பிரித்தானியாவில் கார் மோதியதில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இங்கிலாந்தில் உள்ள எண்டோன் சாலையில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் நடந்து சென்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீதும் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. அதில் அந்த 6 வயது சிறுமி பேச்சு மூச்சு இல்லாமல் தந்தை கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமியின் தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்த காரை ஓட்டி வந்தவருக்கும் தலையில் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் ஒரு புதிராகவே இருந்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி அல்லது நேரில் கண்ட சாட்சிகள் யாராவது இருந்தால் உடனடியாக காவல்துறையினரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.