Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது”….. நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து….!!!!!

கோவாவில் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவின் போது உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன் பிறகு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவகன், வருன் தவாண், கார்த்திக் ஆர்யன், மனோஜ் வாஜ்பாய் மற்றும் சாரா அலிகான், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடப்பு வருடத்தில் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரூ.‌ 100 கோடி மதிப்புள்ள பங்களாவில் காதலியுடன் லிவிங் டு கெதர்”….. உண்மையை சொன்ன ஹிருத்திக் ரோஷன்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஹிருத்திக் மற்றும் சுஷானே ஆகிய 2 பேருமே மகன்களை பார்த்துக் கொள்கிறார்கள். தற்போது  நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.   இவர்கள் 2 பேரும் பொது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம்… காம்போசிங் வேலையை ஆரம்பித்த அனிருத்…!!!

அனிருத் தற்போது தெலுங்கு திரைப்படத்திற்கான கம்போசிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவர் ஏற்கனவே பல தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகின்றார். இந்த படத்தின் படபிடிப்பானது விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனிருத் படத்திற்கான கம்போஸ் பணிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இத்துடன் இயக்குனருடன் இணைந்து எடுத்துக்கொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. 90’s கிட்ஸ்களின் Favourite கதாப்பாத்திரம்….. 49 வயதில் “கிரீன் ரேஞ்சர் பிராங்க்” திடீர் மரணம்….. சோகத்தில் ரசிகர்கள்….!!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க் (49) திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜேசன் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் கார்ட்டூன் ஆன பவர் ரேஞ்சர்ஸில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் மொத்தம் 127 எபிசோடுகளில் கிரீன் ரேஞ்சராக நடித்துள்ளார். இவர் பவர் ரேஞ்சர் கதாபாத்திரம் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் திரை உலக பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது…. மத்திய அரசின் அறிவிப்பால் குவியும் வாழ்த்து….!!!!

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட திருவிழா என்று கருதப்படும் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் இந்திய திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக நடிகர்கள் அஜய் தேவ்கன், சிரஞ்சீவி, வருண்‌ தவான், கார்த்திக்‌ ஆர்யன், மனோஜ் வாஜ்பாய், நடிகை சாரா அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்து கொண்டு பேசினார்.‌ […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே….! படக்குழுவினருக்கு பிரபல நடிகருடன் உணவு பரிமாறிய ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஜோதிகா 21 வருடங்களுக்குப் பிறகு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா ஹிந்தியில் முதல்முறையாக டோலி சஜா கே ரக்கீனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1997 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கு பிறகு 2001 ஆம் வருடம் வெளியான லிட்டில் ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு ஜோதிகா இந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சாதிக்காம நாம செத்துட்டோம்னா அது சாவுக்கே அவமானம்”… வைரலாகும் விஜயானந்த் பட டிரைலர்…!!!

விஜயானந்த் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஜயானந்த். இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாந்த், நடிகை வினையா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, இரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி செட்டி என பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படத்தை வி.ஆர்.எல் பிலிம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. அண்மையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணம்….. சோகத்தில் திரையுலகம்…. 24 வயதில் இப்படியொரு கொடுமை…!!!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணமடைந்தார். 24 வயதே ஆகும் ஐந்த்ரிலா சர்மா, கடந்த நவ., 1 அன்று பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வார தொடக்கம் முதலே அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் ஏற்கெனவே 2 முறை கேன்சரிலிருந்து பிழைத்தவர்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நடிகை ஷகிலாவுக்கு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க திடீர் தடை….. என்ன காரணமாக இருக்கும்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகீலா. 1990-களின் காலகட்டத்தின் போது ஷகிலா நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஷகிலாவின் படங்களும் வசூல் வேட்டை நடத்தியதால் மறைமுகமாக ஷகிலாவின் படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய ஷகிலா தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து வந்தார். இவர் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமல் ரஷீத் கான் மோகன்லாலுக்கு குறி வைக்கலையாமே… அஜய் தேவ்கனுக்கு தானாம்… விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை…!!!

விமர்சகர் கமால் ரஷித் கான் திரிஷ்யம் 2 திரைப்படத்தை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகர் மற்றும் யூடியூப் விமர்சகருமான கமல் ரஷித் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் பற்றி கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பயங்கரம் சோனி டிவியில் ஒளிபரப்பாகும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகர்கள் ஒன்னுமே செய்வதில்லை”…. ஆனா அவங்களதான் கொண்டாடுறாங்க…. நடிகை பிரியங்கா சோப்ரா பளீர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவுக்கு என்ற பிரியங்கா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். நடிகை பிரியங்கா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மல்டிமேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சினிமாவில் நடிகை ராஷ்மிகாவின் முதல் படம்…. நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்….. படக்குழு அறிவிப்பு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். புஷ்பா படத்திற்கு பிறகு ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் உடன் ராஷ்மிகா இணைந்து நடித்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாகவே கடந்த 2020-ம் ஆண்டு மிஷன் மஞ்சு என்ற பாலிவுட் படத்தில் ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகிவிட்டார். இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!….. பிரபல தயாரிப்பாளர் அலுவலகத்தின் முன் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை…. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் பன்னி வாசு. இவர் கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு பல சூப்பர் ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். கடந்த மே மாதம் தயாரிப்பாளரின் அலுவலகத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு”…. படமாக இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்….. ஹீரோ யார் தெரியுமா….?

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குவதற்கு பிரபல பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்குகிறார். இப்படத்திற்கு உத்கர்ஷ் நைதானி என்பவர் கதை எழுதுகிறார். அதன்பிறகு நடிகர் பங்கஜ் திரிபாதி ஹீரோவாக நடிக்க, லெஜண்ட் மற்றும் பானுஷாலி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

வீட்ல விசேஷம்!…. மகிழ்ச்சியில் துள்ளி குதித்து நடனமாடிய நடிகர் அமீர்கான்….. வைரலாகும் கலக்கல் வீடியோ….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் சினிமாவில் இருந்து ஒரு வருட காலத்திற்கு தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. கடந்த 1986-ம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை அமீர்கான் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜூனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 2002-ம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

என் குளியலறைக்கு பூட்டு கிடையாது… ஏன் தெரியுமா…? ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.  இந்த நிலையில் ஜான்வி கபூர், அவரது தாய் ஸ்ரீதேவியின் சென்னையில் உள்ள வீட்டை சுற்றி காட்டியிருக்கிறார். இந்த வீடு ஸ்ரீதேவியின் முதல் வீடு என்றும், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் காட்டி, ஜான்வி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பஞ்சாபின் ‘ஹேம மாலினி’ மரணம்…… பெரும் சோகம்…!!!

பஞ்சாபி சினிமா உலகின் ராணி தல்ஜித் கவுர் (68) இன்று காலை லூதியானாவில் மரணமடைந்தார். பஞ்சாப் சினிமா உலகின் ‘ஹேம மாலினி’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், முதல்வர் பகவத் மான்-உடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். பஞ்சாபி மற்றும் இந்தியில் இவர் 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி!…. பழம் பெரும் பிரபல நடிகை திடீர் மரணம்….. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்….!!!

பழம்பெரும் பஞ்சாபி நடிகை ‌தல்ஜீத் கவுர்‌ கங்குரா. இவர் 1970 மற்றும் 1980-களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தாஜ் கித்தா, புட் ஹட்டன் தே, இஷாக் நிமானா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் ஹர்மிந்தர் சிங் தயோலை விபத்தில் உயிரிழந்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் 69 வயதாகும் தல்ஜீத பல காலமாக உடல்நல குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

தந்தை கிருஷ்ணா மாரடைப்பு…. மகேஷ் பாபு என்ன செய்தார் தெரியுமா…? பாராட்டும் நெட்டிசன்கள்…!!!

மகேஷ் பாபுவின் தந்தையான பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தை மாரடைப்பால் இறந்த போதும் மகேஷின் சேவை நிற்கவில்லை. ஆம், கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட அதே நாளில், வேறொரு இதயத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மகேஷ் பாபு. இதய ஓட்டையால் பாதிக்கப்பட்ட மோக்ஷித் சாய் என்னும் குழந்தைக்கு இவரது அறக்கட்டளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு உயிரை இழந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! துளு மொழியிலும் வெளியாக இருக்கும் காந்தாரா… படம் குறித்து வெளியான தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் துளு மொழியிலும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG.! படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல ஹீரோ… புது மாப்பிள்ளை இப்படி செய்யலாமா..?

படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“RRR-2ம் பாகம்”…. சூப்பர் அப்டேட் கொடுத்த ராஜமௌலி… அப்ப அடுத்த வசூல் வேட்டைதான்…!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருந்தார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருந்தனர். அதன்படி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” தெலுங்கு ட்ரைலர்… வெளியிட இருந்த விஜய்…. தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பு…!!!!

லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் புதிய படத்தில்… பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி…!!!!!

பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். தெலுங்கு திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார் நடிகை பானு ஸ்ரீ. பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படம் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜெய் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராகுல் பிலிம்ஸ் தயாரிக்க அண்ட்ரூ பாண்டியன் இயக்குகின்றார். சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெங்கட்பிரபுவின் ”என்.சி.22” படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. அட இவரா…. யாருன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தியில் ”காந்தாரா” படம் இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் ரிஷப் செட்டி நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனயடுத்து, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை 75 கோடி வசூல் செய்து அசத்தியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு சூப்பர் ஸ்டார் மறைவு”…. முதல்வர், ரஜினி, கமல் இரங்கல்…!!!!

நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்… நடந்து வரும் ஷூட்டிங்…!!!!!

நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சாகித் கபூரை இயக்கும் மலையாள முன்னணி இயக்குனர்”… படப்பிடிப்பு நாளை ஆரம்பம்…!!!!

மலையாள இயக்குனர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். மலையாள சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகின்றார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களை தான் இயக்குனர் என தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக் கொள்ளாமல் பலவிதமான ஜானர்களில் படங்களை இயக்கி வருகின்றார். இவர் தமிழிலும் 36 வயதினிலே படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது மலையாளம், தமிழை தாண்டி பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். இவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சாகித் […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: “தெலுங்கு சூப்பர் ஸ்டார்” மகேஷ் பாபுவின் தந்தை மரணம்….!!!

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா (80) உயிரிழந்துள்ளார். மகேஷ் பாபுவின் தந்தையான இவர், 350+ படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது உயிரிழந்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி, மகன் ரமேஷ் பாபு ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு இது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!… 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசான திரிஷாவின் தெலுங்கு படம்…. உற்சகத்தில் ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரிஷாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இவர் தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் ”வர்ஷம்”. 2004 இல் வெளியான இந்த திரைப்படம் 18 […]

Categories
இந்திய சினிமா சினிமா

SHOCK: பிரபல நடிகரின் தந்தைக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: சாலை விபத்தில் சிக்கி நடிகை மரணம்… பெரும் கொடூர செய்தி…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை கல்யாணி குராலே ஜாதவ் நேற்று மாலை வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் சாங்லி – கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே வந்தபோது அவரது பைக் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கல்யாணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவை கடுமையாக விளாசும் கன்னட ரசிகாஸ்”… எதனால் தெரியுமா…???

நடிகை ராஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே….! சூப்பர்…. 20 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் நடிகர் பிரபாஸ்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் விரிய தொடங்கியது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்று வெற்றியைடைந்தது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ”ஆதிபுருஷ்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரைத்துறையில் அடி எடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இந்தப் பட தோல்வியால் நான் பக்குவப்பட்டிருக்கிறேன்”…. விஜய் ஓபன் டாக்…!!!!

லைகர் திரைப்படம் தன்னை பக்குவப்பட வைத்திருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டியில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீ கருப்பா இருக்கிற…. பலமுறை நிராகரிப்பு… பேட்டியில் பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்…!!!!!

நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டியில் ஓபன் ஆக பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து சென்ற 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த நிலையில் இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் இருக்காங்க…. வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குப்பதிவு….!!!!!

நடிகை ராக்கி சாவந்துக்கு பத்து காதலர்கள் இருக்கின்றார்கள் என வீடியோ வெளியிட்டதால் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசாரிடம் நடிகை ராக்கி சாவந்த் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அந்த புகாரில் கூறியுள்ளதாவது, சென்ற 6-ம் தேதி நடிகை ஷெர்லின் சோப்ரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியிருக்கின்றார். இது பற்றி ராக்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. சங்கர் இயக்கத்தில் 4 மாஸ் ஹீரோக்கள்….. KGF, பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்….!!!!!

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆக்ஷன் சீனில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்தேன்”….. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு….. நடிகை சமந்தா நெகிழ்ச்சி…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். சிவலிங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா…. நடிகை பூர்ணாவை பரிசு மழையில் நனைய வைத்த கணவர்…. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்….!!!

மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். இதனயடுத்து, இவருக்கும் தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் துபாயில் நடைபெற்றதாக திருமண புகைப்படங்களை பூர்ணா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த பூர்ணாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட! இது என்னப்பா புது டுவிஸ்டா‌ இருக்கு…. “வேள்பாரி” நாவலில் பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா….? பிளானை மாற்றிய‌ சங்கர்….!!!!!!

சங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்கும் நடைமுறை இருந்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் சந்திப்பில் செருப்பு அணியாத அமிதாப்பச்சன்….. என்ன காரணம் தெரியுமா….? உருகிப்போன ரசிகர்கள்….!!!!

1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில்[1][2] ‘கோபக்கார இளைஞன்’ எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார். பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி அளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் அமிதாப்பச்சன் ரசிகர்களின் சந்திப்பின்போது செருப்பு அணியாமல் இருந்ததற்கு தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜல்சாவில் உள்ள எனது வீட்டில் ரசிகர்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க…. ஆலியா பட் பின்பற்றிய “டயட்” என்ன….? இதோ அவரே போட்ட பதிவு….!!!!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய கர்ப்ப காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிய டயட் என்ன? என்பதை ஆலியா பட் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், நியூட்ரிஷன்கள், தாதுக்கள், புரதம் போன்றவை அதிகம் உள்ள உணவை பின்பற்றினேன். ஒருவேளை கூட சாப்பாட்டை தவிர்த்ததே கிடையாது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க புதினா மற்றும் வெள்ளரி பானங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்-ஆல் தள்ளிப்போன ஆதிபுருஷ் ரிலீஸ்”…. இதான் சங்கதியா….!!!!!

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத்திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “வாரிசு”…. இதுவரை இல்லாத அளவிற்கு விலைப்போன கேரளா ரைட்ஸ்… வேற லெவெல்ப்பா…!!!!!

விஜயின் வாரிசு திரைப்படத்தின் கேரளா உரிமை 6 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்: “பிரபல இளம் பாடகர் குளியல் தொட்டியில் பிணமாக மீட்பு”…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!!!

பிரபல பாடகர் தனது வீட்டு குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆரன் கார்டன் என்பவர் பிரபல பாடகராவார். 34 வயதான இவர் Aaron’s Party” ஆல்பம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கலிபோர்னியா, லங்கா ஸ்டார் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10.58 மணிக்கு தன் வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! “கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி”…. காசோலையை வழங்கிய பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்….!!!!!

கல்கி அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடியை பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓ!… இதுதான் காரணமா…..? குஷி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….. உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மகாநடி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories

Tech |