்குனர் கையில் எடுத்துள்ளார். ரசிகர்களை புது புது முயற்சிகளை மேற்கொண்டு எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் ஜெகன் வித்யா என்பவர் இரண்டு திரைப்படங்களை ஒரே திரையில் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு பிகினிங் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகினி உள்ளிட்டோர் நடித்திருருக்கின்றார்கள். மேலும் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான “அவதார்-2″…. முதல் நாளில் எவ்வளவு வசூல்?…. வெளியான தகவல்….!!!!

உலக திரையுலகில் சில திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அதுபோன்ற படங்களின் வரிசையில் அவதார் படமும் இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாக வெற்றியை அடுத்து நேற்று அவதார் 2 படம் ரிலீஸ் ஆகியது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படம் தொழில்நுட்ப விஷயங்கள் கதையை தாண்டி அதிகம் பேசப்படும். அவதார்-2 திரைப்படம் டிசம்பர் 16 நேற்று உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெளியாகி இருக்கிறது. எனினும் இந்த படம் டிசம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் பட இயக்குனரை தன்யா ரகசிய திருமணம் செய்தாரா?…. நடிகை கல்பிகா சொன்ன திடீர் தகவல்……!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன். சென்ற 2011 ஆம் வருடம் சூர்யா நடிப்பில் வெளியாகிய 7ம் அறிவு படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால் அங்கு தன்யா பல படங்கள் நடித்து வருகிறார். எனினும் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் செய்வது ஓவர் ஆக்ட்டிங் போல் இருக்கா?…. சூப்பர் சிங்கர் ஷிவாங்கி பதிலடி…..!!!!!

பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

44 வயதில் நீச்சல் குளத்தில் இப்படியா…..? சூர்யா பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோவால் அசந்து போன ரசிகாஸ்….!!!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை பூமிகா. தமிழில் இவர் நடித்த பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. மேலும் கடந்த 2018 ஆம் வருடம் சமந்தா நடிப்பில் வெளியாகிய U Turn திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பூமிகா நடித்தார். அத்துடன் கண்ணை நம்பாதே என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதற்கிடையில்  நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக்கூடிய ஒரு பிரபலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் பெரிய ஸ்டார்?…. வாயைக் கொடுத்து மாட்டிய தில்ராஜு…. அஜித் மேனேஜர் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!

தளபதி விஜய்யை விடவும் அஜித் பெரிய ஸ்டார் இல்லை. அதனால் வாரிசு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தில்ராஜு கூறியது இப்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர். எனினும் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் கலந்துகொள்ளபோவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஏனெனில் நல்ல படத்திற்கு அதுவேதான் விளம்பரம் என அஜித் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் அஜித்தின் பிஆர்ஓ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படத்தின் கதையை நிராகரித்த டாப் ஹீரோக்கள்”…. புது குண்டை தூக்கிப்போட்ட தில் ராஜு…. ஆடிப்போன ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

13 வருஷத்துக்கு பின் இணைந்த ஈரம் கூட்டணி…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

திரில்லர் மற்றும் துப்பறியும் கதைகளை டைரக்டு செய்வதில் வல்லவரான இயக்குனர் அறிவழகன் அண்மை காலமாக நடிகர் அருண்விஜய் வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இப்போது சபதம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார். கடந்த 13 வருடங்களுக்கு முன் வெளியாகிய ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை பெற்றுத்தந்தார். இந்த நிலையில் சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தின் துவக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“25 வருடங்களுக்கு முன் கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை”…. புகைப்படம் வெளியிட்ட கமல்…. வைரல் ட்வீட்…!!!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழகத்தில் விஜய் தான் NO.1″….. உதயநிதி கிட்ட பேச போறேன்…. கொந்தளித்த தில் ராஜு…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்….. பிரபல இயக்குனர் பாரதிராஜாவுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிஷேஷன் அமைப்பு நடத்துகிறது. இந்த விழாவை தமிழக செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி விட்டதால், எல்லா விழாக்களும் நடைபெறுகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல செய்தி சொன்ன அட்லீ – பிரியா தம்பதி…. இணையத்தில் வெளியான தகவல்…..ரசிகர்கள் வாழ்த்து…!!!!

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் அட்லீ. இவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று தன்னுடைய காதல் மனைவியான பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பெற்றோர்கள் ஆக போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக சமூக வலைதளங்களில் அட்லீ – பிரியா தம்பதியினர் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு…. போட்டோவுடன் குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லி…. குவியும் வாழ்த்து…!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் 2022-ல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன்-2: நடிகர் கமலுக்கு எந்த கதாப்பாத்திரம் தெரியுமா?…. நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்….!!!!

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல்பிரீத் சிங். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK,ஸ்பைடர் போன்ற படங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இப்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் ரகுல்பிரீத் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டியில் “இந்தியன் 2ல் 90 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… தனி படமாக உருவாகும் சூர்யாவின் “ரோலக்ஸ்”…. லோகேஷ் கனகராஜின் அறிவிப்பால் செம குஷியில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்குப் பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களையும் லோகேஷ் இயக்க இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியலில் 5 தமிழ் நடிகர்கள்….. யாருக்கு என்ன இடம்னு நீங்களே பாருங்க….!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  ஆசிய நடிகர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நடிகர்கள் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் நடிகர் விஜய்க்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதேப்போன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!… “துணிவு”படத்தின் ரன்னிங் டைம் வெளியீடு?… செம குஷியில் ரசிகாஸ்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்தத் தருணத்தில் இறந்திருந்தால் கூட மகிழ்ச்சிதான்”…. விஜய் தூக்கியதை நினைத்து நெகிழ்ந்த மாற்றுத்திறனாளி ரசிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை சந்தித்து பேசியபோது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காத்தான் விஜய் அப்படி செய்ததாக பலரும் விமர்சித்தார்கள். ஆனால் விஜயின் ரசிகர்கள் பப்ளிசிட்டிக்காக தளபதி அப்படி செய்யவில்லை ரசிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ப்பமானதை வெளியில் சொல்லாமல் மறைத்தது எதற்காக?…. நடிகை ஸ்ரேயா திடீர் விளக்கம்….!!!!

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு முன்னணியான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண்குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருந்தது குறித்து வெளியில் அறிவிக்கவில்லை. பிறகு திடீரென்று ஒருநாள் தனக்கு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு ராதா என பெயர் சூட்டியிருக்கிறோம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ல் தமிழ் சினிமாவில் தோல்வியடைந்த டாப் ஹீரோக்களின் படங்கள்… முழு லிஸ்ட் இதோ…!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. அதன் பிறகு பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட மக்கள் மனதை கவராமல் தோல்வியை சந்தித்து விடும். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் தோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மகாலட்சுமி…. செம வைரல்….!!!!

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவர் மகாலட்சுமி. இவர் நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் மூலம் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்து கொண்டார்.   திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் அல்வாவை ப்ரொமோட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்விடேஷன் ரெடி பண்ணு!…. சீக்கிரம் பிரியாணி போடு!…. ஆயிஷாவிடம் ட்ரீட் கேட்ட பிக்பாஸ் பிரபலம்…..!!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே துவங்கி 60 நாட்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது வரை வீட்டிலிருந்து 10 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதற்கிடையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அப்போது ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினர். இதனிடையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது ஷிவின், சீக்கிரமாக இன்விடேஷன் ரெடிபண்ணு, பிரியாணி போடு, குட்நியூஸ் சொல்லு என கேட்டிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படி இருப்பாருன்னு தெரியுமா….? அதை மட்டும் செய்யவே மாட்டாராம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. நடிகர் விஜய் காரில் இதை கவனித்தீர்களா….? வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். கருப்பு நிற பேண்ட் சட்டையில் ஸ்டைலாக வந்திருந்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ரிலீசாகும் தல-தளபதி படங்கள்!…. அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த தியேட்டர் உரிமையாளர்கள்….!!!!

வருகிற பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. எனினும் ரிலீஸ் தேதி தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் இந்த 2 திரைப்படங்களின் முன்பதிவு துவங்கிவிட்டது. அந்த வகையில் ஜனவரி 12ஆம் தேதி தான் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிறது. பண்டிகை தினங்களில் தியேட்டர்கள் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பிக்கொள்ள அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. எனினும் 12ஆம் தேதி பண்டிகை நாள் இல்லை என்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெயிட் போட்ட காஜல் அகர்வால்!…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்….. வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பழநி திரைப்படத்தின் வாயிலாக காஜல் அகர்வால் திரைனயுலகிற்கு அறிமுகமானார். எனினும் முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதையடுத்து 2009 ஆம் வருடம் தெலுங்கில் வெளியாகிய மகதீரா படம் அவருக்கு மிகுந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் விஜய் உடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய 3 படங்களிலும் நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார். காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் வருடம் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட மூணு நண்பர்கள் மினிஸ்டர்… இனி எந்த கவலையும் இல்லை…. புது தெம்போடு இருக்கும் விஷால்…!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும்,  துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் இருக்கிறார்கள். அதன்பிறகு  நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 முறை பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நாசர் தலைமையில் நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் 70% பணிகள் நிறைவடைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தின் கிளைமாக்ஸ் காட்சி…. எப்படி இருக்கு தெரியுமா?…. திலிப் சுப்ராயன் சூப்பர் தகவல்….!!!!

விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. வம்சி இயக்கி இருக்கும் இந்த படத்தை தில்ராஜு தயாரித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகாமந்தனா முதன் முறையாக நடித்துள்ளார். முன்பே இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின் 3-வது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. வருகிற 24ம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதார்-2 திரைப்படம் பார்த்துவிட்டு…. நடிகர் சிம்பு வெளியிட்ட பதிவு…. இணையத்தில் வைரல்….!!!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009ம் வருடம் வெளியான படம் அவதார். இந்த படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் இன்று வெளியாகிறது. இதற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என தலைப்பு வைத்து உள்ளனர். இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்தின் பிரிமீயர் காட்சிகள் சென்ற சில நாட்களாக ஒவ்வொரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனின் புதிய படம்.. 20 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக… வெளியான பட தகவல்..!!!

மாளவிகா மோகனின் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது. நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை. இதன் பிறகு தமிழில் நடித்த பேட்ட திரைப்படம் அவரை பிரபலமடையை செய்தது. இதன் பின்னர் விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்காத இவர் தற்போது கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்பவே வெளிநாட்டில் “வாரிசு” இப்படி… கண்டிப்பா சாதனை படைக்கும்… வெளியான முக்கிய அப்டேட்..!!

வாரிசு திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை அகிம்சா என்ற டைமண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய சாருக்கானின் “பதான்”… படம் வெற்றி பெறுமா..???

இது போல ஏற்கனவே புறக்கணித திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஷாருக்கான் திரைப்படத்திற்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அரசியல் வசனங்கள், பாலாபிஷேகம்”…. ரசிகர்களுக்கு தளபதி போட்ட உத்தரவு?…. இத ஃபாலோ பண்ணுவாங்களா…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து  சமீபத்தில் மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி”…. ஆனந்தத்தில் கண்ணீரோடு கணவரை கட்டியணைத்த கிருத்திகா….!!!!

திமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருடைய பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழா முடிவடைந்த பிறகு அமைச்சர் உதயநிதிக்கு குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய கணவர் அமைச்சரானதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த கிருத்திகா அவரை கட்டி அணைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யாரையும் நம்ப கூடாது”…. தடுக்கி விழுந்தா கூட தூக்கி விட மாட்டாங்க”…. கடும் வருத்தத்தில் இயக்குனர் செல்வராகவன்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… வாரிசு படத்தில் எஸ்.ஜே சூர்யா தான் வில்லனா….? டுவிஸ்டை உடைத்த பிரபல நடிகர்…. கடுப்பில் படக்குழு…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!.. அட!… என்ன மனசுயா!… சக நடிகருக்காக தல அஜித் செய்த உதவி…. நெகிழ்ந்து போன ரசிகாஸ்….!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்ங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் ஜான் கொக்கனுக்கு நடிகர் அஜித் சண்டை காட்சிகளின் போது ஏற்படாமல் இருப்பதற்காக அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை பரிசாக வழங்கியுள்ளார். இந்த அதி நவீன பாதுகாப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டாப் ஹீரோக்கள்?…. குஷியில் ரசிகாஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் திருப்பதி, நெக்ஸ்ட் தர்கா”…. இசை புயலுடன் சேர்ந்து நடிகர் ரஜினி வழிபாடு…. நெகிழ்ச்சி தருணம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன்-2 கதை என்ன..?” பிரபல எழுத்தாளர் பேட்டி..!!!

இந்தியன் 2 திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

13 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் அந்த கூட்டணி… ஆதியின் புதிய திரைப்படம்.. படத்தின் பூஜை ஆரம்பம்..!!!

13 வருடங்களுக்கு பிறகு ஆதி-அறிவழகன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகின்றது. பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்குகின்றார். இவர்கள் கூட்டணியில் சென்ற 2009 ஆம் வருடம் ஈரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதன்பின் இந்த கூட்டணி இணையாமல் இருந்த நிலையில் தற்போது 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகின்றது. இந்த திரைப்படத்திற்கு சப்தம் என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் “பத்தல பத்தல”… 10 கோடி வியூவர்ஸ்கள்… சாதனை படைத்த விக்ரம்..!!!

விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி ஹிட்டானதோடு 400 கோடி வசூல் சாதனையும் செய்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியுப்பில் பத்து கோடி பார்வைகளை கடந்து சாதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பிள் சேலையில் கூட தங்கசிலை போல் ஜொலிக்கும் பிரபல சீரியல் நடிகை… வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. இதையடுத்து இவர் மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியலில் நடித்து இப்போது பிரபலமாகி உள்ளார். இவரது சீரியல்கள் சூப்பர் ஹிட் என்றே கூறவேண்டும். இந்த நிலையில் தற்போது வினோத்பாபு நாயகனாக நடிக்கும் சீரியலில் பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக […]

Categories

Tech |