Categories
இந்திய சினிமா சினிமா

அட!… என்ன‌ மனசுயா….. நள்ளிரவு வரை காத்திருந்து பிரியாணி பரிமாறிய பிரபாஸ்…. நெகிழ்ந்து போன சூர்யா….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இத்தனை கோடியா?… வசூலில் புதிய மைல் கல்லை எட்டிய “PS-1″….. உலக அளவில் கிடைத்த பெருமை…..!!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் 465 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“40 வயதிலும் மாறாத இளமை”….‌ திடீரென லுக்கை மாற்றிய மீரா ஜாஸ்மின்…. லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப் பிளந்த நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இந்த படத்திற்கு பிறகுநடிகர் விஜய், ஸ்ரீகாந்த், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மீரா ஜாஸ்மின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர் சர்ச்சை கருத்துக்கள்”…. தவறான செய்திகளால் வேதனையில் நடிகை ராஷ்மிக்கா…. அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் ராஷ்மிகா பற்றி சமீப காலமாகவே இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமதித்ததால் அவரை கன்னட சினிமாவில் இருந்து நிரந்தரமாக விளக்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா தன்னைப் பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS-ல் இருந்து வெளியேறியதும்…. ராபர்ட் மாஸ்டர் நடிக்கும் பட போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்த போது ராபர்ட் மாஸ்டர் பெரிதாக எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு இன்றி இருந்தார். இதன் காரணமாக அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்ப எனக்கு பரிசு இல்லை… கவலையுடன் பதிவிட்ட வெங்கட் பிரபு… கவனம் ஈர்க்கும் பதிவு..!!!

வெங்கட் பிரபுவின் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தனுஷுடன் நடிக்க சம்பளம் வேண்டாமா?….. சிம்பு பட நடிகை பேட்டி…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக “வாத்தி” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்முரமாக நடந்து வருகிறது.     View this post on Instagram   A post shared by SunTV (@suntv) அதன்பின் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு படத்தில் தனுஷ் […]

Categories
சினிமா

அச்சச்சோ!!…. ரச்சிதாவுடன் காதல்?…. உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசியுள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மகேஸ்வரி, மணிகண்டா , நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி. முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பலர் குறைந்த வாக்குகளை பெற்று ஒவ்வொரு வாரமும் வெளியேறினர். அதேபோல்  கடந்த வாரம் குறைவான வாக்குகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிபந்தனைகளா.? எதிர்பார்ப்புகளா..? கட்டா குஸ்தி படத்தின் முதல் புரோமோ…!!!!

கட்டாகுஸ்தி திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….. ‘இதை மறந்துவிட்டேனே’…. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர் பதிவு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி  நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிமான்டி காலனி 2 படத்தின் ஷூட்டிங் தொடக்கம்.‌‌.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் குழம்பிப் போன ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ், திலக், மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 7ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருள்நிதி […]

Categories
சினிமா

பிரபாஸ் மீது காதலா?…. கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கிருத்தி சனோன்…..!!!!!

பாகுபலி திரைப்படம் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவருடைய திரைப்படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர் சம்பளத்தை ரூபாய்.100 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக முன்னதாக தகவல் பரவியது. எனினும் காதலிப்பதை இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. இப்போது இந்தி நடிகையான கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புது தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணையதளங்களில் பரவி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே இப்படியா…! ரவுடி பேபி சூர்யா வீடியோ பார்த்து அதிர்ந்த நீதிபதிகள்….

சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக பேசிய ரவுடி பேபி சூரியா  யூடியூப், பேஸ்புக்கில் பதிவிடும் வீடியோக்கள் ஆபாசம், அருவருப்பாக இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்துசெய்யக்கோரி சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இந்த விசரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், ரவுடி பேபி வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு,  சூர்யாவின் வீடியோக்களை பார்த்த நீதிபதிகள் சூர்யாவின் வழக்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பெண்கள் சம்பாதிப்பதால் தான் விவாகரத்து அதிகரிக்கிறது”….. பிரபல பாலிவுட் நடிகை அதிரடி கருத்து…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நீனா குப்தா (69). இவருடைய மகள் மசாபா குப்தா மாடலிங்கில் கலக்கி வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தொழிலதிபர் மது மண்டினா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை 4 வருடத்திற்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். இவர் தற்போது நடிகர் சந்தீப் மிஸ்ராவுடன் பழகி வரும் நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நீனா குப்தா நேற்று ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!…. கிளீன் சேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கும் அஜித்…. இணையத்தை தெறிக்க விடும் New Look Photo…!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் ‌ நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இறந்துட்டேன்னு நினைச்சு நிறைய பேர் போன் பண்றாங்க”…. ஆனா நான் இன்னும் சாகல…. வதந்திக்கு நடிகை லட்சுமி பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் பழம்பெரும் நடிகை லட்சுமி. இவர் இறந்துவிட்டதாக காலை முதலே செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் நடிகை லட்சுமிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் நடிகை லட்சுமி இறந்தது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை லட்சுமி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அதிகாலையில் இருந்து நிறைய பேர் தொலைபேசி வாயிலாக தொடர்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது தாறுமாறு”….. கையில் கிளாஸ் உடன் கெத்தா அமர்ந்திருக்கும் தளபதி…. மாஸ் லுக்கில் வெளியான வாரிசு பட புதிய போஸ்டர்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நியூசிலாந்தில் பாடல் காட்சியினை நிறைவு செய்த டிரைக்டர் ஷங்கர்…. வெளியான புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க!…. பொங்கி எழுந்த விக்ரமன்…. சூடுப்பிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்…..!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் தற்போது 14 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரம் பழங்குடியினருக்கும், ஏலியன்களுக்கும் இடையில் வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான 2வது புரோமோவில் பழங்குடியினரான அசீம், […]

Categories
சினிமா

அதை மட்டும் நிரூபித்தால்!…. நான் படம் இயக்குவதை விட்டு விடுகிறேன்!…. சவால் விடும் விவேக் அக்னிஹோத்ரி…..!!!!

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவரான நடாவ் லாபிட் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் பற்றி  விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இவையெல்லாம் எனக்கு புதிதல்ல. Terror supporters and Genocide deniers can never silence me. Jai Hind. #TheKashmirFiles #ATrueStory pic.twitter.com/jMYyyenflc — Vivek Ranjan Agnihotri […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷ் வழக்கு”…. கதிரேசன் மேல் முறையீடு…. நீதிமன்றம் போட்ட உத்தரவு……!!!!

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கதிரேசன் மேல்முறையீடு செய்திருக்கிறார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் நீதித்துறை நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் தனுஷ் வழக்கில் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதாவது, தனுஷ் தன் மகன் எனக் கூறி மதுரை மேலுரை சேர்ந்த கதிரேசன் என்பவர் நீண்டகாலமாகவே வழக்காடி வருகிறார் […]

Categories
Uncategorized சினிமா

உங்களுக்கு கொஞ்சம் கூட மானம் இல்லையா?…. பிக்பாஸ் வீட்டில் சூடு பிடிக்கும் சண்டை….. வெளியானது பரபரப்பு ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போட்டியாளர்கள் பலரும் தெரிந்தவர்கள் தான். கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுவது இல்லை எனக் கூறி கடுமையான கோபத்தில் பேசியிருந்தார். இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மிக விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” ட்ரெய்லர் தேதி இதுதான்…! ரசிகர்களுக்கு மாஸான அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் படத்தின் 3வது பாடல்…. இணையத்தில் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. “கட்டா குஸ்தி” படத்தின் 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் 3வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி-2: ரா ரா சரசுக்கு ராரா கதாபாத்திரம் யாருக்கு?….. வெளிவரும் மாஸ் தகவல்கள்…..!!!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டிரைக்டர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். இதையடுத்து 17 வருடங்களுக்கு பின், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த படம் “சந்திரமுகி 2” எனும் பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அத்துடன் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. […]

Categories
சினிமா

OMG: பிரபல திரைப்பட நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஹாலிவுட் ஜாம்பவான்  கிளாரன்ஸ் கிலியார்ட் ஜூனியர் (66) காலமானார். இவரின் மரணத்தை லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நூல்களை கல்லூரியில் நாடகம் மற்றும் திரைப்பட பேராசிரியராக இருந்தவர். டை ஹார்ட், டாப் கன்போன்ற படங்களின் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்றவர் இவர். அது மட்டுமல்லாமல் வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் மேட்லாக் தொடர்களிலும் நடித்துள்ளார். கிலியார்ட் முன்பு கேத்தரின் டட்கோவை மனந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு 2001 ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரொம்ப வருஷமா காதலிக்கிறேன், திருமணம் செய்வத தவிர வேறு வழியே இல்ல”….. சமந்தாவிடம் உருகிய மாஜி கணவர்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாக  சைதன்யாவும் 7 வருடங்கள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் நாகசைதன்யா ஒரு பேட்டியில் கூறியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக நானும் சமந்தாவும் ஒரு படப்பிடிப்பில் சந்தித்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாப்ஸி நடிக்கும் “ப்ளர்”… ட்ரெய்லர் ரிலீஸ்…!!!

டாப்ஸி நடிக்கும் ப்ளர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் டாப்ஸி தற்போது ப்ளர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 2010 ஆம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஐஸ் திரைப்படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகி இருக்கின்றது. டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை அஜய் பாஹர் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள்…. முதலிடத்தில் யார் தெரியுமா…..? இதோ நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலிக்கும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு நடிகை சமந்தா ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரில்லர் கதை கொண்ட “தீங்கிரை”… ட்ரைலர் ரிலீஸ்…!!!

தீங்கிரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தீங்கிரை. இத்திரைப்படத்தை பிரகாஷ் ராகவா தாஸ் இயக்க ஸ்ரீகாந்த், வெற்றி, சுருதி வெங்கட், நிழல்கள் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரை படத்தை டிடபள்யூடி மீடியா பிரைவேட் லிமிட் தயாரிக்க பிரகாஷ் நிகில் இசையமைக்க ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்திருக்கின்றார். இத்திரைபடத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் கவுண்டமணியுடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் SK….? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரத்த சாட்சி டீசரை வெளியிட்ட சிம்பு… படக்குழுவிற்கு வாழ்த்து..!!!

ரத்த சாட்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றான கைதிகள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்த சாட்சி. இத்திரைப்படத்தை ரபிக் இஸ்மாயில் இயக்குகின்றார். இப்படத்திற்கு சாவே தியாஸ் இசையமைக்க ஜெகதீஸ்வரர் பதிவு செய்கின்றார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண மாஸ்டர் என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் டீசரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2022-ல் அதிக வசூல்”…. தமிழ் படங்களில் டாப் 4 லிஸ்ட்…. பிரபல விநியோகஸ்தர் சொன்ன தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் போன்றவைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் 2022-+ம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் படங்கள் குறித்த தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அவர் கூறியபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நட்சத்திர தம்பதியின் மகனை காதலிக்கும் பிக்பாஸ் ஜூலி….? நெருக்கமாக இருக்கும் போட்டோவால் தீயாய் பரவும் செய்தி….!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்  ஜூலி. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வித்தியாசமான கோஷங்களை எழுப்பி அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியவர் ஜூலி. இதன் காரணமாகத்தான் ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலுக்காக மொட்டை அடித்த பிரபல நடிகை…. 55 வயதிலும் இப்படியா….? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வதும் பின்னர் பிரிவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போதுள்ள சினிமா பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பிறகு கருத்துவேறுப்பாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. இவர்கள் நடித்த முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்பு பார்த்திபனை திருமணம் செய்வதற்காக நடிகை சீதா மொட்டை அடித்துள்ளார். பின்பு இருவரும் திருமண செய்து கொண்ட நிலையில் தற்போது விவகாரத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… பிக்பாஸ் விக்ரமனின் திருமணத்தை நினைத்து கண்ணீர் விட்ட தந்தை….. மனதை உருக்கும் பேட்டி….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தொட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக விக்ரமன் இருப்பதோடு, அதிக வாக்குகளையும் பெற்று வருகிறார். விக்ரமன் ஒரு சில சீரியலில் நடித்த நிலையில், அவர் நடித்த சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அரசியல் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோக்கள்…. பிரபல நடிகை புகார்…. சிக்கிய இளைஞர்…!!!

பிரபல நடிகை அனுசுயா பாரத்வாஜ்ஜின் ஆபாசமான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுஷா அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆந்திரா பசிலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடாஜி என்பவர் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டதாக தெரியவந்தது. பின் அவருடைய லேப்டாப்பை ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான நடிகைகளின் மார்பிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை…. சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா?….. ரசிகர்கள் பிரார்த்தனை….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவமானம் இப்ப அதிகாரப்பூர்வமானது”…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை கருத்தால் கொந்தளித்த பிரகாஷ்ராஜ்…. வைரல் ட்வீட்….!!!!!

கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!… “ஆபாச மார்பிங் படம்”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுசுயா. இவருடைய புகைப்படங்கள் சமீப காலமாகவே ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் காரணமாக நடிகை அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடராஜு […]

Categories
சினிமா டிரெய்லர்

“எரும மாட்டுக்கு சேலை கட்டின மாதிரி”…. ரச்சிதாவை மோசமாக விமர்சித்த ஜனனி….. கொந்தளித்த தினேஷ்….‌ இன்ஸ்டாவில் பதிலடி….!!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா. இவர் தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் பெரும்பாலும் புடவையில் தோன்றும் நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புடவையில் தான் அதிக அளவில் வலம் வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜனனி ரச்சிதாவை பார்த்து எருமை மாட்டுக்கு சேலை கட்டி விட்டது போன்று இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மோசமான ஹேர், வீங்கி போன முகம்”…. நடிகை ஸ்ருதிக்கு என்ன தான் ஆச்சு….? போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவருக்கு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரையா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும் பிரபாஸுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தை கைவிட்டபோது நான் கதறி அழுதேன்… உருக்கமாக பேசிய எஸ்.ஜே.சூர்யா..!!!!

எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் திரைப்படத்தை கைவிடப்பட்ட போது கதறி அழுததாக தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார். என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா… வெளியான தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா புதிய நெடுந்தொடரில் நடிக்கின்றார். சன் டிவியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இனியா மெகா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் கதாநாயகியாக ஆலியா மானசா நடிக்கின்றார். இத்தொடரில் ரிஷி, சந்தான பாரதி, பிரவீனா, எல்.ராஜா, மான்சி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி என பல முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்தொடரை நாராயண மூர்த்தியுடன் இணைந்து 5 இயக்குனர்கள் பணியாற்றுகின்றார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: ”ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ண முடியாது”…. மல்லுக்கு நிற்கும் அசீம்…. வைரல் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியின மக்களுக்கும் ஏலியன்களுக்குமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடுகான ப்ரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலர் பட ஷூட்டிங்கில்… ரஜினியை சந்தித்த பிரபல நடிகர்… காரணம் என்ன..? பிக்ஸ் வைரல்..!!!!

ரஜினி மற்றும் ரோபோ சங்கர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதை அடுத்து ரோபோ சங்கர் தனது 22 ஆவது திருமண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்…. வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி  நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷ்யம் படத்தின் 3-ம் பாகம்… இயக்குனர் சொன்ன ஹேப்பி நியூஸ்..!!!

திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் மீனா நடிப்பில் சென்ற 2013 ஆம் வருடம் 5 கோடி செலவில் தயாராகி வெளியான திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படம் தமிழில் பாபநாசம் என கமல் நடிப்பில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் பின்னர் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மூன்றாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!….”தளபதி 67” படத்தில் விஜய்க்கு சம்பளம் கிடையாதா….? அட‌ என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ”தளபதி 67” படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படத்தின் முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கேலி செய்து ஆபாச கருத்து பதிவிடுறாங்க”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பிரபல கன்னட நடிகையாக வலம் வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் வெளியான கௌரவம், க /பேர் ரணசிங்கம், அயோக்யா, வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நரேஷும் இவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது. நரேஷ் தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, மாலினி 22 பாளையங்கோட்டை, பொருத்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரும் நடிகை பவித்ராவும் பெங்களூரில் உள்ள ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது நரேஷின் […]

Categories

Tech |