இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ பிரசன்னா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் நண்பர் வீட்டிற்கு காரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சுப்ரமணியனின் கார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஜோஸ் என்பவர் ஓட்டி சென்ற காரானது சுப்பிரமணியனின் கார் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணித்த 6 பேர் படுகாயமடைந்தனர். அதன்பின் படுகாயம் அடைந்த 6 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.