Categories
தேசிய செய்திகள்

இனி டிக்கெட் எடுக்க…. PHONE PAY, GOOGLE PAY தான்…. மத்திய அரசு அறிவுரை…!!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனைக்கான செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 வது கட்டநிலையில், ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தானது பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் பேருந்திலோ அல்லது இரயில் மூலமாக பயணிக்கும் போது முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உள்ளிட்ட விதிமுறைகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கையில், மீண்டும் ஒரு அறிவுரையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அது என்னவெனில், பேருந்தில் ஏறும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலும், முககவசம் அணிந்திருந்தாலும் ரொக்கப் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்குவதன் மூலம் கண்டிப்பாக கொரோனா பரவும் அபாயம் என்பது இருக்கிறது. எனவே பணத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்கு பதிலாக பண பரிமாற்றம் செய்வதற்கு பயன்படும் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தி பணத்தை டிரான்ஸ்பர் செய்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |