கிரீஸ் நாட்டில் பெர்சியஸ் என்ற பூனை 3 கால்களை இழந்ததால் செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில் பலரும் அதனை தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் கடந்த வருடம் நடக்க முடியாமல் கால்நடை மருத்துவமனைக்கு ஒரு பூனை அழைத்து வரப்பட்டது. எனவே பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து அந்த பூனைக்கு 3 கால்கள் பொருத்தினார்கள். டைட்டானியத்தை வைத்து கால்களின் உள் பாகங்கள் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெகிழியால் பாதங்களும் தயாரிக்கப்பட்டது.
அதன் பின்பு பூனைக்கு வெற்றிகரமாக கால்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து பெர்சியஸ், சுமார் 10 நொடிகளில் சாதாரணமாக நடந்துவிட்டது. எனவே, இதனை அறிந்தவுடன் பலரும் இந்த பூனையை தத்தெடுத்து வளர்க்க முன் வந்தனர். எனினும், பெர்சியஸிற்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், நானே அந்த பூனையை வளர்க்கிறேன் என்று கூறிவிட்டார்.