Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் விவகாரம்: தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுவில் பிழை இருப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தது.

இதனிடையே, டாஸ்மாக் விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனேவே இந்த விவகாரத்தில் பாமக, மக்கள் நீதி மய்யம், வைகோ ஆகியோர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், தேமுதிக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |