Categories
இந்திய சினிமா சினிமா

இதுக்கு இவ்வளவு பணமா…? வாயடைக்க வைக்கும் நடிகர்களின் சம்பளம்…!!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் எப்படி மாபெரும் ஹிட் அடிக்கிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமாக ஆகிறது. அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப் படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரர் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவதற்காக ஜூனியர் என்டிஆர் என்ற தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் ‘நிழல்’… ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்  நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகியுள்ளது. இதுதவிர நயன்தாரா மலையாளத்தில் நிழல் படத்தில் நடித்துள்ளார். அப்பு என். பட்டாத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரொம்ப நாள் ஆசை நிறைவேறப் போகுது…. பிரபல நடிகை குஷி…!!

காஜல் அகர்வால் தான் அடுத்த படத்தில் யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன்2 , பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் சேதுபதி விலகிய ஹிந்தி படம்…. அடுத்து நடிக்கப்போவது இவரா…?

விஜய் சேதுபதி விலகிய ஹிந்தி படத்தின் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு “லால் கிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அமீர்கானின் நண்பனாக நடிப்பதற்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அழகிய புடவையில் நடிகை சமந்தா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ,நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமந்தா  தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் நட்சத்திர நாயகியாக வலம் வருகிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமாவை விட்டு வெளியேறுகிறேன்…. தனுஷ் பட நடிகை அதிர்ச்சி தகவல்…!!

தனுஷ் பட நடிகை சினிமாவை விட்டு வெளியேறப் போவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான “நெஞ்சில் துணிவிருந்தால்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின். இதை தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்திலும், விஜய் தேவர்கொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மெஹ்ரினுக்கும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பஜன்லாலின் பேரனான பவ்யா பிஷ்னோத் என்பவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இவர் திருமணத்திற்குப் பின் மீண்டும் படத்தில் நடிப்பாரா? என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை நதியா வெளியிட்ட வீடியோ…. இந்த படத்தில் நடிப்பது உறுதி…!!

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″படத்தில் நடிகை நதியா நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை நதியா தான் திரிஷ்யம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திருட்டு வழக்கில் சிக்கிய நடிகை கங்கனா ரனாவத்…. போலீசார் கடும் விசாரணை…!!

நடிகை கங்கனா மீது திருட்டு கதை வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியீடு வருகிறார். இந்நிலையில் இவர் மீது திருட்டு வழக்கு புகார் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கங்கனா ரனாவத் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனையாக டிட்டாவின் வாழ்க்கையை படமாக்கப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உலக சாதனை படைத்த “கேஜிஎஃப் 2″…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

கேஜிஎஃப் 2 டீசர் உலக சாதனை பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். இதை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்தையும் பிரசாந்த் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.இப்படத்திற்கான டீஸர் கடந்த ஜனவரி மாதம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அது தற்போது உலக அளவில் சாதனை படைத்துள்ளது. ஏனென்றால் தற்போது வரை கேஜிஎப் 2 டீசரை 175 மில்லியனுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகையின் மகள்…. அறிவிப்பு வெளியானால் இதுவே முதல் படம்…!!

பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிகையின் மகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்விகபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, ரூகி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தோஸ்தானா2 ,  குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அமீர்கானின் திடீர் முடிவு…. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் எடுத்த திடீர் முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 56 ஆவது பிறந்த நாளைக் கடந்த 14ஆம் தேதி கொண்டாடினார். இவருக்குப் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அமீர்கான் நேற்று தனது டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகையின் பொறுப்பற்ற செயல்…. தொற்றுடன் படப்பிடிப்புக்கு சென்றதால் புகார்…. ரசிகர்கள் விமர்சனம்…!!

ஹிந்தி நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் கவுஹர் கான். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரித்தினர். ஆனால் கவுஹர் கான் இதனைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனால் விதிகளை மீறி படப்பிடிப்புக்கு சென்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎப் 2’ டீஸர் படைத்த மிரட்டலான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

‘கே ஜி எஃப் 2’ டீசர் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். கன்னடத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம்  பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது . https://twitter.com/hombalefilms/status/1371409871967375364 இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் மூவியில் இணைந்துள்ள வனிதா…. என்ன படம் தெரியுமா..?

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ரீமேக் படத்தில் நடிக்க நடிகை வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது அனல் காற்று, 2 கே அழகான காதல் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா தற்போது மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான “அந்தாதூன்” திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குதிரையுடன் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகை குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “தனுசு ராசி நேயர்களே” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தி பிக்பாஸின் 9 வது  சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது புகைப்படங்களை எடுத்து அதை வலைதளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“திரிஷ்யம் 2” ரீமேக்கில் நடிக்கிறீர்களா..? நடிகர் ராணா விளக்கம்…!!

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ராணா நடிக்க உள்ளாரா என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான “திரிஷ்யம் 2” திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரிஷ்யம் 2 படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்திருந்தார். தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சி…. இதற்காக 100% உழைப்பேன்…. மகிழ்ச்சியை கொட்டிய சமந்தா…!!

நடிகை சமந்தா தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.”சகுந்தலம்” என பெயர் சூட்டப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட்… பிறந்தநாளில் வெளியான ‘RRR’ பட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின்  போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இது அல்லுரி சீதாராம ராஜு , கொமரம் பீம் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்தப்படத்தில் நடிகர் ராம்சரன் சீதாராமாவாகவும் ,ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

உங்களிடம் பல மாஸ்டர் பிஸுகளை எதிர்பார்க்கிறேன்…. “திரிஷ்யம் 2” இயக்குனருக்கு ராஜமௌலி மெசேஜ்….!!

திரிஷ்யம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை பாராட்டி ராஜமௌலி மெசேஜ் அனுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் வெளியான “திரிஷ்யம் 2” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி திரிஷ்யம் 2 படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நான் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தை  பார்த்தேன். அப்படத்தின் இயக்கம், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இப்படி நடிக்க பிடிக்கவில்லை…. கவர்ச்சி முத்திரை குத்தப்பட்ட டாப்ஸி பேட்டி…!!

பிரபல நடிகை டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் சினிமாவிற்கு வந்த உடனே எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் என்மீது […]

Categories
இந்திய சினிமா சினிமா

மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி….!!!

மிகப் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் தீனா, சமஸ்தானம் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரும் நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம்…. வெளியான புகைப்படம்…!!

மகா சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர். கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரியன்று இங்கு வருகை புரிந்து ஆதியோகி சிலை முன்பு வழிபட்டு செல்வர். ஆனால் இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறிப்பிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாதவனின் அடுத்த படம்…. தனுஷ் பட நடிகையை ஒப்பந்தம்…!!

பிரபல நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மஞ்சு வாரியர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் சேதுபதி ரீல் மகளின் வியக்க வைக்கும் நடிப்பு…. பிரபல நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தம்…!!

விஜய் சேதுபதியின் ரீல் மகள் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் கடந்த கடந்த மாதம் வெளியான உப்பென்னா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. விஜய் சேதுபதியின் மகளாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலில் விழுந்த நடிகர் விஜய் தேவர் கொண்டா… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் ரெடி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் விஜய்தேவரகொண்டா. இவர் தற்போது பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலி கான் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு தடையாக காதலித்துக் கொண்டிருந்ததாகவும் தற்போது அளிக்கவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் அடிக்கடி படப்பிடிப்பை கட் அடித்துவிட்டு ஊர் சுற்ற சென்று விடுகிறாராம் விஜய் தேவர்கொண்டா.

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கார் போட்டி படங்களை… அறிவிக்கும் பிரியங்கா சோப்ரா…!!

ஆஸ்கர் போட்டிக்கான படங்களில் அறிவிப்புகளை பிரியங்கா சோப்ரா அறிவிக்க உள்ளார். சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆஸ்கர் விருது என்பது மிக உயரிய விருது. இந்த விருதுகளில் படங்கள் தேர்வாவது மிகவும் அரிது. இந்த முறை சில தமிழ் படங்களும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் தேர்வாகியுள்ளது. 23 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பை வரும் 15ஆம் தேதி ஆஸ்கார் வலைதளம் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராமராக பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’… சீதையாக நடிக்கப்போவது இவர்தான்… வெளியான அறிவிப்பு…!!!

ராமராக பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. A new journey begins.. ❤️One of my […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்… இளவயது தனுஷ் கெட்டப்பில் வெங்கடேஷ் புகைப்படம்…!!!

அசுரன் பட தெலுங்கு ரீமேக்கில் இளவயது கெட்டப்பில் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் தேசிய விருது படம்…. சிறப்பு பூஜையுடன் தொடக்கம்…!!

ரீமேக் செய்யப்படும் “அந்தகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “அந்தாதூன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த ஹிந்தி படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசிய விருதையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை […]

Categories
Uncategorized இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்…. ஆர்யா-சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து…!!

இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரும் நடிகை சாய்ஷாவும் காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திரையுலகில் க்யூட் கப்பிலாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு ஆடி அசத்தும் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி…. வைரலாகும் வீடியோ…!!!

மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் 5 வது திருமணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் நடிகரான நிகோலஸ் கேஜ்(56) கோஸ்ட் ரைடர், ரைசிங்க் அரிசேனா, தி ராக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.  இவர் தன்னுடைய 26 வயது காதலியான ரிக்கோ ஷிபாடவை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே நான்கு திருமணம் நடந்துள்ளது .சமீபத்தில் தான் ரகசியமாக நடந்த இவர்களுடைய திருமணம் தற்போது அம்பலமாகியுள்ளது. நிக்கோலஸ் கடைசியாக மேக்கப் கலைஞர் எரிகோவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சித் தகவல்…. பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா…. ரசிகர்கள் வருத்தம்…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பாலிவுட் நடிகரான ரிஷி கபூரின் மகன் ஆவார். தற்போது இவர் தனது தாய் நித்து கபூருடன் மும்பையில் வசித்து வருகிறார். மேலும் அவர் தன் காதலியான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று பரவியிறிருப்பது அதிர்ச்சியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்…. இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை…!!

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த அனுஷ்கா தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான சிங்கம், வேட்டைக்காரன்,அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் கடைசியாக நடித்த சைலன்ஸ் திரைப்படம் தோல்வியில் முடிந்தது. இதனால் அனுஷ்கா தனது அடுத்த படத்திற்கான தேர்வை கவனமாக செய்துவருகிறார். அதன் அடிப்படையில் இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விவாகரத்து முடிவை கைவிட்ட பேட்ட பட வில்லன்…. தந்தையாக பார்த்துக்கொள்வார் என்று மனைவி உருக்கம்…!!

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் விவாகரத்து முடிவை கைவிட்டு மனைவியுடன் ஒன்று சேர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இச்செய்தி ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அல்லு அர்ஜுன் தாஜ்மஹாலில் கொண்டாட்டம்…. வெளியான புகைப்படம்…!!

நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை கொண்டாட தாஜ்மஹால் சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்னேகா ரெடி என்பவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்னேகா ரெட்டி தங்களது 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு தாஜ்மஹால் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐந்து மொழிகளில் தயாராகும் ராம்சரண் படம்…. இயக்கும் ஷங்கர்…!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பாடம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தாஜ்மஹாலில் திருமண நாளை கொண்டாடிய அல்லு அர்ஜுன்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார் . பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அலவைகுண்டபுரமுலோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10 […]

Categories
இந்திய சினிமா சினிமா

கனவுக் கன்னியின் அடுத்த படம்…. வைரலாகும் ட்ரைலர்…!!

ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்த பிரியங்கா மோகனின் அடுத்த படத்திற்கான ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தெலுங்குத் திரையுலகில் நானி நடிப்பில் வெளியான படம் கேங்லீடர். இப்படத்தில் முதல்முறையாக பிரியங்கா மோகன் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் பிரியங்கா கனவுக்கன்னியாக இடம் பிடித்தார். அதன் பிறகு அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோக்கள் மிகவும் வைரலாக பரவி வந்தது. இதைத்தொடர்ந்து அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை…. திரைப்படத்தை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு…!!

அனுமதியின்றி தனது புகைப்படத்தை திரைப்படத்தில் வெளியிட்டதால் பிரபல நடிகை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் நானி,அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வெளியான படம் வி. ஓ.டி.டி.யில் வெளியான இத்திரைப்படத்தில் ஹிந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இருந்தது. இதனால் நடிகை  சாக்‌ஷி மாலிக் தனது போட்டோவை அனுமதி இல்லாமல் படத்தில் இணைத்ததற்கு நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எஃப்’ படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்… யார் தெரியுமா?…!!!

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரிக்  குவித்தது . இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பந்தின் மேல் முட்டி போட்டு ஒர்க் அவுட் செய்த சமந்தா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை சமந்தா கடினமான ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி… குவியும் வாழ்த்து…!!!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . பாலிவுட் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்  . மேலும் ஸ்ரேயா கடந்த 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்’..‌. தெறிக்கவிடும் ‘காடன்’ டிரைலர்…!!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கொக்கி, லாடம் ,லீ, மைனா ,கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. மேலும் இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ‌ . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜோடி சேருறாங்களா…! இனிமேல் கொண்டாட்டம் தான்.. கலக்கலான புதிய அப்டேட் …!!

ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக உள்ள விஜய் தேவர் கொண்டா -ரஷ்மிகா மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இளைய தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்ட ஜோடியாக விஜய் தேவர் கொண்டா-ராஷ்மிகா மந்தனா இருந்து வருகின்றனர். இவர்கள் ‘டியர் காம்ரேட்’, ‘கீதாகோவிந்தம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர்கள் நடித்த 2படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை கொடுத்த புகார்…! நேரில் ஆஜரான ஹிருத்திக் ….போலீஸார் கிடுக்குபிடி விசாரணை…!!

போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில்  பிரபல ஹிந்தி நடிகர்  மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’… ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில்  உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. குஞ்சலி மரைக்காயரின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் ‌ . இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் .மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து விஜய் ,தனுஷ் ,சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி… அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். தன் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களை அவர் தனது ரசிகர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அமிதாப் பச்சன் […]

Categories

Tech |