ஜெர்மன், கொரோனா பரவலின் நான்காம் அலையை எதிர்கொள்ள, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் நாட்டில் கடந்த சில நாட்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை 60% அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை, மேலும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான, ஜென்ஸ் ஸ்பான், நாட்டில் கொரோனா பரவல் நிலை கடந்த வாரத்தில் மோசமாகி இருக்கிறது.
எனவே நாடு, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய விதிமுறைகளை அறிவிப்பது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நாங்கள் எந்த விதியையும் நிராகரிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.