கார் விபத்திற்குப் பிறகு ரிஷப் பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ என்று விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிய நிலையில், அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றிக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டாலும், சரியான […]
