விராட் கோலி கேப்டன் பதிவிலிருந்து விலகுவது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கூடிய விரைவில் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியது .மேலும் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது இந்த நிலையில் விராட் கோலி பதவியில் இருந்து விலகுவது தொடர்பான வதந்தியை பிசிசிஐ மறுத்துள்ளது .
இதுகுறித்து பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் கூறும்போது,” இவையெல்லாம் அபத்தமானவை .அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை .ஊடகங்களில் மட்டுமே இதுபற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றது .அத்துடன் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான தனித்தனி கேப்டன்களை நியமிப்பது குறித்து பிசிசிஐ விவாதிக்கவில்லை .இதனால் மூன்று வடிவிலான போட்டியிலும் விராட் கோலி கேப்டனாக நீடிப்பார் “என்று அவர் கூறியுள்ளார்.