இலங்கை அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடியதை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், ஒட்டுமொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடியது வைரலாகி வருகிறது. 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. […]
