Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமான நடிகை சேஜல் சர்மா தற்கொலை

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘தில் தோ ஹேப்பி ஹாய் ஜி‘ என்ற இந்தி தொடரில் இரண்டாவது கதா நாயகியாக நடித்துள்ளார். இப்பொழுது சில சீரியல்களில் நடித்து வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த சேஜல் சீரியல்களில் நடிப்பதற்காக மும்பையிலுள்ள தானேவில் மீரா ரோட்டில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி வந்துள்ளார். சேஜல் சர்மா வயது இருபத்தி ஐந்து. இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட்

இந்திய அணி உலக கோப்பை வென்றது… திரைப்படமாக உருவாகியுள்ளது..!!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு வென்றது. அதை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘83’. திரைப்படம் குறித்து இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.  சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கபில்தேவ் ஸ்ரீகாந்த், திரைப்படம் 83ல் நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரமாக நடித்து திறமையை வெளிக்காட்டியுள்ளார். நடிகர் ஜீவா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமலின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் ஆடிய ஜீவா – ரன்வீர்

’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார்.  உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர். 1983ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடுவேன்: மகேஷ் பாபு

ரசிகர்களின் நிலையான அன்பை பெற்றிருக்கும் நான் ட்விட்டரில் எதிர்காலத்தில் அவர்களிடம் உரையாடுவேன் என்று ‘ட்விட்டர் ஸ்டார்’ விருது பெற்ற பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார். டோலிவுட்டின் ‘ட்விட்டர் ஸ்டார்’ என்ற விருது ’ஸீ திரை விருதுகள்’ நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. ’ஸீ திரை விருதுகள் தெலுங்கு 2020’ நிகழ்ச்சியில் டோலிவுட் சினிமா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாக்களில் ஜொலித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்? அபிஷேக் ட்விட்டால் பரபரப்பு..!!

ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விராட் கோலியும் நானும் ஒன்னு- கங்கனா ரனாவத்..!!

கிரிக்கெட் வீரர் விராத் கோலி போல் ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களை தான் சந்தித்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி

நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கில் வெளியான மரியாடா ராமண்ணா, ராங்காடு உள்ளிட்ட படங்களில் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா. பின் சில படங்களின் தோல்வி காரணமாக மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கே திரும்பினார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதேபோல் ரவி தேஜா நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள ’டிஸ்கோ ராஜா’ […]

Categories
இந்திய சினிமா சினிமா

சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தாராள பிரபு படத்தில் இணைந்த இரட்டை இசையமைப்பாளர்கள்..!!

தாராள பிரபு படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் தாராள பிரபு. ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்க்காக இப்படம் உருவாகியுள்ளது. விந்து தானம் மற்றும் குழந்தையின்மை அகியவற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் இப்படத்திற்காக மொத்தம் 8 இசைமைப்பாளர்கள் தேர்வு […]

Categories
இந்திய சினிமா சினிமா

வரலாற்று உண்மையை சொன்ன சைஃபுக்கு மகாபாரத வகுப்பெடுத்த கங்கனா

ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்ற நடிகர் சைஃப் அலி கானின் கருத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்று நடிகர் சைஃப் அலி கான் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் அவரைக் கடுமையாக சாடி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சைஃப் அலி கான் போன்றவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு, குறுகிய கண்ணோட்டத்துடன் இதுபோன்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிச்சா சுதீப்புக்கு தாதா சாஹேப் பால்கே விருது..!!

இந்திய திரைத்துறையில் வழங்கப்படும் முக்கிய விருதான தாதா சாஹேப் பால்கே இன்டர்நேஷனல் விருதை நடிகர் கிச்சா சுதீப் பெற இருக்கிறார். தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ , ‘ரத்த சரித்தரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சுதீப். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்தியத் திரைத்துறையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அமிதாப் பச்சனின் ‘ஜுந்த்’ – டீசர் வெளியீடு..!!

அமிதாப் பச்சன் நடிப்பில் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் ‘ஜுந்த்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் படம் ‘ஜுந்த்’. ஸ்லம் சாக்கர் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் சீனியர் பச்சன் நடிக்கிறார். ஆகாஷ் தோஸர், ரிங்கு ராஜ்குரு உள்ளிடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கால்பந்து விளையாட்டை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மில்லியன் பார்வைகளைத் தாண்டிய பாடலால் கிறங்கிபோன ஸ்ரத்தா!

தனது இல்லீகல் வெப்பன் 2.0 (Illegal Weapon 2.0) பாடலின் வெற்றியை முன்னிட்டு அப்பாடலின் காட்சி ஒன்றை நடிகை ஸ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதகளம் செய்தது. இதற்கு முன்பாக ஸ்ரத்தா கபூர் நடித்த ‘ஏபிசிடி- 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ படத்திற்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் வாய்ப்பை தூக்கிய பிரியாமணி..!!

அஜய் தேவ்கான் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிக்க புதிதாக நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க ஒப்பமாகியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக பிரியாமணி நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி, இந்தி இணையத் தொடரான ‘த ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘மைதான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரியாமணி. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு தயாரான ‘பாகுபலி’!

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ‘பாகுபலி’, ‘சாஹோ’ படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ஜில்’ பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ் யூவி கிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இவரா இப்படி செஞ்சது’ – ராஷ்மிகா வீட்டில் வருமான வரிச்சோதனை.!

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா வருமானத்திற்குப் புறம்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் காம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘அல்லு வைகுந்தபுரமுலு’ படத்திலும் நடித்திருந்த இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ ‘ஊபர்’ல போகாதீங்கப்பா…! – எச்சரிக்கும் சோனம் கபூர்

ஊபர் கால்டாக்ஸி சேவையை வாடிக்கையாளர்கள் மிக கவனத்துடன் பயன்படுத்துமாறு பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். ரசிகர்களே எச்சரிக்கை! பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிந்தார். லண்டன் நகரில் தான் பயணிப்பதற்காக ஊபர் நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவையை சோனம் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கால் டாக்ஸியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன்னைப் பின்தொடரும் 12.8 மில்லியன் (ஒரு கோடியே […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

கிரிக்கெட் வீராங்கனையாக அவதாரம் எடுக்கும் அனுஷ்கா ஷர்மா..!!

முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார். முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்து வேகப்பந்துவீச்சாளருமான ஜுலன் கோஸ்வாமி 2008-2011 காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளையும் ஜுலன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது -தீபிகா படுகோனே அதிரடி …!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

தோனியை சந்தித்த அஜய் தேவ்கன்: கிரிக்கெட்-சினிமா இந்தியாவை இணைக்கும் சக்தி!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் இணைந்த பாலிவுட் பிரபலங்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் முத்த மழையால் அன்பை வெளிப்படுத்தும் பிரியங்கா – நிக் ஜோனஸ்

ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர். வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான […]

Categories
இந்திய சினிமா சினிமா

கையெடுத்து கும்பிட்ட ‘அமிதாப் பச்சன்’…. வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை தீவிரமாகக் காதலித்தார் ஷாருக்கான் – சல்மான் கூறிய கதை!

25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான்.  எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான். பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னா ஆட்டம்… திருமண நிகழ்ச்சியில் மேடை ஏறி கலக்கிய கத்ரீனா!!

நண்பரின் திருமண நிகழ்வுக்கு சென்ற கத்ரீனா கைஃப், அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  நண்பரும் முக அழகியல் (மேக்கப்) கலைஞருமான டேனியல் பவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், திடீரென நடனமாடி அங்கு வந்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 2015இல் கத்ரீனா நடிப்பில் வெளியான ‘பேன்தோம்’ படத்தில் இடம்பெறும் ‘ஆஃப்கான் ஜிலேபி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ஆடியிருந்த கத்ரீனாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பை அணியப்போகும் நவாசுதீன்..!!

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ரா. பார்த்திபன் கடந்த ஆண்டு இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்தார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காக பல விருதுகளையும் குவித்தார் ரா. பார்த்திபன். இதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிறந்தநாள் கொண்டாட்டம்” ரசிகனுக்கு கேக் ஊட்டிய பிரபல பாலிவுட் நடிகை….!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது 34வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது. இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடும் பிரபல  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே லக்னோவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முடிவில் லக்னோ சென்று வந்தார். அந்த வகையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை விமான நிலையம் வந்த அவரது  […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஷ்மிதா சென்!

தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேரளாவுக்கு செல்ல இருக்கும் ‘வி1 மர்டர் கேஸ்’..!!

கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம் கேரளாவிலும், கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது. பவெல் நவகீதன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக சென்ற மாதம் வெளியானது ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம். ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், காயத்ரி, மைம் கோபி நடித்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இரண்டாவது வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தத் திரைப்படம் பல திரையங்குகளில் கூடுதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“”சப்பக்” டைட்டில் ட்ராக்கை கேட்டு கண்கலங்கிய லஷ்மி: ஆறுதல் கூறிய தீபிகா.!

தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் என்னும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சப்பக் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய லஷ்மிக்கு தீபிகா ஆறுதல் கூறிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லஷ்மி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் சப்பக். லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லஷ்மி அகர்வால் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

‘என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ – கோலியை புகழ்ந்த அனுஷ்கா!

தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்துள்ளதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரும் விராட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கு என்ன உண்ணப் பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு என்னை சிரிக்கவைக்கும் என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ என்று பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலுக்கு வயது ஒரு தடையா, பிரியங்காவுக்கு பின் மாட்டிக்கொண்ட மலைக்கா!

இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கபூருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மலைக்கா அரோராவை வயது வித்தியாசம் காரணமாக நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். சினிமாத்துறையில் பெரிய வயது வித்தியாசத்தில் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் நடிகர்களை ரசிகர்கள் கேலி செய்யும் அவலம் நீண்ட நாள்களாகவே நடக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ், தமிழில் ஆர்யா – சையிஷா போன்ற நடிகர்களுக்கிடையே வெகு நாள்களாக காதலித்துவரும் மலைக்கா – அர்ஜுன் கபூர் ஜோடியும் மாட்டிக்கொண்டது. சமீபத்தில் தாங்கள் காதலிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகா படுகோன் …!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்.இவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர்

‘சத்தம் போட்டாலே நாங்க கொல்லுவோம்’ – ‘எ குவய்ட் ப்லேஸ் – 2’ ட்ரெய்லர் வெளியீடு!

ஹாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டராக அவதரித்த ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ படத்தின் இரண்டாம் பாக ட்ரெய்லர் வெளியானது. பாரமவுன்ட் பிக்சர்ஸ் சார்பில் ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ (Quiet Place: Part II) படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த ‘எ குவய்ட் ப்லேஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படம் முழு நீள திகில் படமாக வெளியாகவுள்ளது. இயக்குநர் ஜான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

‘சப்பாக்’ படத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான் – மனம் திறந்த தீபிகா படுகோன்!

‘சப்பாக்’ திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மனம் திறந்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சப்பாக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீபிகா ஆசிட் வீச்சில் பாதிப்படைந்ததுபோல் தனது முகத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

வயது முதிர்ந்த தோற்றத்தில் திலீப் எடுக்கும் புதிய அவதாரம்..!!

மலையாள ஜனப்பிரிய நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம்வரும் நடிகர் திலீப் நடிக்கும் ‘கேஷு ஈ வீடின்டே நாதன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், எந்த ஒரு காதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வல்லமை படைத்தவர். தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மலையாளத் திரையுலகில் தனித்து நிற்கும் திலீப், வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மை சான்டா திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரக்கார்’ அவதாரம் – ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு..!!

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லால் – இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜாமோரின் கடற்படைத் தலைவரான குஞ்ஞாலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரூ.1 கோடி கொடுத்தால் நடிக்கிறேன்… நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட படக்குழு..!!   

நடிகை கேத்ரின் தெரசா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் கார்த்தியின்  “மெட்ராஸ்”  திரை  படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர்  கணிதன்,கலகலப்பு-2   உள்ளிட்ட பல  படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் திரை  படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது  தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த   நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய  திரை படத்துக்கு கதாநாயகியை […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீக்கிரம் சொல்லுங்க… ரசிகர் தற்கொலை மிரட்டல் – ட்ரெண்டான #WeWantAnnouncementSRK.!!

#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலங்கானா சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘வன்முறை’..!

தெலங்கானா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பின்னணியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வன்முறை’. இப்படம் குறித்த இயக்குநரின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ… ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அர்ஷிதா ஸ்ரீதர், வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் என பலரும் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!

திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜில் ஜில்.. கூல் கூல்..! ‘இருட்டு’ பட நாயகியின் அட்டகாசமான படங்கள்.!!

சுந்தர். சி நடிப்பில் வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர் சாக்‌ஷி சௌத்ரி. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இவர், தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருட்டு படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் :   சிறுத்தை தோல் போர்த்திய கவர்ச்சிக் கன்னி […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாஃபியா குயின் கங்குபாய்ஆக வேட்டையை தொடங்கிய ஆலியா..!!

கேங்ஸ்டர்கள் வரிசையில் மாஃபியா ராணியாக வலம் வந்த கங்குபாயாக மேக்கப்போட்டு நடிக்க தொடங்கியுள்ளார் ஆலியா பட். ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பொதுமக்களிடம் நாடகமாடிய நடிகை திஷா சவுத்ரி வழக்கின் கிளைமக்ஸ்…!!

பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியது தொடர்பான வழக்கு: ரவீனா விளக்கம்..!

இயேசுவை வணங்கும்போது உச்சரிக்கும் அல்லேலூயா சொல்லை பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தியதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக நடிகை ரவீனா டண்டன் விளக்கமளித்துள்ளார். கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக விடியோவை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரவீனா டண்டன். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயேசு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக நடிகை ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது பஞ்சாப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கிரிக்கெட்டை விடுங்க”…. அதைவிட கவர்ச்சியான விளையாட்டு தெரியுமா?’ – கங்கனா அவிழ்த்த ரகசியம்..!!

கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார்.   இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

கவர்ச்சிகர சைவ உணவுப் பிரியர் மனுஷி சில்லர்..!!

அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) வழங்கும் இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதருக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வென்றுள்ளார். முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரை இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதராக அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கமுறையை பின்பற்றிவரும் மனுஷி சில்லர், இதுவரை தனக்குக் கிடைத்த பல்வேறு […]

Categories
இந்திய சினிமா தமிழ் சினிமா

ஒரு பேருந்தின் விலை எவ்வளவு தெரியுமா? இது நியாயமல்ல-கங்கனா சரமாரி கேள்வி

மும்பை: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனநாயகத்தில் வன்முறை பொருத்தமானதல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தின் விலை தெரியுமா என்றும் வன்முறையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நடிகை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். மும்பையில் நடந்த திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்துக் கொண்ட கங்கனா இதுகுறித்து கூறும்போது, ”எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்து இங்கு வன்முறையில் ஈடுபட உங்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

5 ரூபாய் டாக்டர் விருதினை பெற்றார் ராகவா லாரன்ஸ் …!!!

சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் விருதை நடிகர் ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார். சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்தவர் மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடியை நிறுத்திவிட்டேன்- நடிகை சோனா …!!!

குடியை நிறுத்திவிட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார் . ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உட்பட்ட  பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:- சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 […]

Categories

Tech |