நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் வைத்து தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்திடம் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டிருந்தார்.
இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தேமுதிக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார். இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்த நிலையில் தேமுதிக ஆதரவு கொடுத்துள்ளது .