மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாக்கிகள் வசூலாகி பணவரவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். அதே போல நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதங்கள் , நெருப்பு போன்றவற்றைக் கையாளும் பொழுது பொறுமையாகவும் , கவனமாகவும் கையாளுங்கள்.
அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். அதனால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் மட்டும் கல்வியில் கவனமாக பாடங்களை படியுங்கள். பாடங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்