டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா ? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு பரபரப்புக்கு இடையே, எதிர்ப்புகளை கடந்து, தடையைத் தாண்டி, சட்டப்போராட்டம் நடத்தி தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தது. அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மதுபானக்கடை மூடுவது அரசின் வருவாயை பெருமளவு பாதிக்கப்படுகிறது என்ற வாதங்களை முன்வைத்து தான் மேல் முறையீட்டில் மதுக்கடையை தமிழக அரசு திறந்தது நமக்கு தெரியும்.
இந்த நிலையில்தான் மதுபான கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. மேலும் மதுபானத்துக்கு அரசு கூடுதல் விலை நிர்ணயித்து, மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் தான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள், ஒரு பாடலுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யபடுகிறது, ரசீதுகள் கொடுக்கப்படவில்லை, விலைப் பட்டியல் இல்லை என மனுத்தாக்களில் குறிப்பிட்டிருந்தார்.
இது நீதிபதிகள் சத்திய நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நிதிநிலை அறிக்கையில் அரசு நிர்ணயித்த விலை தான் மதுக்கடை இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் அந்த கடையின் விற்பனை உரிமத்தை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்ட நிலையில் நீதிபதிகள் குறுக்கிட்டு, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு தான் விற்கப்படுகிறதா? மதுபானங்களின் விலை பட்டியல் டாஸ்மார்க் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள்ளதா ? என்ற கேள்வி எழுப்பினார். மேலும் மதுபானங்களை மதுபான ஆலைகளில் கொள்முதல் செய்யும்போது தரமான தான் என்று சோதித்து வாங்கப்படுகிறதா ? எதன் அடிப்படையில் வாங்கப்படுகிறது ? என்பதையும் ஒரு விரிவான அறிக்கையாக ஜூன் 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு மதுபான விலையை உயர்த்தி இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதால் அரசுக்கு இது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு குறித்து எந்த மாதிரியான விளக்கம் கொடுக்கலாம் என ஆனாலும் அரசு புலம்ப ஆரம்பித்துள்ளது.