Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிமுக மகளிரணிச் செயலராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்… திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு..!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, ”மாவட்ட நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை. மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் யாரையும் அழைக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Image result for ஆட்சியர் உமா மகேஸ்வரி,

தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அதிமுக மகளிரணிச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்” என்றார். அவர் பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் அவதூறாகவும், கேலியாகவும் பரப்பப்பட்டு வந்தது. நேற்று வழக்கறிஞர் ஷேக் திவான் என்பவர், இதனை எதிர்த்து கொடுத்தப் புகாரின் பேரில் திமுக எம்.எல்.ஏ ரகுபதிக்கு எதிராக காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |