Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகும் கோலி …. புதிய கேப்டன் யார் ….? வெளியான தகவல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டிக்குபிறகு கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை குறித்து விராட் கோலி அறிவிக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் இவர் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தனது பேட்டிங்கில்  கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மாவுக்கு வழங்க  இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

அதேசமயம் டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார் என்றும், தற்போது நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு பதவி விலகல் முடிவை அவர் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அத்துடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை 95 போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது .மேலும் ஒரு போட்டி டிராவிலும்  மற்றும்  2 போட்டிகளில் முடிவு இல்லை.

Categories

Tech |