இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதல் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தொடரை வெல்லும் சாதகம் அதிகமிருக்கும். எனவே இப்போட்டியில் வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் எனத் தெரிகிறது.
இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தொடக்க வீரர் தவான் திரும்பியுள்ளதால் இந்தப் போட்டி இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திடீரென போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்க தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ராகுல், தவான், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் தூபே, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, பும்ரா.
இலங்கை அணி விவரம்: மலிங்கா (கேப்டன்), குசால் பெரேரா, குணதிலகா, அவிஸ்கா ஃபெர்னாண்டோ, ஒசாடா ஃபெர்னாண்டோ, பனுகா, தனஞ்செயலா டி சில்வா, ஷனகா, ஹசரங்கா, லஹிரு குமாரா.
Captain @imVkohli has won the toss and elects to bowl first in the 1st @Paytm T20I against Sri Lanka.#INDvSL pic.twitter.com/V2a6ujWHrK
— BCCI (@BCCI) January 5, 2020