Categories
தேசிய செய்திகள்

ரூ. 11 லட்சத்துக்கு வாங்கிய கார்…. பழுது பார்க்க ரூ. 22 லட்சமா….? கண்ணீர் வடிக்கும் உரிமையாளர்கள்….!!!!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்ததால் நகரை வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள பல்வேறு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்துமே தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களிலும், விடுதிகளிலும் தங்கினர். அதோடு கார்கள் தண்ணீரில் மிதந்தது. இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளதால் தற்போது பல்வேறு நபர்கள் தங்களுடைய கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்புபவர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் என்றே கூறலாம். இது குறித்து அனிரூத் என்பவர் தன்னுடைய இணையதள பக்கத்தில் கூறியுள்ளார். அதாவது அவர் 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய காரை ரிப்பேர் செய்வதற்கு 22 லட்சம் ரூபாய் ஆகியுள்ளது. மேலும் 22 லட்சம் ரூபாய்க்கு புதிதாக 2 காரை வாங்கி இருக்கலாம் என அவர் வருத்தப்படுகிறார்.

Categories

Tech |