கமுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் பத்திர எழுத்தாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அபிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பத்திர எழுத்தாளர் ஆக பணி செய்கிறார். நேற்று பார்த்திபனூர் என்னும் இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கமுதி நோக்கி ஒரு கார் வந்தது. இவர் குடமுருட்டி ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது.
இதில் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு வந்த ராமநாதன் படுகாயாமடைந்து அங்கேயே பலியானார். அதோடு பைக் காரில் மோதியவுடன் தீப்பிடித்து எரிந்தது. காரை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து அபிராமம் காவல் நிலையத்தில் பலியான ராமநாதனின் அண்ணன் நாகேஸ்வரன் புகார் அளித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி விபத்து தொடர்பாக விசாரித்து வருகிறார்.