Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கடும் எதிர்ப்பு… பான்மசாலா விளம்பரத்தில் இருந்து விலகிய அமிதாப் பச்சன்…!!!

பான்மசாலா விளம்பரத்திலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் விலகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன் . இவர் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரப் படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். நகை கடை முதல் நூடுல்ஸ் வரை இவர் நடிக்காத விளம்பரங்களே இல்லை. மேலும் அமிதாப் பச்சன் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கும். அதன்படி தடைசெய்யப்பட்ட நூடுல்ஸ் கம்பனியின் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை…. ரசிகரின் ஓவியத்தால் ராஷ்மிகா சொன்ன தகவல்….!!

பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக ராஷ்மிகா கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் வெளிவந்த ”கீதாகோவிந்தம்” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார். மேலும், இவரின் சமூக வலைதளப்பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது, ஹிந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் விஜய் தேவரகொண்டா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு, தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இவருக்கு ரசிகைகள் அதிகம் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில், தற்போது விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு இத்தனை கோடியா….? வெளியான அதிரடி தகவல்….!!

முன்னணி தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஒரு ஆண்டின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக்ரோஷன் ஆகியோர் பிரபலமான நடிகர்கள் ஆவர். இவர்கள் சினிமா, விளம்பரம் மற்றும் இதர நிகழ்வுகளுக்காக ஒரு வருடத்திற்கு சில நூறு கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இந்த நடிகர்களை விடவும் தற்பொழுது தெலுங்கு நடிகரான பிரபாஸ் அதிகமாக சம்பாதிப்பதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்கள்  உருவாகியுள்ளனர். இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பாலிவுட்டில் இனவெறி”…. பல வருடமாக போராடுகிறேன் – நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டில் நட்புறவு இல்லை என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கலைஞர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘தலாஷ்’ படத்தில் அறிமுகமானார். 2013ல் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்திற்காக ஆசிய பசுபிக் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், ஒரு இணையதளத்துக்கு நவாசுதீன் சித்திக் அளித்த பேட்டியில், ‘சீரியஸ் மேன்’ திரைப்படத்தை மிக […]

Categories
இந்திய சினிமா சினிமா

காஜல் அகர்வால் விலகிய “கோஸ்ட்” மூவி… இலியானா நடிக்கவில்லை… படக்குழு விளக்கம்…!!!

காஜல்அகர்வால் விலகிய கோஸ்ட் படத்தில் இலியானா நடிக்கவில்லை என படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடித்து வரும் கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இது குறித்து படக்குழுவிடம் தெரிவித்துவிட்டு அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து காஜல் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது. ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரபல பாலிவுட் நடிகை போலிஸில் புகார்…!!!

பிரபல பாலிவுட் நடிகை சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்த அவர் சில சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஏனென்றால் இவர் படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார். இதனால் அவரை பலரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராஜினாமாவை ஏற்க மறுக்கும் விஷ்ணு மஞ்சு…. வாபஸ் பெறுவாரா பிரகாஷ்ராஜ்..? பரபரப்பில் தெலுங்கு சினியுலகம்…!!!

தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரகாஷ்ராஜ் வாபஸ் பெறுவாரா என்ற பரபரப்பு தற்போது நிலவி வருகிறது. பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் அவர் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கு நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை வெளி மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது என்று பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டதாக குற்றம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ஸ்ரேயாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா…. இணையத்தில் அவரே வெளியிட்ட வீடியோ….!!

நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா அறிகுறி…. பிரபல நடிகை சொன்ன தகவல்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!

பிரக்யா ஜெய்ஸ்வால்க்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அகந்தா படத்திலும், ஹிந்தியில் சல்மான்கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்க்கு  கொரானா அறிகுறி இருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.   இது குறித்து பிரக்யா கூறும்போது, நான் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். ஆனாலும், எனக்கு தற்போது கொரோனா […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார்…. ஷாருக்கானை விமர்சித்த கங்கனா….!!

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, தீவிர விசாரணை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்… தோல்வியடைந்த பிரகாஷ் ராஜ்…!!!

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் 113 வாக்குகள் வித்தியாசத்தில் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்துள்ளார். நேற்று தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் தலைவர், பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும், அவரை எதிர்த்து பிரகாஷ் ராஜும் போட்டியிட்டனர். பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்பட பல பெரிய நடிகர்களின் ஆதரவு பிரகாஷ் ராஜுக்கு இருந்ததால், அவர் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. மேலும் மொத்தம் 900 உறுப்பினர்களில் 833 பேருக்குதான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்துடன் மோத வேண்டாம்… ரிலீஸ் பிளானை மாற்றிய ‘ஆச்சார்யா’ படக்குழு…!!!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்சரண் தயாரித்திருப்பதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஆச்சார்யா படத்தை வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… ரூ.25 லட்சத்தை பரிசாக வென்று அசத்திய சமந்தா… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரூ.25 லட்சத்தை பரிசாக வென்றுள்ளார். பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எவரு மீலோ கோடீஸ்வரரு’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, கொரட்ல சிவா, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் தாமதமான ‘சர்காரு வாரி பாட்டா’… மகேஷ் பாபு எடுத்த அதிரடி முடிவு…!!!

கொரோனா பரவல் காரணமாக சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பு அதிக காலம் நீடித்து விட்டதால் மகேஷ் பாபு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் சங்கராந்திக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்பெயினில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘உடலில் மாற்றம் ஏற்பட்டபோது கிண்டல் செய்தார்கள்’… மனம் திறந்த பிரியங்கா சோப்ரா…!!!

ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது எதிர்கொண்ட கேலிகள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘திரைத்துறையில் வளர்ந்ததால் எனது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என கூர்ந்து கவனிக்கப்பட்டேன். அப்போது நான் என்னுடைய 20-களில் இருந்ததால் இது சாதாரணமான ஒன்று என நினைத்தேன். பெரும்பாலான இளம் பெண்களைப் போல நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட முகம், சீரான தலைமுடியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகன் ஏற்படுத்திய சர்ச்சை… ஷாருக்கானுக்கு வந்த மிகப்பெரிய சோதனை…!!!

பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் இவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து ஷாருக்கான் பைஜூஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதற்காக பைஜூஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் அடுத்த திருப்பம்… பாலிவுட் தயாரிப்பாளர் வீட்டில் அதிரடி சோதனை…!!!

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹித்ரியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி முன்முன் டக்மிஷா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த மாதிரி கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’… ரகுல் பிரீத் சிங்…!!!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டியில் ‘தெலுங்கில் நான்கொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இது கிரிமினல் குற்றம்’… ஷாருக்கான் மகனை ஆதரித்த ஹிரித்திக் ரோஷனை கண்டித்த கங்கனா ரனாவத்…!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை ஆதரித்த ஹிருத்திக் ரோஷனை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘வாழ்க்கை பல பிரச்சனைகளை தரக்கூடியது. வலிமையானவர்களுக்கு தான் கடவுள் சிக்கல்களை கொடுப்பார். நீ உனக்குள் இருக்கும் ஹீரோவை வெளிக்கொண்டு வர வேண்டும். நீ மிகவும் எச்சரிக்கையாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட தமன்னா… இதுதான் காரணமா?…!!!

நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்குகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் மாஸ் காட்டும் சமுத்திரகனி… குவியும் பட வாய்ப்புகள்…!!!

நடிகர் சமுத்திரகனிக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சமுத்திரகனி விநோதய சித்தம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அதேபோல் ஜோதிகா, சசிகுமாருடன் இணைந்து சமுத்திரகனி நடித்துள்ள உடன்பிறப்பே படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. மேலும் சமுத்திரகனி தெலுங்கு படங்களிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை சாய் பல்லவியின் வளர்ச்சி… அப்படி இருந்தவங்க இப்ப எப்படி ஆகிட்டாங்க பாருங்க…!!!

மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த சாய் பல்லவி தற்போது பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் சூப்பர் ஹிட் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் பிரபாஸின் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி-2 படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸின் 25-வது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை சஞ்சனா கல்ராணியை கார் டிரைவர் கடத்தினாரா?… வெளியான பரபரப்பான தகவல்…!!!

சஞ்சனா கல்ராணியை கார் டிரைவர் கடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்தார். தடய அறிவியல் ஆய்வில் சஞ்சனா போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. தற்போது ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள பெங்களூர் இந்திராநகரில் இருந்து வாடகை காரில் சென்றுள்ளார். அப்போது டிரைவர் சூசை மணிக்கும், சஞ்சனாவுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘எல்லாம் சரியாகிடும்ன்னு தான் நினைச்சேன்’… சமந்தா தந்தை உருக்கம்…!!!

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை உருக்கமாக பதிலளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதுகுறித்து நாக சைதன்யாவின் தந்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

நாக சைதன்யா-சமந்தா விவாகரத்து…. வெளிவந்த முதல் புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

திரையுலகில் பிரபலமாக இருந்து காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா-சமந்தா தம்பதியினர் சமீபத்தில் தங்கள் விவாகரத்து பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்ததோ இல்லையோ அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்து விட்டார்களே என்று பல ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் சமந்தாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. விவாகரத்து பற்றிய செய்திகளுக்குப் பிறகு முதல் முறையாக வெளியில் வந்த சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது சமந்தாவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரித்விராஜ்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் பிருத்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இவர் தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. லால் ஜூனியர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிருத்விராஜ், மியா ஜார்ஜ், தீப்தி, சுரஜ் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாகார்ஜுனா குடும்பத்தில் தொடரும் விவாகரத்து… யாரு விட்ட சாபமோ?…!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வர ராவின் மகன் ஆவார். நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மீதும், அவருடைய படங்கள் மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு. ஆனால் அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவது காலத்தின் முடிவாக இருக்கிறது. நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை திருமணம் செய்து கொண்ட நாகர்ஜுனா, பின் நடிகை அமலா […]

Categories
இந்திய சினிமா சினிமா

16ல் சினிமா…. 20ல் திருமணம்…. எல்லாரும் ஏமாத்திட்டாங்க…. வாழ்க்கை கதையை பகிர்ந்த ரேவதி…!!

தென்னிந்திய திரையுலகில் பாரதி ராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், மோகன் போன்றவர்களுடன் நடித்து அந்த காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர்  பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளரிடம் ரேவதி தன் வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அதில் தான் 16 வயதிலேயே நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்தின் அடுத்த சிங்கள் எப்போ?… தாறுமாறான அப்டேட் இதோ…!!!

புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். She stole our ferocious #PushpaRaj's heart […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். #Prabhas25 Announcement on […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

வேண்டாம்… ரூ 200 கோடியை ஏற்க மறுத்த சமந்தா?… வெளியான தகவல்!!

நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… ரிலீஸ் எப்போது?… மிரட்டலாக வெளியான அறிவிப்பு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபரில் ரிலீஸாகும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்தது… “நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிந்தனர்”… வெளியான அறிவிப்பு!!

நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. அதே சமயம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சங்கரின் படத்தை மறுத்த பிரபலம்…. அதிக சம்பளத்துக்கும் ஓகே சொல்லல…. வெளியான தகவல்….!!

தமிழ் மட்டுமல்லாது இந்திய திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் சங்கர். இவர் இயக்கும் படம் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமான ஒன்றாகத்தான் இருக்கும். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம், தமிழில் இந்தியன் 2, இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் படம் போன்றவை வெளியாகியிருக்கிறது. இதில் ரன்வீர்  மற்றும் ராம் சரண் கதாநாயகர்களாக நடிக்க இருக்கும் திரைப்படங்களில் கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிடம் இத்தனை சொகுசு கார்களா…? விலைகளை கேட்டால் அசந்துடுவிங்க….!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா வைத்திருக்கும் கார்களின் விபரமும் அதன் விலை பற்றியும் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலின் படி Jagur XF – ₹70,00,000 Audi Q7 – ₹80,00,000 Porshe Cayman GTS – ₹1,19,00,000 […]

Categories
இந்திய சினிமா சினிமா

திரைத்துறையில் அடுத்த தற்கொலை…. “வேற வழி தெரியல….” சோதனையில் சிக்கிய 4 பக்க கடிதம்….!!

கன்னட திரையுலகின் சீரியல் நடிகையான சௌஜன்யா என்பவர் நேற்று காலை பெங்களூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட படத்திலும் நடித்துள்ள சௌஜன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதம் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதில் சௌஜன்யா தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சினிமாவிலும் சூழல் சரியில்லாமல் சிரமப்பட்டதாகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி…. சமந்தா கூறிய பதில்…. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி….!!

பிரபல நடிகையான சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப நாட்களாக வதந்தி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் சமூக வலைதளத்தில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் மும்பைக்கு இடம் மாற போகின்றீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சமந்தா “நான் ஹைதராபாத்தில் தான் இருக்கப் போகிறேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ பட ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் லுக் போஸ்டர்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

டைம் என்ன ஆச்சு பாருங்க மேடம்…. சூட்டிங்கிற்கு லேட்டா வாறீங்க ? நடிகை பதிலால் கம்முனு ஆன சூட்டிங் ஸ்பாட் …!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என்பதில் தொடங்கி தற்போது தர்ஷனுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவரைப் பற்றி தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்தபோது தயாரிப்பாளருக்கு ஏராளமான தொல்லைகளை இவர் கொடுத்துள்ளார். எப்போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வந்த இவரிடம் தயாரிப்பாளர் காரணம் கேட்டதற்கு தான் இருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பிற்கு வருவதற்கு தாமதம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

தனுஷ், அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ஷமிதாப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரித்விராஜின் ‘பிரம்மம்’… விறுவிறுப்பான டிரைலர் இதோ…!!!

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘லைகர்’ படத்தில் இணைந்த உலகப்புகழ் குத்துச்சண்டை வீரர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் தேவர்கொண்டாவின் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் பாக்ஸிங் வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சார்மி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிந்தி, தெலுங்கு ஆகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தளபதி66 படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இவரா? ரொம்ப பிஸியான நடிகர் ஆச்சே… OK சொல்லிடுவாரா..!!!

தளபதி66 படத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் விஜயின் தளபதி66 படத்திற்கான அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அவருக்கு எலும்பு இருக்குதா….? யாரையும் இப்படி பார்த்தது இல்ல…. மகேஷ் பாபு வியந்த பிரபல நடிகை…!!

தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட  இது கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இதனை பார்த்த பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில்  தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். @Sai_Pallavi92 sensational as always… does […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகிழ்ச்சியின் உச்சத்தில் நாக சைதன்யா…. ஒரே நாளில் ரூ.10,00,00,000…. கொரோனா காலத்தில் இவ்வளவு வசூலா….!!

லவ் ஸ்டோரி படம் வெளியான அன்றே 10 கோடி வசூல் செய்ததால் நாக சைதன்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி. சேகர் கம்முலா இயக்கிய இந்தப் படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட இந்த படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. முதல் நாளே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. […]

Categories

Tech |