இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் புதிய சாதனையை படைத்துள்ளார் .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்சில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .இந்த வெற்றி கேப்டன் ஜோ ரூட்க்கு 27-வது வெற்றியாகும்.
இதற்கு முன்னதாக மைக்கேல் வாகன் தலைமையிலான இங்கிலாந்து அணி மொத்தம் 51 டெஸ்ட் போட்டிகளில் 26 வெற்றியும் , அடுத்ததாக ஆண்ட்ரூ ஸ்டாரஸ் தலைமையிலான அணி 50 போட்டிகளில் 24 வெற்றியும் , அலைஸ்டர் குக் தலைமையிலான அணி 59 டெஸ்ட் போட்டிகளில் 24 வெற்றியும் மற்றும் பீட்டர் மே தலைமையிலான அணி 41 டெஸ்ட் போட்டியில் 20 வெற்றியும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது .தற்போது கேப்டனாக இருக்கும் ஜோ ரூட் அதிக வெற்றியை தேடிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.