கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரும் பதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி மூன்று பேர் காரில் சென்றுள்ளனர். இவர்களின் காரானது பெரும் பதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் காரில் சென்றுள்ளது. அப்போது கார் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதானால் கார் தலைகுப்புற பள்ளத்தினுள் கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் காரில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டதால் அந்த 3 பேரும் லேசான காயங்களுடன் தப்பித்து விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.