Categories
தேசிய செய்திகள்

பஞ்சரான கார்… “யார் உதவியுமின்றி தனி ஆளாக டயரை மாற்றிய மாவட்ட துணை ஆணையர்”… வைரலாகும் வீடியோ…!!

மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை யாருடைய உதவியும் இல்லாமல் தானே மாற்றும் வீடியோவானது தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி தனது வேலை சம்மந்தமாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் டயர் திடீரென்று பஞ்சராகியுள்ளது. இந்நிலையில் அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே  ஜாக்கி, ஸ்பேனரை பயன்படுத்தி காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் மேடம் நீங்கள் மைசூர் டிசி ரோஹினி சிந்தூரி தானே? என்று அவரிடம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் பதிலளிக்காமல் தனது வேலையில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த நபர் மீண்டும் அவரை மேடம் மேடம் என்று அழைத்த பிறகு சிரித்த முகத்துடன் திரும்பி பதில் அளித்துள்ளார் ரோகிணி.  ஒரு காரின் டயரை மாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஜாக்கி மூலம் வாகனத்தை தூக்கி போல்டை  அகற்றி புதிய டயரை மாற்றுவது மிகவும் கடினமான விஷயம் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஒரு பெண் மாவட்ட துணை ஆணையர் அந்த கடினமான வேலையை செய்துள்ளார் என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீடியோ சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |