Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. எங்களுக்கு கட்டுப்படி ஆகல…. சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டமடைந்த விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், நூல்கோல், கேரட், பீன்ஸ் மற்றும்  வெள்ளைப்பூண்டு போன்றவற்றை விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு அதனை சாகுபடி செய்கின்றனர். இவற்றில் கடந்த சில மாதங்களாக கேரட் கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் பயிரிடப்பட்ட இந்த கேரட் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கேரட் கிலோவுக்கு 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், விளைநிலங்களில் இருந்து அறுவடை செய்த கேரட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் வாகன வாடகை கூலிக்கு கூட வருமானம் கிடைப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதால் அறுவடை செய்த கேரட்டுகளை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்குவதாகவும், விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |