Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வித்யூலேகா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

நகைச்சுவை நடிகை வித்யூலேகா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா . இந்த படத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் . தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார் . அப்பாவின் துணையால் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரூ.55 கோடியா?… விஜய் சேதுபதியின் அடுத்த பட சம்பளம்… வெளியான மாஸ் தகவல்…!!!

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர் . இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம் ‘… வலிமை பட தயாரிப்பாளர் பேட்டி…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்து வரும் போனி கபூர் விரைவில் இயக்குனராக உள்ளாராம் . பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் . அந்த வகையில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார் .   இவர் அஜித் நடித்திருந்த நேர்கொண்டபார்வை படத்தையும் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தயாரிப்பாளர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

முட்டாளே… “டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, தீவிரவாதிகள்”… பிரபல பாடகி திட்டிய கங்கனா..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா அவை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக திட்டியுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது பற்றி ஏன் நாம் பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் 2 ரிலீஸ் ஆகுது… நாடு முழுவதும் விடுமுறை ? பிரதமருக்கு கோரிக்கை …!!

யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேஜிஎஃப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது.  இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… படப்பிடிப்பு தொடக்கம்… இயக்குனர் ஓம் ராவத் டுவீட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘சஹோ’ படத்தில் நடித்திருந்தார் . இதன்பின் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடிக்கிறார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடல் மூலம்… “வேலை வாய்ப்பை இழந்த அட்டப்பாடி நஞ்சம்மா”….!!

பிரபல பாடல் ஒன்றின் மூலம் வேலை வாய்ப்பை இறந்துள்ளார் அடடப்பாடி நஞ்சமா. கேரளாவில் அட்டப்பாடி என்னும் அழகிய கிராமத்தில் வசித்துவரும் நஞ்சமா. பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோசியும் என்ற திரைப்படத்தில் களக்காத்த சந்தன மேரம் என்ற பாடல் மூலம் சமூக வலைதளங்கள் வழியாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு சேர்த்தால் அவமானம் என்று கருதி அவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வறுமையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவு… புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்த நிக்கி கல்ராணி…!!!

திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவானதையொட்டி நிக்கி கல்ராணி புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார் . மலையாள திரையுலகில் நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2014 ஆம் ஆண்டு  வெளியான ‘1983’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட அனுஷ்கா சர்மா… மகளின் பெயர் என்ன தெரியுமா?…!!!

நடிகை அனுஷ்கா சர்மா முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ‌. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. We have […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிரபல நடிகைக்கு”… படப்பிடிப்பில் நெஞ்சுவலி…. மருத்துவமனை அளித்த தகவல்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவேஉனக்காக சீரியலில் நடித்துவரும் நடிகைக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நடிகை ஆமணி, 47 வயதான இவர் விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படத்தில் விஜயகாந்திற்கு மனைவியாக நடித்து இருப்பார். இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கமானவர். கமலஹாசன், நாகார்ஜுனா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்… வெளியான தகவல்கள்…!!!

பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் ‌. இந்தி திரையுலகில் நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை ‌. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஐஸ்மார்ட் சங்கர்’ படம் சூப்பர் ஹிட்டானது . இயக்குனர் புரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராம், […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரு டஜன் குழந்தை வேண்டும்” ….. அடம்பிடிக்கும் பிரபல நடிகை….!!

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம்  தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இளம் நடிகை திடீர் மரணம் – சோகம்…!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூனெட்டே மாஸ் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹாலிவுட் இளம் நடிகை ஜூனெட்டே மாஸ்(39) காலமானார். குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் ரெசிடென்ட் ஈவில் 18வது பாகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பட தயாரிப்பு, நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலியல் வன்கொடுமை – பிரபல இயக்குனர் மீது நடிகை புகார் – பரபரப்பு…!!

பிரபல இயக்குனர் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பட இயக்குனர் ராப் கோஹென் மீது டிரிபிள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அர்ஜென்டோ பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2002 இல் டிரிபிள் எக்ஸ் படப்பிடிப்பின் போது கோஹென் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் கோஹெனுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

கடந்த ஜூலை மாதம் தற்கொலை முயற்சி…. ஜூன் மாதம் தற்கொலை…!!

  கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது நேற்று மதிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை – பெரும் அதிர்ச்சி…!!

கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மனம் கொத்தி பறவை” பட நடிகைக்கு திருமணம்…!!

மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கின்றது. தமிழில் மனம் கொத்தி பறவை மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆத்மிகா இவர் வெள்ளையானை மலையாளத்தில் ஜோசப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு மலையாள நடிகை. கேரளாவின் கண்ணூர் சேர்ந்த சனுப் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை திருமணம் செய்ய இருக்கும் சனுப் கப்பலில் பணிபுரிந்து வருகிறாராம். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிட்டான படம்… பிரபல நடிகையின் புது அங்கீகாரம்… ட்விட்டரின் உருவாக்கம்….!!

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஒரு புது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான பேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். அதாவது மனோஜ் பாஜ்பாய்-பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்த பேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்களும் இப்படி ஆகலாம்…. என்னை போல் முயற்சி பண்ணுங்க… அட்வைஸ் கொடுத்த தமன்னா…!!

தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு வந்த அழைப்பு… மிரண்டுபோன திரையுலகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபல நடிகையை கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் ஹிந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திஷா பதானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் லோபர் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வருண் தேஜாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட எம்.எஸ். தோனி என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குங்பூ யோகா என்ற படம் வெற்றிப் படமாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்… வெளியான தகவல்கள்…!!

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி  கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் . நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி , குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது நட்சத்திர ஹோட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் . நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘சகுந்தலம்’… படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ… யார் தெரியுமா?…!!!!

நடிகை சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே சரித்திர, புராண படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . மேலும் புராண கதையம்சம் கொண்ட படங்கள் வசூலையும் வாரி குவிகிறது . இதனால் இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியுள்ளது . அந்த வகையில் சகுந்தலை புராண கதை தமிழ் ,தெலுங்கு மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது . ‘சகுந்தலம்’ என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லேடிஸ் ஹாஸ்டல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்… வெளியான தகவல்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் லேடிஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . தெலுங்கு திரையுலகில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பானு ஸ்ரீ ரெட்டி . இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . தற்போது ‘கேட்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆத்ரேயா விஜய் நடித்துள்ளார் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஜி கே ,தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘மே டே’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’…. படம் குறித்து இயக்குனர் ஓம் ராவத் டுவிட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சஹோ  படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை’… நடிகை சமந்தா முடிவு…!!!

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை’ என நடிகை சமந்தா முடிவு செய்துள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பின்னும்  படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார் . அதில் ‘நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன . அந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது . நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவை வென்ற 98 வயது கமல் பட நடிகர்..!!

கொரோனாவை வென்றுள்ளார் கமல் பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு வயது 98. ‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்தவர் பிரபல மலையாள உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு 98 வயதாகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார். சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். 98 வயதில் கொரோனாவை வென்று இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

12 குழந்தைகள் பெற ஆசை… வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து..!!

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம்  தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற கே.ஜி.எப் நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘கேஜிஎப்’ பட கதாநாயகன் யாஷ் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரான இந்த படம் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்தப் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த மாதிரி காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்’… கோபத்துடன் கூறிய கீர்த்தி…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் . மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் . பின்னர் தமிழில் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார் . இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் சூப்பர்  ஹிட் ஆனது . இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்த கீர்த்தி விஜய் ,சூர்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி… குவியும் பாலிவுட் பட வாய்ப்புகள்…!!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . மேலும் விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சீதக்காதி படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வயதோ 98… நோயை வென்ற பிரபல நடிகர்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார். பிரபல மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கமல்ஹாசனின் தாத்தாவாக “பம்மல் கே சம்பந்தம்” படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். இந்நிலையில் 98 வயதான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையின் ஆசை…. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை…கிரிக்கெட் அணி போல வேண்டும்… !!

பிரியங்கா சோப்ரா கிரிக்கெட் அணி போன்று குழந்தைகளை பெற்று கொள்ள ஆசைபடுவதாக கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவனான நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனால் சமூக வலைத்தளத்தில் இவரைப் பற்றிய கருத்துகள் குவிந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர்களின் வயது வித்தியாசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரியங்கா சோப்ரா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நாகினி’ சீரியல் நடிகைக்கு திருமணம்… துபாய் மாப்பிள்ளையா?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘நாகினி’ சீரியல் புகழ் நடிகை மௌனி ராய்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இதன் ஐந்தாம் பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நாகினியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய் . இந்நிலையில் நடிகை மௌனி ராய் திருமணம் குறித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிப்ரவரி 26ஆம் தேதி முதல்… டாம் & ஜெர்ரி…!!

பிப்ரவரி-26 ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் & ஜெர்ரி திரைப்படம் வெளியாக உள்ளது. 90-ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படமாக பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாகிறது. வழக்கமான டாம் என்ற பூனைக்கும், ஜெர்ரி என்ற எலிக்கும் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை புதிய சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தையல் இயந்திரத்தில் துணி தைக்கும் சோனு சூட்… வைரலாகும் வீடியோ… பாராட்டும் ரசிகர்கள்…!!!

நடிகர் சோனு சூட் தையல் இயந்திரத்தில் துணி தைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட்.  கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் இவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் இவருக்கு  சிலை வைத்து வழிபட்டனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கர்நாடகாவில் விஜய்க்கு சிலை வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

கர்நாடகாவில் நடிகர் விஜய்க்கு சிலை வைத்து ரசிகர்கள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் விருந்தாக வெளியான இந்தப் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்கின்றனர் . இந்தப் படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் மாஸ்டர் படம் இந்தி ,தெலுங்கு, […]

Categories
இந்திய சினிமா சினிமா

Big Boss மேலாளர் மரணம்…. கண்ணீர்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளரார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளராக பணியாற்றி வந்த 23 வயதே ஆன பிஸ்தா தகட் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்ற பின் இரவில் உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அப்போது வந்த வாகனம் ஒன்று பிஸ்தா தகட்டின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புரட்சித்தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘தலைவி’பட எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ரொமான்ஸ் ஸ்டில்… இணையத்தில் செம வைரல்…!!!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதை ‘தலைவி’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது . இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும்  இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் . மேலும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்… தளபதி கேரக்டரில் நடிக்கப் போவது யார் தெரியுமா?…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிறந்த நாளில் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய் சேதுபதி… டுவிட்டரில் வெளியான போஸ்டர்…!!!

நடிகர் விஜய் சேதுபதி தனது புதிய படத்தின் டைட்டிலை டுவிட்டரில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி பேபியை வாழ்த்திய அமுல் பேபி… வைரலாகும் ட்வீட்…!!

விராட் கோலி பேபியை அமுல்பேபி வாழ்த்திய ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ‌. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் விராத் -அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் தளபதியின் ‘மாஸ்டர்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . IT'S OFFICIAL… […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸ்-கே ஜி எஃப் இயக்குனர் இணையும் ‘சலார்’ … சிறப்பாக நடைபெற்ற பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின்  இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’… படத்தின் அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க் . இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாராகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா -யுவன் சங்கர் ராஜா இணையும் ‘டாப் டக்கர் ஆல்பம்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்‌…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரஷ்மிக்கா நடித்துள்ள ‘டாப் டக்கர்’ ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார்.  இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வில்லி ரோலில் சமந்தா… ‘தி ஃபேமிலி மேன்- 2’ வெப் சீரிஸ்… டீசர் ரிலீஸ்…!!!

நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . இதனிடையே நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன்-2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே புகழ் பெற்ற ஃபேமிலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற ரகுல் பிரீத் சிங்… வெளியான வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு 12 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ,தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்2 மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மர்ம முறையில் மரணம்… கிணற்றில் மிதந்த சடலம்… அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவரின் வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடும்பம் நடத்திவிட்டு…” குட்டி ராதிகாவை” யார் என்று கேட்ட கர்நாடக முன்னாள் முதல்வர்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நடிகை குட்டி ராதிகா யார் என கேட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா பகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் “பணம் மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து நடிகை குட்டி ராதிகா 1.5 கோடி பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதை குறித்து அவரிடம் கருத்தை கேட்டுள்ளார்”. அதற்கு […]

Categories

Tech |