மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் செழித்து வளரும். பணவரவு சிறப்பாக இருக்கும். பணபரிவர்த்தனை நன்றாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும். இன்று நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.
தடை பட்ட காரியத்தில் இருந்த தடை நீங்கும். செல்வமும் செல்வாக்கும் உங்களுக்கு கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களுடைய பொறுமையும் நிதானமும் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். திருமண முயற்சிகளை இன்று நீங்கள் மேற்கொள்ளுங்கள். அனைத்துமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்