டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]
