தேமுதிகவை எந்த கட்சியுடனும் கம்பர் பண்ணாதீங்க என்று அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் ,
பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சிக்கு அதிக இடம் , பாஜகவுக்கு அதிக இடம் தேமுதிகவுக்கு மட்டும் குறைவான இடம் என்று எந்த கட்சியும் கம்பர் பண்ணாதீங்க. எங்க பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் பிரச்சாரம் வந்தாங்க பாத்தீங்கள்ளா எங்க பலத்தை.தமிழகமே பார்த்தது தேமுதிகவின் பலத்தை. அதனால் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கேட்கும் சதவீத இடத்தை கூட்டணி கட்சியினர் கண்டிப்பாக தருவார். நாங்களும் வாங்குவதாக உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் சிறந்த முறையில் செயல்பட தயாராக உள்ளோம்.