ஏமனில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது வெடிகுண்டு இருக்கும் வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமனின் ஏடன் எனும் நகரத்தில் பாதுகாப்பு படையினரினுடைய வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வெடிகுண்டுகள் இருக்கும் வாகனம், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியது.
இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் மற்றும் பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலை மேற்கொண்டது யார்? என்பது தற்போது வரை தெரியவில்லை.
எனினும், ஏடன் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரும், அல்கொய்தா அமைப்பினரும் அவ்வபோது தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அங்கு தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.