Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான கார்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சாலையில் கவிழ்ந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 5 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியரான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபர்ணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அகான்ஷா மற்றும் அக்சரா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அனில் குமார் தனது மனைவி, மகள்கள் மற்றும் உறவுக்கார பெண் ரம்யா ஆகியோருடன் சென்னைக்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பிறகு சாலையின் நடுவில் இருக்கும் சுவரை இடித்து கொண்டு கார் கவிழ்ந்து விட்டது.

மேலும் கவிழ்ந்து கிடந்த கார் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அக்சரா, ரம்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். அதன்பின் படுகாயமடைந்த அனில்குமார், அபர்ணா, அகான்ஷா மற்றும் மற்றொரு காரில் பயணித்து படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்சரா, ரம்யா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |