Categories
உலக செய்திகள்

நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் கேப்ஸ்டோன் செயற்கைகோள்…. சாதனை படைத்த நாசா…!!!

ஆறு தினங்களுக்கு முன் நாசா அனுப்பிய 25 கிலோ எடைடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா என்னும் அமெரிக்க விண்வெளி மையமானது, சுமார் 25 கிலோ எடை உடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆறு தினங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது, பூமியினுடைய சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து, தற்போது நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

நிலவிற்கு அந்த செயற்கைகொள் சென்றடைய நான்கு மாத காலங்கள் ஆகும் என்று கூறப்பட்டிருக்கிறது. நாசா கேட்வே என்னும் விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் ஏற்படுத்த முடிவெடுத்தது.

இந்த புதிய சுற்றுப்பாதையின் மூலமாக எரிபொருளுக்கான பயன்பாடு குறைந்திருக்கிறது. மேலும், பூமியோடு விண்வெளி நிலையம் அல்லது செயற்கைக்கோள் தொடர்பிலிருந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |