மருத்துவமனை வளாகத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் லோகர் மாகாணத்தில் தலைநகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பில் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்கள், மருத்துவமனை கட்டிடம் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டு விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பலர் நோன்பு துறப்பதற்காக பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுதிவிட்டு அருகில் உள்ள மருத்துவமனையின் வளாகத்தில் இருந்த சிறிய உணவகத்தில் உணவருந்த வந்தவர்கள் ஆவர்.